Saturday, 3 November 2007

21. கதாநாயகி வரிசை 1 - குஷ்பூ


இசையரசி திரையுலகம் நுழைந்தது முதல் பாடிய பாடல்கள் ஏராளம் என்றால்...அந்தப் பாடல்களுக்கு நடித்த நடிகைகளும் ஏராளம். அப்படி ஒவ்வொரு நடிகைக்கும் ஒவ்வொரு பாடலை எடுத்துக்காட்டும் முயற்சிதான் இந்தக் கதாநாயகி வரிசை.

முதல் கதாநாயகியாக நாம் பார்க்கப் போவது குஷ்பு. என்னடா...எத்தனையோ மணியான பாடல்களைப் பல கதாநாயகிகளுக்கும் பாடியிருக்கும் போது....குஷ்புவிலா தொடங்குவது என்று கேட்கலாம். குஷ்பு நடிக்க வந்த பொழுது பி.சுசீலா திரையுலகில் பாடிக்கொண்டிருந்தாலும் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும். அப்படியிருந்தும் குஷ்புவிற்கு ஒரு அருமையான பாடலை இசையரசி பாடியிருக்கிறார்.

பொங்கல பொங்கல வைக்க
மஞ்சள மஞ்சள எடு
தங்கச்சி தங்கச்சி தங்கச்சி
நஞ்சையும் புஞ்சையும்
இந்தப் பூமியும் சாமியும்
என்றும் நம்கட்சி நம்கட்சி நம்கட்சி

ஆமாம். வருஷம் 16. மாபெரும் வெற்றி பெற்ற படம். பாசில், குஷ்பூ, கார்த்திக் ஆகியோருக்கு நல்லதொரு முன்னேற்றத்தைக் கொடுத்த படம்.

இளையராஜாவின் இசையில் வந்த மிகவும் அருமையானதொரு பாடல். காதல் துளிர்த்த பொழுதில் பாடும் பாடல். பூப்பூக்கும் மாசம் தைமாசம் என்று கேட்கும் போதே ஒரு மகிழ்ச்சி பரவுமே. இதோ இந்தச் சுட்டிக்குச் செல்லுங்கள். பாடலைப் பார்க்கவும் கேட்கவும் முடியும். கேட்டு ரசியுங்கள். அஞ்சலிதேவிக்கும் சாவித்திரிக்கும் பத்மினிக்கும் கே.ஆர்.விஜயாவிற்கும் பொருந்திய குரல் குஷ்புவிற்கும் அழகாகப் பொருந்துவதைப் பாருங்கள்.

இசையரசியின் தமிழ் உச்சரிப்பு குறித்துச் சொல்லிச் சொல்லி முடியவில்லை. பூமியும் என்று ஒரு சொல் பாட்டில் வருகிறது. bhoomi என்று அதைப் பொதுவாக உச்சரிப்போம். ஆனால் இந்தப் பூமியில் என்று வருகையில் நடுவில் ப் என்ற ஒற்று இருக்கிறது. முறையாகத் தமிழைச் உச்சரித்தால் இந்தப் poomiyum என்று வரும். அதை இசையரசியின் குரலிலும் இந்தப் பாட்டில் கேட்கலாம்.

குஷ்புவிற்கு வேறு எந்தப் பாடலும் பாடியிருக்கிறாரா என்று தெரியவில்லை. தெரிந்தால் சொல்லுங்கள். இது ஒன்றுதான் என்று வைத்துக் கொண்டாலும்.....முத்தான பாடல்.

நன்றி
1. குஷ்பூ படம் - www.bollywoodsagaram.com
2. பூப்பூக்கும் மாசம் பாடல் - விஜயகுமாரின் யூடியூப் பக்கங்கள்

அன்புடன்,
கோ.இராகவன்

7 comments:

  1. பொங்கல பொங்கல மற்றும் பூபூக்கும் மாசம் சூப்பர் சாங்..

    இந்த தொடர் தொடர வாழ்த்துக்கள் மேட்டி. :-)

    ReplyDelete
  2. பாடலுக்கு நன்றி ராகவன், நேற்று நடந்த துயர சம்பவத்தினைத் தொடர்ந்து இசைப்பதிவை என்னால் இடமுடியவில்லை.

    இனிமையான பாடல், பாடலைக் கேட்கும் போது மனசுக்குள் ஆயிரம் பூக்கள் பூக்கும்.

    ReplyDelete
  3. ராகவன், ரொம்ப அருமையான பாடல்.

    பூப்பூக்கும்னு பாடும்போதே மனசில
    பூ விரிகிற உனர்ச்சி வரும். அவங்க ஆயுசும் ஆரோக்கியத்தோடயும் இருக்கணும்.

    ReplyDelete
  4. cute and romantic song!!
    one of my all time favourites!

    பதிவிட்டதற்கு மிக்க நன்றி அண்ணா!! :-)

    ReplyDelete
  5. // Collapse comments

    .:: மை ஃபிரண்ட் ::. said...
    பொங்கல பொங்கல மற்றும் பூபூக்கும் மாசம் சூப்பர் சாங்..

    இந்த தொடர் தொடர வாழ்த்துக்கள் மேட்டி. :-) //

    வாங்க மை ஃபிரண்டு. ஆமா நல்ல பாட்டுதான் இது. அது சரி..அதென்னது மேட்டி வேட்டின்னு? :))))

    // கானா பிரபா said...
    பாடலுக்கு நன்றி ராகவன், நேற்று நடந்த துயர சம்பவத்தினைத் தொடர்ந்து இசைப்பதிவை என்னால் இடமுடியவில்லை. //

    புரிகிறது பிரபா. எனக்கு இங்கு செய்தி தெரியத் தாமதமானது. என்னுடைய ஆழ்ந்த இரங்கல்கள். இதையும் கடந்து போவோம்.

    // இனிமையான பாடல், பாடலைக் கேட்கும் போது மனசுக்குள் ஆயிரம் பூக்கள் பூக்கும். //

    உண்மைதான். காதல் பூக்கும் பொழுது வரும் பாட்டல்லவா. அதான் ஆயிரம் பூக்கள் பூக்கின்றன.

    ReplyDelete
  6. //காதல் பூக்கும் பொழுது வரும் பாட்டல்லவா. அதான் ஆயிரம் பூக்கள் பூக்கின்றன.
    //

    அட இராகவா! நீயும் காதல் வலைல விழுந்தாச்சா?

    ReplyDelete