ஆனால் எனக்கு இது போன்று ஒரு உணர்வை முதன் முதலில் தந்து ,நான் இசையை ரசிக்க ஆரம்பித்து அதற்கு அடிமையாக வைத்த ஒரு பாடலை தான் இன்றைக்கு பார்க்க போகிறோம்.
போன பதிவு போட்ட போது தோன்றியது, அதை எழுதுவதற்கு இவ்வளவு நாள் ஆகிவிட்டது. கண்டு பிடித்து விட்டீர்களா?? ஆமாம், நான் சொல்வது "கேளடி கண்மனி" படத்தில் வரும் "கற்பூர பொம்மை ஒன்று" பாடல் தான். :-)
இசையின்பத்தில் இசைக்கருவிகள் பற்றியெல்லாம் பதிவு போடும் போது,ஒவ்வொரு இசைக்கருவி எப்படி நமது மனதை பாடலின் உணர்வோடு உறவாட வைத்துவிடுகின்றது என எழுதியிருக்கிறேன். ஆனால் இந்த பாடலை பொருத்த வரை அந்த வேலையை இசையரசியின் அழகான குரல் செய்து விடுகிறது. பாடலின் ஆரம்பத்தில் அவர் ஹம் செய்யும் பொழுதே,நம் மனது மகுடிக்கு மயங்கிய நாகம் போல் பாடலுக்கு முன் கிறங்கிப்போய் விடும். பிறகு பாடல் முழுதும் இனிமையான குரல்,வயலின்.வீணை,புல்லாங்குழல் ஆகிய வாத்தியங்களின் தெய்வீக இசை மற்றும் மு.மேத்தாவின் மனதை வருடும் வரிகள் என பாடல் முழுமையாக ஒரு உணர்ச்சி கடலில் நம்மை மூழ்கடித்து விடும்.
அதுவும் கடைசியில் "தாய் அன்புக்கே ஈடேதம்மா,ஆகாயம் கூட அது போறாது. தாய் போல யார் வந்தாலுமே,உன் தாயை போலே அது ஆகாது" என்று சொல்லும் போது நான் அப்படியே உருகி விடுவேன்.
பாடலை கேட்டு முடித்த பின் ஒரு வித உணர்ச்சி வசப்பட்ட மன நிலையிலோ ,கண்களில் தண்ணீர் எட்டி பார்ப்பது போலோ இருந்தால் "என்ன ஆச்சு எனக்கு?? ஏன் ஒரு பாட்டுக்கு இவ்வளவு உணர்ச்சி வசப்படுகிறேன்" என்று உங்களையே கடிந்து கொள்ளாதீர்கள்.
உங்களையும் என்னையும் போன்ற பல்லாயிரக்கணக்கானோர் இங்கு உண்டு.
நம்மில் எந்த குறையும் இல்லை. எல்லாம் இந்த பாட்டுக்கு உள்ள சிறப்பு!! :-)
Ilayaraja - Keladi... |
படம் : கேளடி கண்மனி
பாடல் : கற்பூர பொம்மை ஒன்று
இசை : இளையராஜா
பாடலாசிரியர் : மு.மேத்தா
கற்பூர பொம்மை ஒன்று கை வீசும் தென்றல் ஒன்று
கலந்தாட கை கோர்க்கும் நேரம்
கண்ணோரம் ஆனந்த ஈரம்
முத்தே என் முத்தாரமே சபை ஏறும் பாடல் நீ பாடம்மா நீ பாடம்மா
(கற்பூர.....
பூந்தேரிலே நீ ஆடவே உண்டான அன்பே ஒரு ராஜாங்கம்
ராஜாங்கமே ஆனந்தமே நம் வீடு இங்கே ஒரு சங்கீதம்
மானே உன் வார்த்தை ரீங்காரம் மலரே என் நெஞ்சில் நின்றாடும்
முத்தே என் முத்தாரமே சபை ஏறும் பாடல் நீ பாடம்மா நீ பாடம்மா
(கற்பூர.....
