Sunday, 23 September 2007

18. மெல்ல மெல்ல என்னைத் தொட்டு

இன்றைக்கு சில்க் ஸ்மிதா அவர்களின் நினைவு நாள். செப்டம்பர் 23. அவர்களை நினைவு கூறும் விதமாக இந்தப் பாட்டை உங்களுக்கு இசையரசி வலைப்பூ வழியாக உங்களுக்குக் கொடுக்கிறோம். ஒலி மட்டுமல்ல. ஒளியும்தான்.

சில்க் ஸ்மிதாவிற்கு எஸ்.ஜானகி நிறைய பாடியிருக்கிறார். எல்.ஆர்.ஈஸ்வரியும் வாணி ஜெயராமும் கூடப் பாடியிருக்கிறார்கள். ஆனால் இசையரசியின் குரலில் தேடினால் இந்த ஒரு பாட்டுதான் எனக்குக் கிடைத்தது. நல்லதொரு பாடல்.

வாழ்க்கை என்ற திரைப்படத்தில் இளையராஜாவின் இசையில் வெளி வந்த "மெல்ல மெல்ல என்னைத் தொட்டு" என்ற இனிய பாடல். உடன் பாடியவர் பெயர் ராஜ் சீத்தாராமன் என்று போட்டிருக்கிறார்கள். இவர் பாடிய வேறு பாடல்கள் தெரியவில்லை. உங்களுக்குத் தெரிந்தால் சொல்லுங்கள்.



இந்தப் பாடலை youtubleல் வலையேற்றிய நண்பருக்கு நன்றி.

இசையரசியிடம் கேளுங்கள் சற்றுத் தாமதாமாகிறது.

நண்பர்களே, உங்களிடம் இசையரசியிடம் கேளுங்கள் என்று கேள்விகள் வாங்கினோம். அது சற்றுத் தாமதமாகிறது. இசையரசியின் உடல் நலம், வெளிநாட்டுப் பயணம், ஐதராபாத் பயணம் ஆகிய காரணங்களால் தள்ளிப் போனது. பிறகு நமக்கு உதவி செய்த நண்பர் மும்பைக்கு மாற்றலாகிச் சென்று விட்டார். ஆகையால் வேறொரு நண்பர் வழியாக முயற்சி செய்கிறோம். கண்டிப்பாகச் செய்து தருவதாகச் சொல்லியிருக்கிறார். அவருக்கு நன்றி. ஏற்பட்ட இந்த தாமதத்தைப் பொறுத்துக் கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன். விரைவில் உங்களுக்கு விடைகளைத் தருவோம் என்று நம்புகிறேன்.

அன்புடன்,
கோ.இராகவன்

18 comments:

  1. yupp a great dancer.it is a pity that she killed herself.may her soul rest in peace.

    ReplyDelete
  2. சூப்பர் பாட்டு !!
    ராஜாவின் தாளமிடும் இசையும்,சுசீலாவின் பொருத்தமான குரலும், நல்ல நடன அமைப்பும் பாடலை ரசிக்கவைத்து விடுகின்றன!!
    கேட்க வைத்ததற்கு நன்றி!! :-)

    ReplyDelete
  3. நன்றி ராகவன்

    ONE OF MY FAVOURITE
    என் செல் பேசியில் ring tone ஆக வைத்திருந்தேன் இந்த ட்யுனை

    ReplyDelete
  4. // துர்கா|thurgah said...
    yupp a great dancer.it is a pity that she killed herself.may her soul rest in peace. //

    துர்கா, ஒரு நல்ல நடிகையும் கூட. அலைகள் ஓய்வதில்லை பாத்தாலே தெரியும். ஆனா பாவம்...அவங்களை இப்பிடியே பாத்துப் பழகீட்டோம். எந்த ஒரு ஆணையும் தன்னை ரசிக்க வைக்கக் கூடிய அழகு அவருடையது. அவருடைய முடிவு மிகவும் வருந்தத்தக்கது.

