Monday, 24 September 2007

பிள்ளையார் பிள்ளையார் பெருமை வாய்ந்த பிள்ளையார்



பிள்ளையார் பிள்ளையார் பெருமை வாய்ந்த பிள்ளையார்

விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்கள் முடிவடைந்தாலும் அதன் சிறப்பு பாடலை இங்கே தருவதில் எனக்கு மகிழ்ச்சியே..

எத்தனையோ பக்தி பாடலை சுசீலா பாடியிருக்கிறார் அதில் இதுவும் ஒரு வகை..

இதோ வேழமுகனின் புகழ் சுசீலாவின் தேன் குரலில்



Sunday, 23 September 2007

18. மெல்ல மெல்ல என்னைத் தொட்டு

இன்றைக்கு சில்க் ஸ்மிதா அவர்களின் நினைவு நாள். செப்டம்பர் 23. அவர்களை நினைவு கூறும் விதமாக இந்தப் பாட்டை உங்களுக்கு இசையரசி வலைப்பூ வழியாக உங்களுக்குக் கொடுக்கிறோம். ஒலி மட்டுமல்ல. ஒளியும்தான்.

சில்க் ஸ்மிதாவிற்கு எஸ்.ஜானகி நிறைய பாடியிருக்கிறார். எல்.ஆர்.ஈஸ்வரியும் வாணி ஜெயராமும் கூடப் பாடியிருக்கிறார்கள். ஆனால் இசையரசியின் குரலில் தேடினால் இந்த ஒரு பாட்டுதான் எனக்குக் கிடைத்தது. நல்லதொரு பாடல்.

வாழ்க்கை என்ற திரைப்படத்தில் இளையராஜாவின் இசையில் வெளி வந்த "மெல்ல மெல்ல என்னைத் தொட்டு" என்ற இனிய பாடல். உடன் பாடியவர் பெயர் ராஜ் சீத்தாராமன் என்று போட்டிருக்கிறார்கள். இவர் பாடிய வேறு பாடல்கள் தெரியவில்லை. உங்களுக்குத் தெரிந்தால் சொல்லுங்கள்.



இந்தப் பாடலை youtubleல் வலையேற்றிய நண்பருக்கு நன்றி.

இசையரசியிடம் கேளுங்கள் சற்றுத் தாமதாமாகிறது.

நண்பர்களே, உங்களிடம் இசையரசியிடம் கேளுங்கள் என்று கேள்விகள் வாங்கினோம். அது சற்றுத் தாமதமாகிறது. இசையரசியின் உடல் நலம், வெளிநாட்டுப் பயணம், ஐதராபாத் பயணம் ஆகிய காரணங்களால் தள்ளிப் போனது. பிறகு நமக்கு உதவி செய்த நண்பர் மும்பைக்கு மாற்றலாகிச் சென்று விட்டார். ஆகையால் வேறொரு நண்பர் வழியாக முயற்சி செய்கிறோம். கண்டிப்பாகச் செய்து தருவதாகச் சொல்லியிருக்கிறார். அவருக்கு நன்றி. ஏற்பட்ட இந்த தாமதத்தைப் பொறுத்துக் கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன். விரைவில் உங்களுக்கு விடைகளைத் தருவோம் என்று நம்புகிறேன்.

அன்புடன்,
கோ.இராகவன்