Thursday, 24 January 2008

சோலை புஷ்பங்களே...என் சோகம் சொல்லுங்களேன்..!

"இங்கேயும் ஒரு கங்கை" திரைப்படம், முரளி மற்றும் தாரா (பின்னாளில் கன்னடப் படவுலகில் பின்னிய அதே தாரா) நடிக்க, மணிவண்ணன் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம். இளையராஜாவின் இசையில் மணிவண்ணன் இயக்கிய எல்லாப் படங்களிலும் எல்லாப் பாடல்களுமே பெரிதாகப் பேசப்படாவிட்டாலும், நூறாவது நாள் படத்தில் வரும் "விழியிலே", தீர்த்தக்கரையினிலே படத்தில் வரும் "விழியில் ஒரு கவிதை", முதல் வசந்தம் திரையில் வரும் "ஆறும் அது ஆழமில்ல" வரிசையில் வருவது தான் இந்த இங்கேயும் ஒரு கங்கை திரைப்பாடலான "சோலை புஷ்பங்களே" என்ற பாடல்.

இசையரசி சுசீலாவுடன், இணைந்து பாடியிருக்கின்றார் கங்கை அமரன். இளையராஜாவைப் பொறுத்தவரை தன் தம்பி கங்கை அமரன் இயக்கிய படங்களில் கூட அதிகம் வாய்ப்புக் கொடுத்ததில்லை. கங்கை அமரனுக்கு கிடைத்த மிகச் சிறந்த பாடல்களில் இது தான் என் தெரிவில் மிகச் சிறந்தது என்பேன். கூடவே சுசீலா அம்மாவும், அமரனோடு சேர்ந்து ஒரே நீரோட்டத்தில் கலந்து பாடுவது மனசுக்குள்ளுள் கங்கை போல பிரவாகிக்கின்றது. காதல் சோகம் மட்டுமல்ல, இடிந்து உட்கார்ந்திருக்கும் எந்த மனசுக்கும் இந்தப் பாடல் ஓர் ஒத்தடம்.



Get this widget | Track details | eSnips Social DNA

10 comments:

  1. ஏன் இளையராஜா இசையில் இளமை காலங்கள் படத்தில் அத்தனை பாடல்களுமே ஹிட் தான்.

    இளையராஜா இசையில் சுசீலா பாடியதில் பாட வந்ததோர் கானம் பாடல் என்னை மிகவும் கவர்ந்தது

    ReplyDelete
  2. அழகானப் பாடல், அருமையான பாடகி.

    ஆனாலும் என்க்கொரு வருத்தம் உண்டு பிரபா.

    வாணி ஜெயராம் என்றொரு பாடகி உண்டு. என்ன ஒரு குரல்?
    சிலமாதங்களுக்கு முன் அவரது பாடல் நிகழ்ச்சி ஒன்று விஜய் டீவியில் ஒளிபரப்பினார்கள். கண்களில் கண்ணீருடந்தான் பார்த்தேன்.

    எப்பேற்பட்ட பாடகி? அவர்களின் பாடல்களையும் போடுவீர்களா?

    நானா? பாடுவது நானா?, மேகமேமேகமே

    என்ன அருமையான பாடல்கள்.

    ReplyDelete
  3. உண்மைதான் நண்பரே

    பதிவை எழுதும்போது இளமைக்காலங்கள் திரைப்படத்தை மறந்துவிட்டேன். அந்தப் படத்தில் எல்லாப்பாட்டுமே இனிமை கூடவே சூப்பர்ஹிட். மிக்க நன்றி ஞாபகப்படுத்தியதற்கு.

    ReplyDelete
  4. அருமையான பாடலை தந்தமைக்கு நன்றி தல ;)

    ReplyDelete
  5. இதே பாடல் யாழ்ப்பாண கல்லூரி (வட்டுக்கோட்டை) தயாரித்த கல்லூரி வசந்தம் திரைப்படத்திலும் இடம் பெற்றிருந்தது. கல்லுண்டாய் வெளிகளில் படமாக்கப்பட்டிருந்தது.

    நாயகனின் காதலை ஏற்க மறுக்கிறாள் நாயகி. நாயகன் படிப்பு வேலை என்பவற்றைக் கைவிட்டு காதலே கதியென கிடக்க அவனின் தந்தை இறந்து போகிறார். பிறகு பொடியன் திருந்திறான். பிறகு நாயகி அவனது காதலை ஏற்க.. அவன் மறுக்கிறான்..

    இதுதான் கல்லூரி வசந்தத்தின் கதை. இதே கதையை வேறெந்த தமிழ்சினிமாவிலும் நீங்கள் பார்த்திருந்தால்.. :((

    கல்லூரி வசந்தம் வெளியானது 85 களில்..

    ReplyDelete
  6. பாடலுக்கு நன்றி!
    அமரனுக்கு கிடைத்த இன்னொரு நல்ல பாடல் 'பூஜைக்கேத்த பூவிது' -சித்ராவின் முதல் பாடல்?

    ReplyDelete
  7. மிகவும் அருமையான பாடல் பிரபா. தாரா என்றால் விண்மீன். தமிழில் மின்னாமல் போனாலும் கன்னடத்தில் பல சிறப்பான படங்களில் நன்றாக நடித்தவர். கன்னூரு ஹெகடத்தி, உண்டு ஹோதா கொண்டு ஹோதா போன்ற படங்களில் இவரது நடிப்பு பாராட்டுக்குறியது. சமீபத்தில் வந்த குப்பியிலும் கலக்கியிருக்கிறாரே.

    இந்தப் பாடலின் பின்னணியில் ஒரு செய்தி உண்டு. வேறொரு கதையை வைத்துக் கொண்டு எல்லாப் பாடல்களையும் பதிவு செய்து விட்டார்கள். பிறகுதான் கதையை மாற்றினார்கள். ஆனால் அதே பாடல்களை வைத்துக் கொண்டு படத்தை முடித்தார்கள்.

    கங்கை அமரன் இளையராஜாவின் இசையில் பிரபலமான பாடகிகளுடன் ஒரு பாட்டாவது பாடியுள்ளார். இசையரசியுடன் இந்தப் பாடல். வாணி ஜெயராமுடன் ஒரு கைதியின் டைரி படத்திற்காக ஒரு பாடல். பாட்டு மறந்து விட்டது. எஸ்.ஜானகி அவர்களுடனும் பாடியிருக்கிறார். சித்ராவோடும் பாட்டு உண்டே.

    ReplyDelete
  8. வணக்கம் புதுகைத் தென்றல்

    இது சுசீலா அம்மாவுக்கான தனித்துவமான தளம், றேடியோஸ்பதியில் வாணி வருவார்

    நன்றி தல கோபி

    சயந்தன்

    85 ஆண்டென்றால் எனக்கு நினைவில்லை, உங்களைப் போல ஆட்களுக்கு தான் தெரிந்திருக்கும் ;-)


    தங்ஸ்

    பூஜைக்க்கேத்த பூவிது சித்ராவின் முதல் பாட்டு தான், நன்றி ;-)

    வாங்க ராகவன்

    சுவையான தகவல்களுக்கு நன்றி

    ReplyDelete
  9. தனிமையில் கேட்பதற்கு இனிமையான பாடல். நீங்கள் கடைசிவரியில் கூறியதையே தான் நானும் சொல்லவேண்டியிருக்கிறது.

    ReplyDelete
  10. வருகைக்கு நன்றிகள் நிர்ஷான்

    ReplyDelete