    ReplyDelete
  5. // ஸ்ரீசரண் said...
    நன்றி ராகவன்

    ONE OF MY FAVOURITE
    என் செல் பேசியில் ring tone ஆக வைத்திருந்தேன் இந்த ட்யுனை //

    வாங்க ஸ்ரீசரண், இது ரொம்பவுமே வித்தியாசமான சில்க் பாட்டு. ட்ரன் ட்ரன் ட்ரன் என்ற தொடக்கமே அசத்தல். ரொம்ப ஏத்த இறக்கம் இல்லாத பாட்டும் கூட. ஆனா பொருத்தமா இருக்கு. எனக்கும் இது பிடிச்ச பாட்டு.

    ReplyDelete
  6. நல்ல நடிகை...
    இவர் பின்னால் சுற்றாத நடிகர்களே இல்லை என கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனா இவர் இறந்தப்ப ஒருத்தர் கூட வரலை :-(

    அலைகள் ஓய்வதில்லை, அவசர போலிஸ் 100 எல்லாம் நல்லா நடிச்சிருப்பாங்க.

    அவர் ஆத்மா சாந்தியடையட்டும்

    ReplyDelete
  7. // வெட்டிப்பயல் said...
    நல்ல நடிகை...
    இவர் பின்னால் சுற்றாத நடிகர்களே இல்லை என கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனா இவர் இறந்தப்ப ஒருத்தர் கூட வரலை :-( //

    எல்லாம் பயந்தான். அவங்க செஞ்ச தப்புக்கு அவரோட ஆவி வந்து அடிச்சிருமோன்னு.

    // அலைகள் ஓய்வதில்லை, அவசர போலிஸ் 100 எல்லாம் நல்லா நடிச்சிருப்பாங்க. //

    எப்படி மறக்க முடியும்? பாவா புட்டு சாப்புடுங்க பாவான்னு கொஞ்சிக் கொஞ்சிப் பேசும் சின்னப்பாப்புவை எப்படி மறக்க முடியும்?

    //அவர் ஆத்மா சாந்தியடையட்டும் //

    நிச்சயமா அடைஞ்சிருக்கும். யோக்கியத்தனத்தைப் பொம்பள கிட்ட மட்டும் எதிர்பார்க்கக் கடவுள் மனிதன் இல்லை. ஆகையால அவருக்கு எப்பவோ அமைதி கிடைச்சிருக்கும்.

    ReplyDelete
  8. வணக்கம் ராகவன்

    நல்ல பாடல், சில்க்கிற்கு கிடைத்த இன்னொரு நல்ல பாடல், பி சுசீலா அம்மாவும் எஸ்.பி.பியும் பாடிய "பேசக்கூடாது" என்ற பாட்டு.

    ReplyDelete
  9. சில்க் போயி 11 வருசமாச்சாமே.....
    காலம் எப்படி ஓடுது பாருங்க.

    நல்ல பாட்டு. மறந்தே போயிருந்தது.
    நன்றி

    ReplyDelete
  10. மிகவும் மெல்லிதாக ஓடும் பாட்டு இது! குலுக்கல் நடனங்களில் பாடப்படும் இரைச்சல் எல்லாம் இல்லாமல் ட்ரன் ட்ரன் ட்ரன் என்று துவக்க இசையே மென்மை தான்! பாடலை யூட்யூபிலும் ஏற்றிப் பகிர்ந்தமைக்கு நன்றி!

    பாவா பாவான்ன்னாலே இவங்க தான் ஜிரா! சின்னப்பாப்பு கேரக்டர், அதுவும் முழி முழி பாக்யராஜுக்கு ஏற்ற ஜோடி! அவருக்கு நாமம் போட்டு, திருப்பதி வேண்டுதல் அது இதுன்னு அடிக்கிற லூட்டி....கலக்கலா இருக்கும்! :-)

    பொதுவா ஒரு கலைஞருக்கு இருக்கு ரசிகர் பட்டாளம் அவர் மறைவுக்குப் பின் அவ்வளவா இல்லாவிட்டாலும், ஏதாச்சும் ஒரு வகையில் memorial இருக்கும்! சில்க்-குக்கு வலைத்தளம் ஏதாச்சும் இருக்கா ஜிரா?

