நாட்டுப்புற பாட்டு இது நாடறியாத பாட்டு
முன்பு சுசீலா நாட்டுப்புற பாடல்கள் குறைவாக பாடியிருப்பதாக ஒரு பேச்சு எழுந்தது அது உண்மையல்ல
அதற்கு உதாரணம் எத்தனையோ பாடல்கள்
50'களில் சித்தாட கட்டிக்கிட்டு தொடங்கி 90'களில் வந்த பாடல்கள் வரை
93' ல் வெளிவந்த அரண்மனைக்கிளி படத்தில் ராஜாவின் ராஜாங்க இசையை யாரும் மறந்திருக்க முடியாது
ஆம் ஜானகியின் வான்மதியே ஓ வான்மதியே
மனோ−மின்மிணியின் அடி பூங்குயிலே பூங்குயிலே பாடல்களுக்கு மத்தியில்
இந்த பாடல் அவ்வளவாக பிரபலமடையவில்லை ஆனாலும் இது ஒரு அழகான நாட்டுப்புற பாடல் சடங்கு பற்றி அழகாக பிறைசூடன் எழுத ராஜா சுசீலாவை அழைத்தார் இதை பாட. எந்த பாடல் என்று ஞாபகம் வருகிறதா .. ஆம் " நட்டுவெச்ச ரோசாச்செடி ஆமா ஆமா " என்ற அழகான மெட்டுடைய பாடல் அது ..
சுசீலாவின் குரலை கேளுங்கள் என்ன இனிமை என்ன தெளிவு .
குறைந்த வாத்தியங்கள் பயன்படுத்தியிருப்பார் ராஜா காரணம் சுசீலாவின் குரலே பல ஜாலங்களை செய்யுமே.
"மானுக்கு மேலழகு மயிலுக்குத்தான் வாலழகு பெண்ணுக்கு எது அழகு கூறு மச்சான்" சுசீலா குழைவார்
இதோ பாடல் வரிகள்
நட்டு வெச்ச ரோசாச்செடி ஆமா ஆமா
மொட்டுவிட்டு பூத்ததின்று ஆமா ஆமா
கட்டழக பார்த்த கண்ணுதான்
தையாரே தய்யா
தொட்டுப்புட ஏங்கி நிக்குதான்
தையாரே தய்யா
சந்தடி சாக்குல தான் ஒரு சங்கதி சொல்லட்டுமா
ஒரு பந்தல போடட்டுமா நல்ல பந்தியும் வைக்கட்டுமா
நட்டு வெச்ச ரோசாச்செடி ஆமா ஆமா
மொட்டுவிட்டு பூத்ததின்று ஆமா ஆமா
கட்டழக பார்த்த கண்ணுதான்
தையாரே தய்யா
தொட்டுப்புட ஏங்கி நிக்குதான்
தையாரே தய்யா
மானுக்கு மேலழகு
மயிலுக்குத்தான் வாலழகு
பெண்ணுக்கு எது அழகு கூறு மச்சான்
மொத்தமா அழகிருக்கு தனித்தனியா சொல்லனுமா
அம்மம்மா பேரழக பிரிக்கனுமா
பொத்தித்தான் வைச்சாலும் வந்திடும் பூவாசம்
பொண்ணு தான் ஆளானா நிச்சயம் கல்யாணம்
மேடை ஒன்னு கட்டு யம்மா யம்மா
மேள தாளம் கொட்டு யம்மா யம்மா
நட்டு வெச்ச ரோசாச்செடி ஆமா ஆமா
மொட்டுவிட்டு பூத்ததின்று ஆமா ஆமா
கட்டழக பார்த்த கண்ணுதான்
தையாரே தய்யா
தொட்டுப்புட ஏங்கி நிக்குதான்
தையாரே தய்யா
சந்தடி சாக்குல தான் ஒரு சங்கதி சொல்லட்டுமா
ஒரு பந்தல போடட்டுமா நல்ல பந்தியும் வைக்கட்டுமா
