Wednesday, 20 August 2008

இசையரசியும் தாலாட்டும் - பாகம் 2

இசையரசியும் தாலாட்டும் - பாகம் 2

தாலாட்டு என்ன குழந்தைக்கு மட்டும் சொந்தமா
இல்லை என்கிறார் ஒரு கணவர். ஆம் ஆதர்ஸ மனைவி கணவனுக்காக பாடும் தாலாட்டாக ஒரு பாடல். எந்த பாடல் என்று யூகிக்கமுடிகிறதா ம்ம்ம்

"நீ மதி சல்லகா சுவாமி நிதுரபோ" என்ற தெலுங்குப்பாடல் அது

பிரபல ஹிந்திப்பாடலான கில்தேஹை குல் யஹான் மெட்டை தமிழிலும் தெலுங்கிலும் பாடியவர் இசையரசி

தமிழில் ராதையின் நெஞ்சமே , தெலுங்கில் நீ மதி சல்லகா. ஹிந்தியில் லதா காட்டிய அதே இனிமையை இசையரசி தமிழிலும் தெலுங்கிலும் மேலும் ஒரு படி கூடியாவறு பாடியிருப்பார்

அன்பான மனைவி ஜமுனா தன் கணவர் என்.டி.ஆரை தூங்கச்செய்யும் பாடல் இது

கண்டு மகிழுங்கள்





தாய் தாலாட்டு பாடுவது இயல்பு. கல்யாணமாகாத பெண் தாலாட்டு பாடுவதென்றால் எப்படி. அப்படி ஒரு சூழல்தான் இங்கே ஒரு பெண்ணுக்கு. கல்யாணம் ஆகவில்லை ஆனால் தன் காதலனின் பிள்ளை என்று சொல்லிக்கொண்டு ஒரு பையன் வந்து நிற்க தன் காதலனின் மீது கொண்ட நம்பிக்கையால் அவனுக்கு உதவ அப்படித்தான் அந்த பையனை தன் வீட்டிற்கு தன் காதலன் கொண்டுவந்து விட அவனது சுட்டித்தனத்தை சமாளித்து அவனை தூங்கச்செய்கிறாள் இந்த பெண். அப்படி ஒரு குறும்பான தாலாட்டு தான் " தந்தை யாரோ தாயும் யாரோ " என்ற யார் பையன் திரைப்படப்பாடல். சாவித்திரியும் டெய்ஸி ராணியும் அழகாக நடித்திருப்பர். இசையரசி குறும்பு குறையாமல் பாடியிருப்பார் அதுவும் "தூங்குடா"என்று சொல்லும் அந்த செல்ல்க்கோபம் அழகோ அழகு.

படம்: யார் பையன்
இசை: சலபதிராவ்
வரிகள் : மருதகாசி

http://psusheela.org/audio/ra/tamil/...aresong023.ram


தாய்மை உணர்வு அற்புதமானது. ஒவ்வொரு தாயும் எந்த சூழலிலும் தன் பிள்ளைகளின் நலனைப்பற்றியே
சிந்திப்பாள். இங்கும் அப்படித்தான் ஒரு தாய் இருக்கிறாள். ஆம் மன நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருக்கும்போதும் அவள் நினைவெல்லாம் தன் பிள்ளையை சுற்றியே அவனுக்கு தாலாட்டு பாடுவதாக இங்கே அழகான தாலாட்டை பாடுகிறாள். இசையரசியின் குரலில் பாடலை கண்டு மகிழுங்கள்

" முத்துலா மா பாபு"
ஜீவன ஜோதி என்னும் திரையில் ஒலிக்கும் பாடல் இது. வாணிஸ்ரீ பிரமாதமாக நடித்த படம் இது.



மலையாள திரையில் எத்தனையோ இனிமையான தாலாட்டுப்பாடல்கள் உள்ளன அவற்றில் இதுவும் முக்கிய ஒன்றாகும்.
சலீல் செளத்ரியின் இசையில், வயலாரின் வரிகளை இசைக்கிறார் இசைக்குயில் ராகம் திரைப்படத்திற்காக.

இவர்கள் மூவரும் சேர்ந்து பாடலை இனிமையாக்குகிறார்கள் என்றால் அளவான அழகான நடிப்பார் ஊர்வசி சாரதா திரையில் மெருகேற்றுகிறார்.

