இசையரசி என்றால் அது என்னைப் பொருத்த வரையில் பி.சுசீலா அவர்கள்தான். அவருடைய குரலைக் கேட்டுதான் இசையின் இன்பத்தைப் பெரிதும் உணர்ந்திருக்கிறேன். அந்த அன்பிற்குச் செலுத்தும் சிறிய பரிசுதான் இந்த வலைப்பூ. அவரது பாடல்களை மக்களுக்கு வலைப்பூ வழியாக எடுத்துச் சொல்லும் ஒரு முயற்சி. இதற்கு உங்கள் அனைவரின் ஆதரவையும் வேண்டுகிறேன்.
அன்புடன்,
கோ.இராகவன்
கலக்குங்க தல!!
ReplyDeleteநான் எப்பவுமே ஆஜர் ஆகிடுவேன்!!
நீங்க நடத்துங்க! :-D
தங்கச்சியும் இருக்கேன் அண்ணா.
ReplyDeleteஎனக்கும் பி.சுசீலா என்றால் மிகவும் பிடிக்கும்
சுசீலா அம்மாக்கு இல்லாத ஆதரவா.,ராகவன்.
ReplyDeleteஅவங்களையும்,ராஜா,டி.எம்.எஸ்.சார்,பி.பி.ஸ்ரீனிவாஸ்,ஏ.எல்.ராகவன்,ஜானகி,
இவர்கள்தான் எங்களுக்குத் தெரிந்த உலகம் .
முதலாக வரும் சுசீலாவுக்காகக் காத்திருக்கிறேன்.
// CVR said...
ReplyDeleteகலக்குங்க தல!!
நான் எப்பவுமே ஆஜர் ஆகிடுவேன்!!
நீங்க நடத்துங்க! :-D //
நீயும் இந்த ஜோதியில் ஒன்றுதானே. :) நீயும் சேந்துதான் நடத்தனும்.
// துர்கா|†hµrgåh said...
தங்கச்சியும் இருக்கேன் அண்ணா.
எனக்கும் பி.சுசீலா என்றால் மிகவும் பிடிக்கும் //
வாம்மா. உனக்கும் அழைப்பு வரும். நீயும் ஜோதியில் கலக்க வேண்டியதுதான். இசைவேள்வியில வேள்விக்கூடம் நான். அதிலிடும் பொருட்கள் சிவிஆர். நெய் நீ. இப்பிடி வேள்வி நடத்தி இசையரசியின் குரலெனும் சுடரின் புகழ் பெருக்கலாம். :) சரிதானா?
// வல்லிசிம்ஹன் said...
ReplyDeleteசுசீலா அம்மாக்கு இல்லாத ஆதரவா.,ராகவன். //
வாங்க வல்லியம்மா. உங்க ஆதரவு உண்டுன்னுதான் தெரியுமே. :)
// அவங்களையும்,ராஜா,டி.எம்.எஸ்.சார்,பி.பி.ஸ்ரீனிவாஸ்,ஏ.எல்.ராகவன்,ஜானகி,
இவர்கள்தான் எங்களுக்குத் தெரிந்த உலகம் .
முதலாக வரும் சுசீலாவுக்காகக் காத்திருக்கிறேன். //
செய்யனும் அம்மா. ஒவ்வொன்னா செய்யனும். அடுத்து மெல்லிசை மன்னருக்கு ஒரு வலைப்பூ. கொஞ்ச நாள் கழிச்சு.
எனக்கு ஜானகி தானுங்க எல்லாம்.
ReplyDeleteசுசீலாவும் ரொம்ப பிடிக்கும்.
தேடிப்பிடிச்சு, கலக்கலான பாடல்கள கொடுங்க.
"கற்பூர பொம்மை ஒன்று", "லாலி லாலி", "மாலைப் பொழுதின் மயக்கத்திலே", "என்ன நினைத்து என்னை" மாதிரி.
ராகவா!
ReplyDeleteஎன்றும் அவர் எங்கள் இன்னிசையரசியே! அதற்கு மறுப்பிரா?
திருவிளையாடல் "நமச்சிவாய வாழ்க!"
எந்த வாத்தியமும் இல்லாமல் குரலாலே சிறப்பித்தவர்.
வாழ்த்துக்கள் ராகவன்
ReplyDeleteஅன்புள்ள ஜிரா,
ReplyDeleteஇந்தத தள(ல)ம் உங்களுக்கு உதவியாக இருக்கும் என நினைக்கிறேன்.
http://psusheela.org/
// SurveySan said...
ReplyDeleteஎனக்கு ஜானகி தானுங்க எல்லாம்.
சுசீலாவும் ரொம்ப பிடிக்கும். //
ஜானகியும் நல்ல பாடகிதாங்க. எனக்கும் பிடித்த பாடகிதான். வாணி ஜெயராம், எல்.ஆர்.ஈஸ்வரி, பி.எஸ்.சசிரேகா, சித்ரா, சொர்ணலதா எல்லாரையும் பிடிக்கும். இப்ப ஷ்ரேயா கோஷல்.
// தேடிப்பிடிச்சு, கலக்கலான பாடல்கள கொடுங்க.
"கற்பூர பொம்மை ஒன்று", "லாலி லாலி", "மாலைப் பொழுதின் மயக்கத்திலே", "என்ன நினைத்து என்னை" மாதிரி. //
அதுக்குத் தேடிப்பிடிக்கவே வேண்டாங்க. எக்கச்சக்கமா இருக்குது. நெறையக் குடுக்கலாம். குடுக்குறேன்.
// யோகன் பாரிஸ்(Johan-Paris) said...
