Wednesday, 22 August 2007

16.தேன் கூடு நல்ல தேன் கூடு − தூக்கனாங்குருவிக்கூடு

நாட்டுப்புற வரிசை − 3

தேன் கூடு நல்ல தேன் கூடு − தூக்கனாங்குருவிக்கூடு


நாட்டுப்புற பாடல்கள் தான் எத்தனை வகை ஏறு பிடிக்க பாட்டு, நாத்து நட பாட்டு, தாலாட்ட பாட்டு என பல வகை அதில் இந்த பாடல் ஒரு வகை

இது ஒரு துள்ளல் வகையான நாட்டுப்புற பாடல்

கவிஞரின் சொந்த தயாரிப்பான வானம்பாடி
மாமாவின் இசையில் எல்லா பாடல்களுமே அற்புத பாடல்கள்
ஆம் ஆண்கவியை வெல்ல வந்த என்ற போட்டி பாடலாகட்டும்,
மனதை உருக்கும் கங்கைக்கரைத் தோட்டம் கன்னிப் பெண்கள் கூட்டம்
நெஞ்சை நெகிழ வைக்கும் கடவுள் ஏன் கல்லானான்
ஏட்டில் எழுதி வைத்தேன் என எல்லாமே காலத்தால் அழியா கானங்கள்
இந்த பாடல்களோடு துள்ளிசையாக அமைந்த நாட்டுப்புற பாடல், தான்
தூக்கனாங்குருவிக்கூடு என்ற பாடல்

சும்மா வெளுத்து வாங்கியிருப்பாங்க சுசீலாம்மா
கவிஞர் மட்டும் என்ன குறைச்சலா .. ஆனானப்பட்டா ராஜா கூட மயங்கனும் கேட்டு ..மயங்கமாட்டாரா என்ன?

தூக்கணாங்குருவிக் கூடு
தூங்கக் கண்டான் மரத்திலே
சும்மாப் போன மச்சானுக்கு
என்ன நெனப்பு மனசிலே

பாக்கிறான் பூ முகத்தைப்
பைய பைய கண்ணிலே
பரிசம் போட்ட மச்சானுக்கு
என்ன நெனப்பு தெரியலே

(தூக்கணாங்)

அம்மான் வீட்டுப் பெண்ணானாலும்
சும்மா சும்மா கிடைக்குமா
அரிசி பருப்பு சீரு செனத்தி
அள்ளிக் கொடுக்க வேண்டாமா
கம்மான் கையில் பொன்னை வாங்கிக்
கட்டிக் கொள்ள வேண்டாமா
கட்டிலும் மெத்தையும் வாங்கிப் போட்டு
காத்துக் கிடக்க வேண்டாமா

(தூக்கணாங்)

கூரைக் குடிசை நடுவிலே
அந்தப் படுக்கையப் போட்டு
ஒரு குத்து விளக்கை ஏத்தி வச்சு
கோலத்தப் போட்டு
ஆற அமர மச்சானோடு
படிக்கணும் பாட்டு
ஆனானப்பட்ட ராஜா கூட
மயங்கணும் கேட்டு...
அத விட்டு...

(தூக்கணாங்)


2 comments:

  1. நல்ல பாட்டு!! :-)

    ReplyDelete
  2. ஆகா! இந்தப் பாட்டப் பத்தி என்ன சொல்றது..... பாக்கவும் கேக்கவும் அருமையான பாட்டாச்சே.... மெல்லிய நாட்டுப்புறப்பாட்டு இது. வானொலிக்காக தேவிகா பாடுற மாதிரி படமாக்கப்பட்ட காட்சி இது.

    ReplyDelete