Friday, 16 May 2008

பாட்டுச் சொல்லிக் கொடுத்த நடுவர் பி.சுசீலா

"ராகமாலிகா" என்னும் தொலைக்காட்சி இசை நிகழ்வில் நடுவராக இசையரசி பி.சுசீலா மற்றும் இசையமைப்பாளர் ரமேஷ் விநாயகம் கலந்து கொண்டிருந்தார்கள். அதில் ஒரு பாகத்தை இங்கே தருகின்றேன். "அத்தான் என் அத்தான்" என்ற பாடலை இளம் போட்டியாளர் பாடியபோது பி.சுசீலா இந்தப் பாடலின் ஏற்ற இறக்கங்களைச் சொல்லிக் கொடுத்துச் சிறப்பிக்கின்றார்.அப்போது கூடவே ரமேஷ் விநாயகமும் தன் பங்கிற்குக் கொடுக்கும் ஆலோசனையையும் காணொளியில் பார்த்து ரசியுங்கள்.

6 comments:

  1. நான் அதிகம் கேட்ட பழைய பாடல்களில் இதுவும் ஒன்று :)))

    ReplyDelete
  2. "அத்தானில்" இவ்வளவு ரெக்னிக்கா..?! :-)

    ReplyDelete
  3. ரொம்பவும் அழகான பாடல். இந்தப் பாட்டு மாதிரி எளிமையான பாடல் வரிகள் இருந்தா வாய்ப்புக் குடுங்கன்னு லதா மங்கேஷ்கர் எம்.எஸ்.விஸ்வநாதன் கிட்ட சொன்னாங்களாம். ஆனா அவரு கடைசி வரைக்கும் பயன்படுத்திக்கலை. ஏன்னா உச்சரிப்பு சரியிருக்காதாம். :D அவரு இசையமைப்பாளர்.

    இசையரசி பிறப்பால தெலுங்கா இருந்தாலும் அவங்க வாயில "நம்ம தமிழ்நாட்டுல"ன்னு வருது பாத்தீங்களா. முந்தி கூட ஒரு பேட்டியில தமிழும் தெலுங்கும் ரெண்டு கண்கள்னு சொன்னாங்க.ம்ம்ம் அவங்க பாடகி.

    நல்ல வீடியோவை பகிர்ந்தமைக்கு நன்றி பிரபா.

    ReplyDelete
  4. இந்தப்பாட்டு பாடறது கொஞ்சம் கஷ்டம் தான். குரல்ல ஒரு குளிர் மாதிரி பாவம் கொண்டு வந்து அருமையா பாடுவாங்க ப்.சுசீலா. நல்ல பாட்டு

    ReplyDelete
  5. ஆயில்

    சந்தடி சாக்கில் உங்களை இளமையான ஆளா காட்டீட்டீங்க வாழ்த்துக்கள் ;-)

    கோகுலன்

    அந்தக் காலத்தில் மெட்டிலேயே ஜாலம் போடுவார்களே

    ராகவன்

    என்னுடைய வானொலி அனுபவத்தில் நேயர் விருப்பம் வரும்போது பெண்கள் அதிகம் கேட்காத பாடல் இது ;-) என்னுடைய நிகழ்ச்சிகள் பலவற்றில் கொடுத்திருக்கின்றேன்.

    சின்ன அம்மணி

    பாடலைக் கேட்டுக் கருத்தளித்தமைக்கு மிக்க நன்றி

    ReplyDelete
  6. சர்வேசரே

    இந்தச் சிரிப்பின் அர்த்தம் என்னவோ ;-)

    ReplyDelete