தாய் அன்பிற்கே ஈடேதம்மா ஆகாயம் கூட அது போதாது
தாய் போல் யார் வந்தாலுமே உன் தாயை போலே அது ஆகாது
என் மூச்சில் வாழும் புல்லாங்குழல் உன் பேச்சு நாளும் செந்தேன் குழல்
முத்தே என் முத்தாரமே சபை ஏறும் பாடல் நீ பாடம்மா நீ பாடம்மா
(கற்பூர.....
கலந்தாடக் கை கோர்க்கும் நேரம்
ReplyDeleteகண் ஓரம் ஆனந்த ஈரம்....
இது நிஜமாலுமே கண் ஓரம் ஆனந்த ஈரம் தான், CVR!
ராஜா-சுசீலாம்மா காம்பினேஷன் மாஸ்டர்பீஸ்களில் இதுவும் ஒன்று!
இதே படத்தில் SPB மூச்சு விடாமல் பாடிய பாட்டு என்றெல்லாம் விளம்பரம் செய்திருப்பார்கள்! ஆனால் எனக்கென்னமோ, இந்தப் பாடல் போல் ஒரு சுகந்தம் அந்தப் படத்தில் வேறெங்கும் கிடைக்காது!
இதை சோகமோ, மகிழ்ச்சியோ, தியானமோ எப்போது கேட்டாலும் இனிக்கும்! எந்த நேரத்துக்கும் பொருந்தும் பாடல்! இரவில் கேட்டால் தாலாட்டு, பகலில் கேட்டால் எசப்பாட்டு!
கற்பூர பொம்மை ஒன்று − கேளடி கண்மனியில் எத்தனையோ பாடல்கள் இடம்பெற்றிருந்தாலும் இந்த பாடலுக்கு தனி சிறப்புண்டு
ReplyDeleteதாலாட்டை சுசீலாவைவிட்டால் யாரால் இவ்வளவு அழகாக பாடமுடியும
வரம் தந்த சாமிக்கு, மகனே இள மகனே, கண்ணான பூமகனே, அத்தை மடி மெத்தையடி,காலமிது காலமிது,தாலாட்டு பிள்ளை உண்டு தாலாட்டு என தாலட்டு பாடல்கள் ஒவ்வொன்றும் முத்து
நடிகை ஜெயந்தி ஒரு விழாவில் சொன்னது இது தான்
சுசீலாம்மா எல்லா பாவத்தையும் பாட்டிலேயே செய்து விடுவார் நாங்கள் அந்த பட்டிற்கு ஏற்றபடி வாயசைத்தாலே போதும் எல்லா பாவமும் திரையில் வந்துவிடும்
அது 100/100 உண்மை .. இந்த பாடலையே எடுத்துக்கொள்ளுங்களேன்
என் மகள் என்ற அந்த கர்வமும் அன்பும் அந்த தாயின் குரலில் வெளிப்படுவதை எவ்வளவு அழகாக கொண்டுவந்திருப்பார் பாருங்கள்
கீதா இவர் பாடியதில் 20 சதவிகிதம் செய்திருந்தால் அது பெரிய விஷயம்
அவ்வளவு அழகான பாடல்
மனதை பிசையும் பாடல்கள் வரிசையில் இதுவும் ஒன்று
சிவிஆர் "அண்ணா" எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் இதுவும் ஒன்று.இரவு நேரங்களில் தனிமையில் நான் இரசித்து கேட்கும் பாடல்களில் இதுவும் ஒன்று.அந்த சுகத்தை எல்லாம் வார்த்தையால் சொல்ல முடியாது அண்ணா....
ReplyDeleteஆகா ஆகா ஆகாகா! அடையிலிருந்து தேனைப் பிழிந்து அடையில் ஊற்றித் தடையின்றி உண்பது போன்ற இனிய பாடல்.