நட்டு வெச்ச ரோசாச்செடி ஆமா ஆமா
மொட்டுவிட்டு பூத்ததின்று ஆமா ஆமா
கட்டழக பார்த்த கண்ணுதான்
தையாரே தய்யா
தொட்டுப்புட ஏங்கி நிக்குதான்
தையாரே தய்யா
வான வளைச்சு அந்த வானவில்லை போட்டது போல்
நம்ம வளைச்சு ஒன்னா சேர்த்துப்புட்டா
பூமி செழிச்சதுன்னா பொன்ன அள்ளி கொடுப்பதுபோல்
பொன்னப்போல் சிரிச்சு அவ பார்த்துப்புட்டா
என்னம்மா ஆராய்ச்சி பொன்னு இப்ப பூவாச்சு
அம்மன் கோவில் தேராச்சு ஆடி வரும் நாளாச்சு
மேடை ஒன்னு கட்டு யம்மா யம்மா
மேள தாளம் கொட்டு யம்மா யம்மா
பாடலை கேட்டு மகிழுங்கள்
ராஜேஷ், சொன்னால் நீங்கல் நம்பாமலும் போகலாம். நீண்ட நாட்களாக நான் தேடிக்கொண்டிருந்த பாட்டு இது. மிக அருமையான பாட்டு. ஆகா....அருமை. அருமை. நட்டு வெச்ச ரோசாச்செடி ஆமா ஆமா!!!!!
ReplyDeleteநல்ல பாட்டு, பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி ராஜேஷ் ஐயா.
ReplyDeleteஓடுகிற தண்ணியில ஒரச்சுவிட்டேன்
ReplyDeleteசந்தனத்த- சேந்துச்சோ சேரலையோ
செவத்த மச்சான் நெத்தியில...என்ற பாடல் வண்ணக்கிளியிலும்,
பட்டனந்தா போகலாமடி பொம்பளே
பணங்காசு சேக்கலாமடி...என்ற பாடல்..படம் நினைவில்லை, நாகேஸ்வரராவ் சாவித்திரி நடித்தபடம். சுசீலாவும் சீர்காழியும் அற்புதமாக இந்த நாட்டுப்புறப் பாடல்களை அக்காலத்தில் பாடியிருக்கிறார்கள்.நினைவுகளைக் கிளறினால் இன்னும் கிடைக்கும்.
ராகவன்,மாசிலா மிக்க நன்றி
ReplyDeleteநானானி, ஆம் எத்தனையோ நாட்டுப்புற பாடல்கள் உள்ளன
நீங்கள் சொன்ன பட்டணம்தான் போகலாமடி படம் எங்க வீட்டு மகாலெட்சுமி
ஆம் இனி வரும் பதிவுகள் எல்லாம் சுசீலாவின் நாட்டுப்புற பாடல்களாக இருக்கும்
Nice Song!
ReplyDeleteThanks for sharing!
//ஓடுகிற தண்ணியில ஒரச்சுவிட்டேன்
ReplyDeleteசந்தனத்த- சேந்துச்சோ சேரலையோ
செவத்த மச்சான் நெத்தியில...என்ற பாடல் வண்ணக்கிளியிலும்,//
ஓடுகிற தண்ணியில உரசி விட்டேன் பாடல் அச்சமில்லை அச்சமில்லை படத்தில் வருவது, பாடல் வைரமுத்து ,இசை வி.எஸ்.நரசிம்மன், பாடியவர் பீ.சுசீலா
வண்ணக்கிளி R.S.மனோ்கர்(he is hero in that film!!), பிரேம் நசீர் எல்லாம் நடித்த கருப்பு வெள்ளைப்படம். அதில் மாட்டுக்கார வேலா உன் மாட்டக்கொஞ்சம் பார்த்துகடா என்ற பாடல் நன்றாக இருக்கும்.