Saturday, 26 January 2008

”பத்மபூஷன்” சுசீலாம்மா



நெஞ்சில் ஓர் ஆலயம் என்ற படத்தில் கண்ணதாசன் வரிகளில் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களின் இசையமைப்பில் அமைதியான அழகான முத்தான உச்சரிப்பில் சுசீலாம்மாவின் ஓரு பாடல் என்மனதை கொள்ளை கொண்ட பாடல்களில் இதுவும் ஒன்று நீங்களூம் கேளூங்கள்.

Get this widget | Track details | eSnips Social DNA





தென் இந்தியாவின் லதாமங்கேஷ்கர் என்று திரு எஸ்.பி.பி அவர்களால் வர்ணிக்கப்பட்ட பி.சுசீலாம்மாவுக்கு இந்தியாவின் மிகப்பெரிய கவுர விருதான “பத்மபூஷன்” விருது வழங்கியிருப்பது. இசைப் பிரியர்களான நம் அனைவருக்கும் மிகப்பெருமை. அவரது இனிமையான குரலின் அடிமைகளில் அடியேனும் ஒருவன். பத்மபூஷன் சுசீலாம்மாவை வாழ்த்த வயதில்லையென்றாலும் அவர் நீடுழி வாழ வாழ்த்தி வணங்குகிறேன்.

போடோ உபயம்: நன்றி பி.சுசீலாம்மா தளம், மற்றும் லக்‌ஷ்மன் ஸ்ருதி தளம்.


Get this widget | Track details | eSnips Social DNA


சுசிலம்மாவின் அழகான உச்சரிப்புக்கு மற்றுமொரு அத்தைமகள் ரத்தினத்தை என்ற பாடல் பணக்காரகுடும்பத்தில், கண்ணதாசன் வரிகளில் எம்.எஸ்.விஸ்வநாதனின் இசையமிப்பில் என் மனதை மயக்கும் இந்த பாடலையும் அவர் பாதங்களில் உங்கள் சார்பாகவும் இசைப்பூக்களாக சமர்ப்பித்து வணங்குகிறேன்.

8 comments:

  1. இசை சக்ரவர்த்தினி சுசீலா அவர்களுக்கு இந்த விருது மிகவும் கால தாமதமாக கிடைத்திருக்கிறது. எனினும், அவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். அவரது பாடல் "நெஞ்சத்திலே நீ நேற்று வந்தாய், நேற்று முதல் ஓர் நினைவு தந்தாய்" இத்தனை ஆண்டுகளுக்கு பிறகு கூட நினைத்தாலே இனிக்கும்.

    ReplyDelete
  2. மிகவும் பொருத்தமான விருது. காலம் கடந்து கிடைத்தாலும் பொருத்தாம விருதே. இசையரசிக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

    இன்னும் ஒருவருக்கு இந்த விருது கிடைக்க வேண்டியிருக்கிறது. அவர்தான் மெல்லிசை மன்னர். அவருக்கும் கிடைத்து விட்டால் பத்மபூஷன் விருது சிலுவையிலுருந்து இறங்கிவிடும்.

    ReplyDelete
  3. வாங்க எக்ஸ்பட்குரு அவர்களே,
    //"நெஞ்சத்திலே நீ நேற்று வந்தாய், நேற்று முதல் ஓர் நினைவு தந்தாய்" இத்தனை ஆண்டுகளுக்கு பிறகு கூட நினைத்தாலே இனிக்கும்.//

    நீங்கள் சொன்னது முற்றிலும் சரியே. அதே போல் தான் இந்த பதிவில் நான் பதிந்த முத்தான முத்தல்லவோ மற்றும் அத்தைமகள் பாடலும் காலத்தால் அழிக்கமுடியாத பாடல்.
    வருகைக்கும் மிக்க நன்றி.

    ராகவன் சார்,

    //இன்னும் ஒருவருக்கு இந்த விருது கிடைக்க வேண்டியிருக்கிறது. அவர்தான் மெல்லிசை மன்னர். அவருக்கும் கிடைத்து விட்டால் பத்மபூஷன் விருது சிலுவையிலுருந்து இறங்கிவிடும்.//

    நிச்சயம், நிச்சயம். அப்படியே டி.எம்.எஸ் அண்ணா பெயரையும் சேர்த்துகோங்க சார். மெல்லிசை மன்னரும், டி.எம்.எஸ் அண்ணாவும் சேர்ந்து கொடுக்காத படைப்புகளா? இப்ப இருக்கிறவங்க தந்துறபோறாங்க?

    ReplyDelete
  4. ஜிரா சொன்னது போல, இது காலம் கடந்த செயல் என்றாலும், இப்போதாவது செய்தார்களே என்றே நினைக்கத் தோன்றுகிறது. சுசிலாம்மாவுக்கு கொடுத்ததால் அவார்ட்க்குத்தான் மரியாதை ஏற்பட்டிருக்கிறது.

    எம்.எஸ்.வி, டி.எம்.எஸ் போன்ற ஜாம்பவான்களையும் கவனிப்பார்களாக.

    ReplyDelete
  5. வாங்க மதுரையம்பதி,

    //எம்.எஸ்.வி, டி.எம்.எஸ் போன்ற ஜாம்பவான்களையும் கவனிப்பார்களாக.//

    நீங்க சொன்ன மாதிரி எம்.எஸ்.வி சார்க்கு ஓட்டு போடற லிங் போல டி.எம்.எஸ் அண்ணாவுக்கும் ஒரு ஓட்டு பெட்டியை யாராவது ரெடி பண்ணலாமே? இதுவும் என் ஆசையில் ஒன்று. அவர் வாழும் காலத்திலேயே அவருக்கு ஒரு விருது கிடைக்க நம்மாள் ஆன உதவி செய்யலாமே? என்னங்க நான் சொல்றது.?

    ReplyDelete
  6. பதம்பூஷன் விருது இன்று விருது பெற்றுவிட்டது
    ஆம் சுசீலாம்மாவிடம் வந்து சேர்ந்திருக்கிறதே..

    இவ்வளவு நாட்கள் கழித்து இன்று தான் இவர்களுக்கு ஞானோதயம் வந்திருக்கிறது இருந்தாலும் வாழ்த்துக்கள்

    இதேபோல் தாதாசாகிப் பால்கே விருதையும் வழங்குவார்கள் என நம்புவோம்

    ReplyDelete
  7. //ராஜேஷ் said...
    பதம்பூஷன் விருது இன்று விருது பெற்றுவிட்டது
    ஆம் சுசீலாம்மாவிடம் வந்து சேர்ந்திருக்கிறதே..//

    சரியாகச் சொன்னார் ராஜேஷ்

    வாழ்த்துக்கள் சுசீலாம்மா

    ReplyDelete
  8. Better late than never!!! My prdound wishes as HIS ardent fan and myself

    ReplyDelete