    ReplyDelete
  11. ஸ்மிதாவின் கண்கள் உறுதியான நோக்குக் கொண்டவை. ஆயிரம் பொருள் அந்தப் பார்வையில் தெரியும்.
    அழகும் திறமையும் கொண்டவர்கள் இப்படி ஒருன் சோகத்தில் தள்ளப் படுவது ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இல்லை:(((

    மிக நல்ல பாடல் ராகவன்.ரசித்துக் கேட்டேன்.

    ReplyDelete
  12. // கானா பிரபா said...
    வணக்கம் ராகவன்

    நல்ல பாடல், சில்க்கிற்கு கிடைத்த இன்னொரு நல்ல பாடல், பி சுசீலா அம்மாவும் எஸ்.பி.பியும் பாடிய "பேசக்கூடாது" என்ற பாட்டு. //

    வாங்க பிரபா. நீங்க சொல்றது "பேசக்கூடாது வெறும் பேச்சில்ல் சுகம்" என்ற பாட்டா?

    ReplyDelete
  13. // துளசி கோபால் said...
    சில்க் போயி 11 வருசமாச்சாமே.....
    காலம் எப்படி ஓடுது பாருங்க.

    நல்ல பாட்டு. மறந்தே போயிருந்தது.
    நன்றி //

    ஆமா டீச்சர் 11 வருசம் ஆச்சு. இப்போதைக்கு இன்னொரு சில்க் வர்ரதுக்கு வாய்ப்பில்லைன்னுதான் தோணுது.

    // வல்லிசிம்ஹன் said...
    ஸ்மிதாவின் கண்கள் உறுதியான நோக்குக் கொண்டவை. ஆயிரம் பொருள் அந்தப் பார்வையில் தெரியும்.
    அழகும் திறமையும் கொண்டவர்கள் இப்படி ஒருன் சோகத்தில் தள்ளப் படுவது ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இல்லை:(((

    மிக நல்ல பாடல் ராகவன்.ரசித்துக் கேட்டேன். //

    ஆமா வல்லீம்மா. அவங்க நல்ல நடிகையும் கூட. வெறும் கவர்ச்சிக்கு மட்டுமே பயன்படுத்திக் கொண்டது தமிழ் சினிமாவின் இழப்புதான்.

    ReplyDelete
  14. // kannabiran, RAVI SHANKAR (KRS) said...
    மிகவும் மெல்லிதாக ஓடும் பாட்டு இது! குலுக்கல் நடனங்களில் பாடப்படும் இரைச்சல் எல்லாம் இல்லாமல் ட்ரன் ட்ரன் ட்ரன் என்று துவக்க இசையே மென்மை தான்! பாடலை யூட்யூபிலும் ஏற்றிப் பகிர்ந்தமைக்கு நன்றி! //

    நான் ஏற்றலை ரவி. ஒரு நண்பர் ஏற்றியிருக்காரு. அதைக் கண்டுபிடிச்சிப் போட்டேன். அதுனால அவருக்கு நன்றியும் சொல்லீருக்கேனே.

    // பாவா பாவான்ன்னாலே இவங்க தான் ஜிரா! சின்னப்பாப்பு கேரக்டர், அதுவும் முழி முழி பாக்யராஜுக்கு ஏற்ற ஜோடி! அவருக்கு நாமம் போட்டு, திருப்பதி வேண்டுதல் அது இதுன்னு அடிக்கிற லூட்டி....கலக்கலா இருக்கும்! :-)//

    செம கலக்கல் காமெடி அது.