" ஓமன திங்கள் பக்ஷி " என்ற பாடல் தான் அது. இந்த இனிமையன மெட்டுக்கு எந்த மனமும் கண்மூடத்தானே செய்யும்

http://www.youtube.com/watch?v=33x_pOHxdzk

Friday, 8 August 2008

உறவு வரும் ஒரு நாள் பிரிவு வரும்



மணிமண்டபம் படத்தில் சுசீலாம்மாவின் கொஞ்சும் குரலில் ஓர் பழைய்ய்ய்ய்ய்ய்ய இனிமையான அற்புதமான வரிகளில் இந்த பாடல் ரொம்ப நாள் கழித்து எனக்கு கிடைத்தது நானும் ரொம்ப நாள் கழித்து இந்த தளத்தில் பதிகின்றேன் இசைப்பிரியர்கள் கேட்டு மகிழுங்கள்.

படம்: மணிமண்டபம்
பாடியவர்: பி.சுசீலா
இசை: ஸ்வரப்ரம்மா கே.வி.மஹாதேவன்

போட்டோ உதவி : நன்றி, இண்டியாக்ளிட்ஸ்.காம்

Get this widget | Track details | eSnips Social DNA



உறவு வரும் ஒரு நாள் பிரிவு வரும்
ஹ ஹ ஹ் ஹஹஹஹ

உறவு வரும் ஒரு நாள் பிரிவு வரும்
வரவு வரும் வழியில் செலவு வரும்
உறவு வரும் ஒரு நாள் பிரிவு வரும்

பகலும் வரும் உடனே இரவு வரும்
பகலும் வரும் உடனே இரவு வரும்

பழக வரும் துணையும் விலகி விடும்
பழக வரும் துணையும் விலகி விடும்

உறவு வரும் ஒரு நாள் பிரிவு வரும்

ஆசையிலே சிலநாள் அவதியிலே சிலநாள்
ஆசையிலே சிலநாள் அவதியிலே சிலநாள்
காதலிலே சிலநாள் கவலையிலே சிலநாள்
காதலிலே சிலநாள் கவலையிலே சிலநாள்

தாழ்வதோ சிலநாள் மனம் வாடுவதே பலநாள்
தாழ்வதோ சிலநாள் மனம் வாழடுவதே பலநாள்

உறவு வரும் ஒரு நாள் பிரிவு வரும்

சென்றதெல்லாம் வருமோ அதை சிந்தனை தான் தருமோ
வந்ததை யார் தடுப்பார் இனி வருவதை யார் மறுப்பார்

உறவு வரும் ஒரு நாள் பிரிவு வரும்

இமைகளை மூடிடுவோம் ..ஓஓஓஓஓஓஒ
துயர்களை மூடிடுவோம் ஆஆஆஆஆ
இமைகளை மூடிடுவோம் துயர்களை மூடிடுவோம்

மறுபடியும் விழித்தால் மனிதரைப் போல் பிறப்போம்
மறுபடியும் விழித்தால் புதுமனிதரைப் போல் பிறப்போம்

உறவு வரும் ஒரு நாள் பிரிவு வரும்
பழக வரும் துணையும் விலகி விடும்
உறவு வரும் ஒரு நாள் பிரிவு வரும்

Wednesday, 6 August 2008

கதாநாயகி வரிசை: "ஊர்வசி" சாரதா

வேறெந்த நடிகைக்கும் முன்னால் ஊர்வசி என்ற பட்டம் இருக்கிறதா என்றால் இல்லை என்பதே விடை. ஒன்றல்ல...இரண்டல்ல.. மூன்று முறை ஊர்வசி விருது வாங்கிய ஒரே நடிகை சாரதா. அந்த ஊர்வசி விருது இப்பொழுது சிறந்த நடிகைக்கான தேசியவிருது என்றழைக்கப்படுகிறது.

தமிழில் இவர் குறைந்த படங்களே நடித்திருந்தாலும் மலையாளத்திலும் தெலுங்கிலும் நிறையப்படங்கள் நடித்திருக்கிறார். அவர் வாங்கிய ஊர்வசி விருது இரண்டு மலையாளத்திலும் ஒன்று தெலுங்கிலும்.

இவர் நடித்த மிகப்பிரபலமான படமென்றால் அது துலாபாரம். அனைத்து மொழிகளிலும் வெற்றி பெற்ற இந்தப் படம் ஒரு துரதிருஷ்டமான பெண்ணின் கதையைச் சொல்வது. "பூஞ்சிட்டுக் கண்ணங்கள் பொன்மணி தீபத்தில் பால் பொங்கல் பொங்குது பன்னீரிலே" என்ற மிக அழகான பாடல் இசையரசி மற்றும் ஏழிசை வேந்தர் டி.எம்.சௌந்தரராஜன் குரலிலும் அருமையாக அமைந்திருக்கிறது.

இவருக்காக தமிழ், தெலுங்கு, மலையாளம் என்று அனைத்து மொழிகளிலும் இசையரசி பாடியிருக்கிறார். அவைகளில் சில பாடல்களை இங்கே பார்க்கலாம்.