ReplyDeleteராகவா!
என்றும் அவர் எங்கள் இன்னிசையரசியே! அதற்கு மறுப்பிரா?
திருவிளையாடல் "நமச்சிவாய வாழ்க!"
எந்த வாத்தியமும் இல்லாமல் குரலாலே சிறப்பித்தவர். //
வாங்க யோகன் ஐயா. அந்த நமச்சிவாய பாட்டு ஒங்களுக்குப் பிடிக்குமா? எனக்கும் ரொம்பப் பிடிக்கும். வெறும் குரல்தான். தெய்வீகமா இருக்கும் கேட்கவே. ஆகா.
// கானா பிரபா said...
ReplyDeleteவாழ்த்துக்கள் ராகவன் //
நன்றி பிரபா. இது நீங்கள் செய்த உதவிதானே. மறக்க முடியுமா?
நண்பர்களே, இங்கே சொல்லிக் கொள்கிறேன். இப்படிப் பதிவு போடுவது எப்படி என்று எனக்குச் சொல்லிக் கொடுத்தது கானா பிரபாதான். :)
// பாலராஜன்கீதா said...
அன்புள்ள ஜிரா,
இந்தத தள(ல)ம் உங்களுக்கு உதவியாக இருக்கும் என நினைக்கிறேன்.
http://psusheela.org/ //
நன்றி பாலராஜன் கீதா. இந்தத் தளம் நான் அறிவேன். இந்தத் தளம் உருவாகக் காரணமாக இருந்தவர்களை எனக்கு நன்றாகத் தெரியும். நல்ல நண்பர்கள் அவர்கள்.
சுசீலாவின் குரலுக்கு அடிமையாகாதவங்க யார்?
ReplyDeleteநெஞ்சில் ஓர் ஆலயம் வந்த புதுசுலே ...............ஹப்பா...............
நினைச்சுப்பார்க்கவே முடியலை........ ரேடியோவுக்குப் பக்கத்தில்
எப்படி பழிகிடந்தோமுன்னு!
என்ன உச்சரிப்பு, என்ன இனிமை. அடடடா...............
அவுங்க பாட்டுங்க எல்லாம் மனசுலே அப்படியே செதுக்கினதுமாதிரி
நின்னு போச்சுப்பா.
'சின்னச் சின்ன இழை
ReplyDeleteபின்னிப் பின்னி வரும்
சித்திரக் கைத்தறிச் சேலையடி-நம்ம
தென்னாட்டில் எந்நாளும்
கொண்டாடும் சேலையடி......
தையன யத்தன தானா
தையன யத்தன தானா'
இசையரசி என்றால் அது என்னைப் பொருத்த வரையில் பி.சுசீலா அவர்கள்தான். அவருடைய குரலைக் கேட்டுதான் இசையின் இன்பத்தைப் பெரிதும் உணர்ந்திருக்கிறேன். //
ReplyDeleteஅப்படியே வழிமொழிகிறேன்...
அவருடைய இப்போதைய வாரிசு சித்ரா. சரியா?
// துளசி கோபால் said...
ReplyDeleteசுசீலாவின் குரலுக்கு அடிமையாகாதவங்க யார்?
நெஞ்சில் ஓர் ஆலயம் வந்த புதுசுலே ...............ஹப்பா...............
நினைச்சுப்பார்க்கவே முடியலை........ ரேடியோவுக்குப் பக்கத்தில்
எப்படி பழிகிடந்தோமுன்னு!
என்ன உச்சரிப்பு, என்ன இனிமை. அடடடா...............
அவுங்க பாட்டுங்க எல்லாம் மனசுலே அப்படியே செதுக்கினதுமாதிரி
நின்னு போச்சுப்பா. //
உண்மை டீச்சர். அந்தப் பாட்டுங்கள்ளாம் ஒங்க காலத்துல வந்தது. ஆனாலும் இன்னைக்கும் கேக்குறோம். அதான் அவங்க பாடிய பாடல்களோட சிறப்பு. பாட்டுல சர்க்கஸ் பண்ண மாட்டாங்க. ஆனா பாட்டுல தேவையான குழைவு, பாந்தம், சுறுசுறுப்பு, விறுவிறுப்பு எல்லாம் இருக்கும்.
// siva gnanamji(#18100882083107547329) said...
ReplyDelete'சின்னச் சின்ன இழை
பின்னிப் பின்னி வரும்
சித்திரக் கைத்தறிச் சேலையடி-நம்ம
தென்னாட்டில் எந்நாளும்
கொண்டாடும் சேலையடி......
தையன யத்தன தானா
தையன யத்தன தானா' //
வாங்க ஹெட்மாஸ்டர் சார். ஒங்களுக்குப் பிடிச்ச பாட்டுகளும் நெறைய வரும். நீங்க வந்து ஆதரவு தரனும். :)
// tbr.joseph said...
ReplyDeleteஅவருடைய இப்போதைய வாரிசு சித்ரா. சரியா? //
கண்டிப்பாக சொல்லலாம் சார். தவறேயில்லை. ஷ்ரேயா கோஷல் கூட நன்றாகப் பாடுகிறார். அவரையும் கூடச் சொல்லலாம்.
வாழ்த்துக்கள், ராகவன்!
ReplyDeleteRaghavan,
ReplyDeletewonderful intitiative..
I'm always there for support
keep going
வாழ்த்துக்கள் ஜிரா... ஆரம்பிங்க.. கல்க்குங்க...
ReplyDelete"இசைய ரசி" என்றும் தலைப்பு சொல்வதை இரசித்தேன்.
ReplyDelete:-)