Monday, 12 January 2009

இசையரசியின் இனிமையான தெரிவுகள்



இசையரசியின் இனிமையான தெரிவுகள்

இசையரசியின் அபிமானிகளே ரொம்ப நாள் கழித்து வந்துள்ளேன். இசையரசியின் இனிமையான பாடல்கள் எல்லோரும் கேட்ட பாடல்கள் தான். அவரின் வாழ்க்கை தகவல்களுடன், திரைப்படத்துடன் கொண்ட தகவல்களூடன். அற்புதமான ஒலித்தொகுப்பு சென்ற வாரத்தில் வானொலியில் ஒலிப்பரப்ப்பட்டது. அறிவிப்பாளர் மிகவும் அழகாக அவரின் தகவல்க்ளை தொகுத்து வழங்கியது பாராட்டுக்குரியது. இதுபோல் ஒலித்தொகுப்புகள் இந்த தளத்தில் வந்துள்ளாதா என்று தெரியவில்லை? (ஜீரா சார், பிரபாசார் நீங்கதான் சொல்லனும்)இந்த பதிவு வரும் நாள் என் திருப்பூர் அன்பர் திரு. அகிலா விஜயகுமார் அவர்கள் மூலம் என்னிடம் இசையரசி பற்று சில தகவல்கள் கேட்டார்கள். நான் இணையத்தில் தேடி பிடித்து உடனே அனுப்பிவைத்தேன். அறிவிப்பாளருக்கு மிக்க மகிழ்ச்சியாக இருந்தது. இசையன்பர்களே ஒலித்தொகுப்பை கேட்டு உங்கள் மேலான உணர்வுகளை ஒரு வரியில் எழுதுங்கள். ஆக்கத்தை உருவாக்கியவருக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். இசையரசியின் ரசிகர்கள் சார்பாக. ஆக்கத்தை உருவாக்கிய அறிவிப்பாளர் தொண்டாமுத்தூர் திரு. ரவி அவர்களூக்கு வாழ்த்துக்கள். நன்றி.

குறிப்பு: ஒலிக்கோப்பின் நீளம் அதிகம் ஆகையால் தரவிறக்கம் செய்யும் வகையில் தரப்பட்டுள்ளது. இசையன்பர்கள் இசையரசியின் மழையில் மறுபடியும் நனைய வாருங்கள் என்று அழைக்கின்றேன். கோவை ரவி

Get this widget | Track details | eSnips Social DNA

5 comments:

  1. ஒலிக்கோப்புக்கு மிக்க நன்றி ரவிசார், இது போன்று இன்னும் நிறைய தாருங்கள்.

    ReplyDelete
  2. பிரபா சார்,

    ஆஹா.. ஆஹா.. அதுக்குள்ளே கேட்டுவிட்டீங்களா. நிகழ்ச்சி ஒரு மணிநேரம் போகும் சாமி. எந்த வேளையில் இருந்தாலும் முழுமூச்சோடு கேட்டு விடுங்கள். தேன்கிண்ணத்தில் என்னுடைய என்னுடைய பதிவு சீக்கிரம் வருது. அதையும் கேட்டுடுங்க சரீங்களா. தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  3. பிரபா சொல்வது உண்மை. இது போலப் பாடல்கள் கேட்கக் கேக இனிமை. இசையின்பம் பெருக்கெடுத்த நாட்கள்
    அதுவும் இந்தப் பாடலில் சுசீலாம்மா குரல் இரக்கத்தோடு இழைவது அமுதம்.நன்றி.

    ReplyDelete
  4. பாதகாணிக்கை படத்தில் வரும், 'அத்தை மகனே போய் வரவா ' பாடலை தரவிறக்கம் செய்ய வேண்டும். அந்தப் பாடலை வலையேற்றினால் உதவியாக இருக்கும்.

    ReplyDelete
  5. திரு.ராப் அவர்களே (என்ன பேருங்க சார்?)

    இந்த ஒலித்தொகுப்பு முழுவதுமே தரவிறக்கம் செய்யலாம். track details க்ளிக் செய்தால் நீங்கள் விரும்பும் பாடல் கிடைக்கும். உங்கள் ஊக்கத்திற்க்கு நன்றி.

    ReplyDelete