    // பொதுவா ஒரு கலைஞருக்கு இருக்கு ரசிகர் பட்டாளம் அவர் மறைவுக்குப் பின் அவ்வளவா இல்லாவிட்டாலும், ஏதாச்சும் ஒரு வகையில் memorial இருக்கும்! சில்க்-குக்கு வலைத்தளம் ஏதாச்சும் இருக்கா ஜிரா? //

    கண்ணபிரான் ரவிசங்கர்னு ஒருத்தர் ஆரம்பிக்கப் போறதாக் கேள்வி. இன்னும் தொடங்கலைன்னுதான் நெனைக்கிறேன் ;)

    ReplyDelete
  15. // நீங்க சொல்றது "பேசக்கூடாது வெறும் பேச்சில்ல் சுகம்" என்ற பாட்டா?//

    அதே தான்

    ReplyDelete
  16. கோடிக்கணக்கான ரசிகர்களின் தூக்கம் கெடுத்தவரின் கடைசித் தூக்கம் துயரமானது...நல்ல ஒரு நட்சத்திரம்..விட்டுச் சென்ற இடம் இன்னும் நிரப்ப படாமலே இருக்கிறது...

    ReplyDelete

  17. ஆஹா .. கிளப் டான்ஸ் என்றாலும் அதிலும் சுசீலாவின் முத்திரை என்று சொல்லும் அளவிற்கு அமைந்த பாடல். அதாவது இப்படியும் கிளப் டான்ஸ் பாட்டை பாடலாம் வெற்றியும் அடையும், ஹா ஊ என ஓசைகளும் கத்தல்களும் தேவையில்லை என நிரூபித்த பாட்டு..

    நன்றி ராகவன் ..



    1984

    Vaazhkkai-

    It was that period when Shivaji used to pair with Ambika,radha & other young heroines. Interestingly Vaazhkkai had a nice story and good performances by Shivaji,Ambika, pandian and others. The others include VKR,Nizhalgal ravi,deepa.

    Story was the usual father –sons tiff and the consequences
    IR proved again the he was a music mastero

    He gave brilliant tune for a Raveendhar – Silk smitha dance number
    Yes “Mella Mella ennai thottu”by P.Susheela and Raj Seetharaman

    And Shivaji-Ambika had a duet by SPB & Vanijayaram “Kaalam maaralam nam kadhal maruma” AAm Kaalngal aanalum kaadhil reengaramidum paadalgal

    The other songs were
    Yaavum neeyappa by Malasia vasudevan
    Anbirukkum ullangale ennarumai selvangale by SPB & shailaja

    Of all the songs
    Mella mella and Kalam maralam are outstanding numbers


    Mella mella had vaali’s punch all over it . IR's mesmerizing tune, PS and Raj seetharaman's singing is a treat. This is one of the silk's songs without any extra nasal effect


    Vaali’s effervescent lyrics is romantic asusual

    --------------------------------------------------------------------------------


    mella mella ennai thottu
    manmadhan un vElaiyai kAttu ..O..un pAttu
    aadu O.. vanthAdu
    nee tharadhadha naan thodadhatha
    sollithanthu aLLikoLLa sonthamagavillaye
    degam o.. un degam
    mogam o.. un dagam

    vandu thedum poovai kandu
    anthi malai toodhugal
    o-hO O ... thappadhu
    ithu podhum -hO ippOdhu
    vandhu serum..vaazthu sendu.. rendu perum serndhidum
    nALil O pon naaLil
    thOLil O un mAlai
    ..lA...lalAla..lAlalA...(2)
    nan thandhalenna nee thandhalenna

    -----------mella mella ennai-----------

    thotta podhum vitta podhum
    etti ninnu parthadhum
    ooRum -hO kaLLooRum
    naanaum -hO peN naanum
    kaathil nooru kaathal mettu sollum jaathi mullaiyO
    mottu -hO peN chittu
    pattu -hO kaipattu
    ..lA...lalAla..lAlalA...(2)
    vA vanthAdu nee O.. koNdaadu nee

    Raj

    ReplyDelete
  18. ராஜ் சீதாராமன் பாடிய சில பாடல்கள்

    மனசுக்குள் உட்கார்ந்து மணி அடித்தான் (அதுவும் சுசீலாவுடன்)

    பல நாள் ஆசை வெச்சு ( வாணிஜெயராமுடன் − வாங்க மாப்பிள்ளை வாங்க)
    மற்றும் சில தெலுங்கு பாடல்கள்

    ReplyDelete