நீண்ட நாட்களாக இசையரசி பதிவு வெறுமையாக இருக்கக் கூடாது என்பதற்காக ஒரு இனிய பாடலுடன் இந்த இடைவெளியை நிரப்புகின்றேன். இந்தப் பதிவு இசையரசி பி.சுசீலாவுடன் எஸ்.பாலசுப்ரமணியம் இணைந்து பாடும் ஒரு ஜோடிப் பாடல்.
இயக்குனர் ஆர்.சுந்தரராஜன் இயக்கிய படங்கள் என்றால் கண்ணை மூடிக்கொண்டே சொல்லி விடலாம், பாடல்கள் சிறப்பாக, இனிமையாக இருக்கும் என்று. ஆர்.சுந்தரராஜன் இளையராஜாவோடு கூட்டணி சேரும் போது மட்டுமல்ல, தேவாவோடு "என் ஆசை மச்சான்" போன்ற படங்களில் இணைந்தபோதும், "அந்த ராத்திரிக்கு சாட்சி இல்லை" திரைப்படத்தில் கே.வி.மகாதேவனோடு இணைந்தபோதும் கூட அந்தச் சிறப்பு இருந்தது.
சரணாலயம் திரைப்படம் ஆர்.சுந்தராஜன், எம்.எஸ்விஸ்வநாதனோடு இணைந்து பணியாற்றிய வந்த அருமையான பாடல்களோடு வந்த படமாகும். குறிப்பாக நான் இங்கு தரும் "நெடுநாள் ஆசை ஒன்று இந்த நெஞ்சினில் உதித்ததுண்டு" பாடலைக் கேளுங்கள், உண்மை புரியும். எம்.எஸ்.வி எண்பதுகளிலும் சோர்ந்து விடவில்லை என்பதற்கு இப்படியான பாடல்களும் மிகச்சிறந்த உதாரணங்கள்.
''கன்னிப் பூங்கொடி கையை நீட்டிக் கிளையைத் தேடும் காட்சி கண்டேன். மஞ்சள் சூரியன் மேற்கில் காய்ந்து மலையைக் கூடும் கோலம் கண்டேன்......அது போல் நானும் வந்து இந்த.... அதை நேரிடையாகச் சொல்ல நான் நாணமில்லாதவள் அல்ல..... மிகவும் அழகான் இயற்கை வர்ணனையும் மாலைப் பொழுதின் மங்கையின் தவிப்பும் புலப்படுகின்றன.
ReplyDeleteகானா..எப்பவும் எந்த இசையமைப்பாளருக்கு பொற்காலம் எது சரிவுக்காலம் எதுன்னு நல்லா விவரிக்கிறீங்க.. :)
ReplyDeleteவணக்கம் கமல்
ReplyDeleteஅழகான அந்தக் கவிவரிகள் பாடலுக்கு இனிமை சேர்க்கின்றன இல்லையா.
வாங்க முத்துலெட்சுமி
ஏதோ என்னாலான சேவை ;)
ஆகா ஆகா மறந்திருந்த நல்லதொரு இனிய பாடலை மீண்டும் நினைவு கூர்ந்தமைக்கு நன்றி.
ReplyDeleteகேட்க அலுக்காத இனிமையான பாடல்.
இதைக் கதாநாயகி வரிசையிலும் போடலாம். நளினிக்குத்தானே பாட்டு. :)
இதே படத்தில் "எழுதுகிறாள் ஒரு புதுக்கவிதை.. இருவிழியால் இந்தப் பூங்கோதை" என்று இனிய பாடலும் உண்டு.
என்னவொரு இனிமையான பாடல் கலக்கீட்ட்டீங்க கானா சார். தேன்கிண்ணத்துல கவனம் செலுத்த வேண்டியிருந்ததால் பா.நி.பா தளத்தை கூட சரிவர கவனிக்கமுடியவில்லை. சுந்தர் என்னை தூக்கப்போறார் என்பது மட்டும் உறுதி. நானும் வர்ரேன் வர்ரேன் கூடிய சீக்கிரம். பதிவிற்க்கு நன்றி.
ReplyDeleteஜிரா, ரவி
ReplyDeleteமிக்க நன்றி பாடலைக் கேட்டு ரசித்து உங்கள் கருத்தைப் பகிர்ந்தமைக்கு. சீக்கிரம் இசையரசிக்கு பதிவை தாருங்கள்.
:)
ReplyDeleteஉங்களை எப்படி பின்தொடர்வது..அதற்கான வசதியே உங்கள் தளத்தில் இல்லையே...
ReplyDelete