திரையிசைத்திலகம் கே.வி.மகாதேவன் இசையில் வெளிவந்த கவியரசர் பாடல் இது. குங்குமம் படத்தில் இடம் பெற்ற "தூங்காத கண்ணென்று ஒன்று" பாடலின் இனிமையை எப்படிச் சொல்வது. தூங்காத கண்ணைப் பற்றிச் சொல்லித் தூங்க வைக்க இசையரசியின் குரல் எப்படிப் பொருந்தி வருகிறது. கேட்டும் பார்த்தும் ரசியுங்கள்.



அடுத்த பாடல் தெலுங்குப் பாடல். இதில் இசையரசியோடு மற்றொரு இசைக்குயிலான எஸ்.ஜானகி அவர்கள் பாடியிருக்கிறார்கள். கார்த்திகை தீபம் என்ற படத்தில் இடம் பெற்ற இந்தப் பாடலுக்கு இசை சக்கரவர்த்தி. இதே படத்தைத் தமிழில் கற்பூரதீபம் என்று எடுத்த பொழுது இதே பாட்டை கங்கையமரன் பயன்படுத்தியிருக்கிறார். அதில் இசையரசி பாடியிருப்பது நடிகை அம்பிகாவிற்காக.



அடுத்த பாடல் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில். அதுவும் தமிழில். நடிகர் திலகம் நடித்த ஞானவொளி திரைப்படத்தில் மணமேடை மலர்களுடன் தீபம் என்று காதலனோடு சுகித்துக் களிக்கும் பெண்ணிற்காக பாடியிருக்கிறார் இசையரசி பி.சுசீலா. விரகம், காதல், துன்பம், இன்பம் அனைத்தும் கலந்து பாடியிருக்கும் இந்தப் பாடலையும் கேட்டு ரசியுங்கள்.



அன்புடன்,
ஜிரா (எ) கோ.இராகவன்

Monday, 4 August 2008

கதா நாயகி வரிசை:நவ்யா நாயர்

கதா நாயகி வரிசை: 8

நவ்யா நாயர். மிகவும் அழகான நடிக்கத்தெரிந்த நடிகை. சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி, அமிர்தம், மாயக்கண்ணாடி என எல்லாவற்றிலும் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்

இதோ இசையரசி சமீபத்தில் பாடிய அழகான பாடல்

நவ்யா நாயருக்கும் இசையரசி பாடிவிட்டார் ஆம் சில நேரங்களில் என்ற திரையில் ஸ்ரீகாந்த தேவாவின் இசையில் வைரமுத்துவின் வரிகள். அதே இனிமை அதே மென்மை ..

பொட்டு வைத்த முகத்தை
தொட்டு வைத்த தலைவா
உனக்கொரு உனக்கொரு கோரிக்கை
தொட்டு வைத்த முகமும்
விட்டு வைத்த அழகும்
உனக்கென்று உனக்கென்று காணிக்கை
காதலை தொடர்ந்தே திருமணம் நடக்கும்
திருமணம் நமக்கே காதலின் தொடக்கம்
இதயம் ஒன்று தான் இருவருக்கும்
உயிரென்று நினைத்தேன் உங்களை
உங்களுக்கு தருவேன் கண்களை


பொட்டு வைத்த முகத்தை
தொட்டு வைத்த தலைவா
உனக்கொரு உனக்கொரு கோரிக்கை


தலைவன் தந்த பூக்களை
தலையில் எடுத்து சூடுவேன்
மலர்கள் தந்த கைகளை
மார்பில் எடுத்து சூடுவேன்
என் சேலை போர்வை கொண்டு
உன்னை தூங்க செய்குவேன்
என் கூந்தல் ஈரம் கொண்டு
உனது தூக்கம் போக்குவேன்
உன் அசைவுகள் இடுகின்ற ஆணைக்கும்
இசைவுகள் தெரிவித்து வாழுவேன்

பொட்டு வைத்த முகத்தை
தொட்டு வைத்த தலைவா
உனக்கொரு உனக்கொரு கோரிக்கை
தொட்டு வைத்த முகமும்
விட்டு வைத்த அழகும்
உனக்கென்று உனக்கென்று காணிக்கை

தரியில் நெருங்கும் நூல்களோ
தரிக்கும் ஆடை ஆகுமே
உறவில் நெருங்கும் காதலோ
யுகங்கள் வரையில் வாழுமே

உன் பேரை சொல்லிடும்போதே
உயிரில் பாசம் ஊருமே
ஜென்மங்கள் மாறிய போதும்
ஜீவன் உன்னை சேருமே
இருதயம் பெருகிய நன்றியை
என் இருவிழி அருவிகள் காட்டுமே

பாடலை பார்த்து மகிழுங்கள்