Tuesday, 19 June 2007

05.ஆசையிலே பாத்தி கட்டி நாத்து ஒன்னு நட்டு வெச்சேன்

P.சுசீலாவின் பாடல்களில் அவ்வளவாக நாட்டுபுற மெட்டுகள் அமைந்ததில்லை என்று வெகு நாட்களாக எனக்கு ஒரு எண்ணம் இருந்து வந்தது. சுசீலா என்றாலே மேல் தட்டு மக்களின் பாடகி என்றுதான் நினைத்து வந்தேன். அவரின் குரலில் உள்ள வளமையும் செரிவும் கேட்டாலே ஏதோ ஒரு பெரிய நகரில் ஒரு ஏ.சி அறையில் நாகரிக பெண்மனி பாடும் காட்சி தான் மனத்திறையில் தோன்றும்.ஆனால் அது எவ்வளவு தவறு என்று எனக்கு உணர்த்திய பாடல் இது. கிராமத்து ராஜா இளையராஜாவின் அருமையான நாட்டுப்புற மெட்டில் அமைந்த அழகான தமிழ் பாடல் இது. பாடலின் தாளமும் இசை அரசியின் பாவமும்,இனிமையான குரலும் உங்களை வேறு ஏதோ உலகிற்கு எடுத்து சென்றுவிடும். உங்களிடம் நல்ல ஹெட்போன் இருந்தால் அதை அணிந்து கொண்டு அமைதியான ஒரு சூழலில் கேட்டு பாருங்கள். நான் சொல்வது உங்களுக்கு புரியும்!! :-)

ஆசையிலே பாத்தி கட்டி : படம் - எங்க ஊரு காவக்காரன் : இளையராஜா



Get this widget | Share | Track details

7 comments:

  1. ராகவன்,
    நல்ல பாடல்..
    இரண்டாவது சரணத்தில் வரும் இந்த வரி எனக்கு பிடித்த ஒன்று

    "ஏஞ்சாமி நா காத்திருக்கேன்"

    "ஏஞ்சாமி" ன்னு உச்சரிப்பு அழகா இருக்கும். இதற்காகவே இந்த பாடலை பல முறை கேட்டிருக்கிறேன்

    ஜானகியின் பாடல்களைப் பற்றிய என் முதல் பதிவு
    http://thaalaattumpoongaatru.blogspot.com/2007/06/blog-post.html

    நன்றி

    ReplyDelete
  2. சுசீலா நாட்டுப்பாடல்கள் பாடவில்லையா.

    கிராமச் சூழலில் நிறையப் படங்கள் வந்திருக்கின்றன.அதில் ஏதாவது பாடி இருப்பார் என்றுதான் நினைக்கிறேன்.
    நாட்டுப்புறத்தை நாட்டுப்புறமாகவெ காட்டும் படங்கள் 80களில் நிறையவந்திருக்கின்றன.
    அப்போது ஜானகி அம்மா பாடல்கள்தான் அதிகம்.

    இந்தப் பாடல் உணர்ச்சிகள் போட்டிப் போட்டுக் கொண்டு வார்த்தைகளில் வருவது மாதிரி இருக்கும்.நன்றி சி.வி.ஆர்.

    ReplyDelete
  3. @ஸ்ரீசரண்
    வாங்க ஸ்ரீசரண்!!
    உங்களுடைய ஜானகி அம்மா பதிவுக்கு போய் பாத்தேன்!!
    மிக நல்ல முயற்சி!
    வாழ்த்துக்கள்!! :-)

    @வல்லிசிம்ஹன்
    நீங்க சொல்லுறது சரிதான்,ஆனால் எனக்கு அந்த மாதிரி ஒரு தப்பான கண்ணோட்டம் இருந்தது!!! அதை மாற்றிய பாடல்களில் இந்த பாடல் முதன்மையானது!! :-)
    வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி!! :-)

    ReplyDelete
  4. சிவிஆர். உன்னுடைய கருத்து தவறு என்பதற்கு 50களிலிருந்தே எடுத்துக்காட்டுகள் சொல்ல முடியும். இருந்தாலும் இளையராஜா பாட்டு என்பதால் இளையராஜாவிடமிருந்தே தொடங்கலாம்.

    அன்னக்கிளி படத்துல சொந்தமில்லை பந்தமில்லை வாடுது ஒரு பறவைன்னு ஒரு பாட்டு. கிராமத்துச் சோகம்.

    பதினாறு வயதினிலே....ஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஎ...செவ்வந்திப் பூ முடிச்ச சின்னக்கா...சேதி என்னக்கா....

    இப்போதைக்கு இது போதும்...

    இந்தப் பாட்டும் ரொம்ப நல்ல பாட்டு. எனக்கும் ரொம்பப் பிடிக்கும்.

    ReplyDelete
  5. @ஜிரா
    என் எண்ணம் தவறெனெ உணர்ந்து கொண்டேன் என்று அதான் பதிவிலேயே சொல்லிவிட்டேனே ஜிரா!!
    அதற்கான நீருபனமாகத்தான் இந்த பாட்டை பதிவிட்டிருக்கிறேன்!! :-)

    ReplyDelete
  6. ராகவன் சொன்னது போல சுசீலா நாட்டுப்புற பாடவில்லை என்று சொல்வது தவறான ஒன்று

    ஒரு சிலவற்றை இங்கே குறிப்பிடுகிறேன்

    1. குறிஞ்சியிலே பூ மலர்ந்து குலுங்குதடி தன்னாலே
    2. சித்தாட கட்டிக்கிட்டு
    3. தேரு பாக்க வந்திருக்கும் சித்திரப் பெண்ணே (இதில் இனிக்க இனிக்க நெனச்சு என்ற வரியை பாடி அவர் இழுக்கும் அந்த சங்கதி அடேயப்பா ஒரு கிரமாத்து பெண் எப்படி இழுத்து சொல்வாளோ அதே போல் செய்திருப்பார்)
    4.மல்லுவேட்டி மடிச்சு கட்டும் மச்சான் ஒரு மயிலக்காளே
    5.ஆத்துலே மீன் பிடிச்சு ஆண்டவனே உன்ன நம்பி

    இது சில துளிகள் தான் இப்படி எல்லா வகையான பாடல்களையும் பாடிய
    பெருமை சுசீலா அவர்களையே சேரும்

    ReplyDelete
  7. அருமையான பாட்டு, இந்தப் பாட்டைக் கொஞ்சம் ஜில்பா பண்ணி தேவா சார் " ஆடியிலே தேதி வச்சு சேதி சொன்ன மன்னவரு தான் " என்ற பாடலை சித்ரா பாட என் ஆசை மச்சான் படத்துக்காகப் போட்டிருப்பார்.

    ReplyDelete