நீண்ட நாட்களாக இசையரசி பதிவு வெறுமையாக இருக்கக் கூடாது என்பதற்காக ஒரு இனிய பாடலுடன் இந்த இடைவெளியை நிரப்புகின்றேன். இந்தப் பதிவு இசையரசி பி.சுசீலாவுடன் எஸ்.பாலசுப்ரமணியம் இணைந்து பாடும் ஒரு ஜோடிப் பாடல்.
இயக்குனர் ஆர்.சுந்தரராஜன் இயக்கிய படங்கள் என்றால் கண்ணை மூடிக்கொண்டே சொல்லி விடலாம், பாடல்கள் சிறப்பாக, இனிமையாக இருக்கும் என்று. ஆர்.சுந்தரராஜன் இளையராஜாவோடு கூட்டணி சேரும் போது மட்டுமல்ல, தேவாவோடு "என் ஆசை மச்சான்" போன்ற படங்களில் இணைந்தபோதும், "அந்த ராத்திரிக்கு சாட்சி இல்லை" திரைப்படத்தில் கே.வி.மகாதேவனோடு இணைந்தபோதும் கூட அந்தச் சிறப்பு இருந்தது.
சரணாலயம் திரைப்படம் ஆர்.சுந்தராஜன், எம்.எஸ்விஸ்வநாதனோடு இணைந்து பணியாற்றிய வந்த அருமையான பாடல்களோடு வந்த படமாகும். குறிப்பாக நான் இங்கு தரும் "நெடுநாள் ஆசை ஒன்று இந்த நெஞ்சினில் உதித்ததுண்டு" பாடலைக் கேளுங்கள், உண்மை புரியும். எம்.எஸ்.வி எண்பதுகளிலும் சோர்ந்து விடவில்லை என்பதற்கு இப்படியான பாடல்களும் மிகச்சிறந்த உதாரணங்கள்.