ReplyDeleteகேட்டால் நெகழ்ச்சி. அட பாட்டால் மகிழ்ச்சி..நன்றி. நன்றி.
@கே.ஆர்.எஸ்
ReplyDelete//இதை சோகமோ, மகிழ்ச்சியோ, தியானமோ எப்போது கேட்டாலும் இனிக்கும்! எந்த நேரத்துக்கும் பொருந்தும் பாடல்! இரவில் கேட்டால் தாலாட்டு, பகலில் கேட்டால் எசப்பாட்டு!//
சுசீலா அம்மாவின் பாடல்கள் எப்பொழுது கேட்டாலும் தேன் ஊற்று!! :-)
@ராஜேஷ்
//அவ்வளவு அழகான பாடல்
மனதை பிசையும் பாடல்கள் வரிசையில் இதுவும் ஒன்ற//
பாடலை கேட்டவுடன் எதுவுமே பேச முடியாமல் ஒரு விதமான அமைதியான மன நிலையில் நம் மனது ஆழ்ந்து விடும். இசையரசியின் குரலின் மகிமை அப்படி!! :-)
@துர்கா
//அந்த சுகத்தை எல்லாம் வார்த்தையால் சொல்ல முடியாது அண்ணா....//
ஆமாம் அக்கா!! அந்த இன்பத்தை உணர்ந்தால் தான் புரியும்!! :-)
@ஜிரா
//கேட்டால் நெகழ்ச்சி. அட பாட்டால் மகிழ்ச்சி..நன்றி. நன்றி.//
உங்கள் மகிழ்ச்சி கண்டு என் மனதினில் மலர்ச்சி!! :-)
வாழ்த்துக்களுக்கு நன்றி ஜிரா!! :-)
//பாடலை கேட்டு முடித்த பின் ஒரு வித உணர்ச்சி வசப்பட்ட மன நிலையிலோ ,கண்களில் தண்ணீர் எட்டி பார்ப்பது போலோ இருந்தால் "என்ன ஆச்சு எனக்கு?? ஏன் ஒரு பாட்டுக்கு இவ்வளவு உணர்ச்சி வசப்படுகிறேன்" என்று உங்களையே கடிந்து கொள்ளாதீர்கள்.
ReplyDeleteஉங்களையும் என்னையும் போன்ற பல்லாயிரக்கணக்கானோர் இங்கு உண்டு.
நம்மில் எந்த குறையும் இல்லை. எல்லாம் இந்த பாட்டுக்கு உள்ள சிறப்பு!! :-)
//
உண்மை CVR.
லாலி லாலி பாட்டும் இந்த வகையில் சேரும்.
அற்புதமான பாட்டு. அருமையான பதிவு!
தொடரட்டும்!
@Surveysan
ReplyDeleteலாலி லாலி இன்னொரு மயிர் கூச்செரிய வைக்கும் பாடல்!!
இது தவிர யேசுதாஸ் குரலில் "ஆராரிரோ பாடியதாரோ,தூங்கிப்போனதாரோ" என்று ஒரு பாட்டு!!
இசையும் ,வரிகளும் என்னை கலங்க வைத்துவிடும்!! கேட்டு விட்டு ஒரு 5 நிமிடத்திற்கு ஒன்றும் யோசிக்க முடியாது!!
அதே போல் பவித்ரா படத்தில் "உயிரும் நீயே" என்று ஒரு அற்புதமான பாடல். உன்னிகிருஷ்ணன் குரலில் நான் குழைந்து போய் விடுவேன். இந்த பாடலிலும் வரிகள் மணி மணியாக இருக்கும்!!!
தாய்ப்பாசம் என்று வந்தாலே எல்லோரும் மன்னன் படத்தில் வரும் "அம்மாவென்றழைக்காத" பாடலை பற்றியே பேசுவார்கள். ஆனால் அந்த பாடலை விட மேற்சொன்ன பாடல்கள் மிகவும் பிடிக்கும்!! :-)
வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி சர்வேசன்!! :-)