2 comments

இசை ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள் ..

புத்தாண்டு சிறப்பு பாடலாக இதோ ...

தேனே தென்பாண்டி மீனே பாடலின் தெலுங்குவடிவம்..
தமிழில் ஜானகி பாடிய எத்தனையோ பாடல்களை தெலுங்கில் இசையரசி பாடியிருப்பார்..அப்படி அவர் பாடிய பாடலக்ளில் இது மிகவும் சிறந்த பாடல்
கேட்டு ரசியுங்கள்

படம்: உதயகீதம்
பாடல்: லாலி நா பால வெல்லி

0 comments



பொன்னழகு ‍ பெண்ணழகு‍





திரையிசையில் எத்தனையோ குரல்கள் ஒலித்திருந்தாலும்
பெண்மையின் குரலாக ஆம் பெண்மையின் மென்மை, கோபம் என எல்லாவகையாகவும் ஒலித்த குரல் இசையரசியுனுடைய குரல்

இசையரசியும் எல்.ஆர். ஈஸ்வரியும் எத்தனையோ (female dueட்ச்) அதாவது
இரு பெண்களுக்கு பாடியிருக்கிறார்கள்
இங்கே ஆண்வேடமிட்டவருக்கு எல்.ஆர்.ஈஸ்வரியும், மஞ்சுளாவிற்கு இசையரசியும் குரல்கொடுக்க ஒரு அழகான மேடை நாடகம் அரங்கேறுகிறது

ரிக்ஷாக்காரனில் அதிகம் பிரபலமடையாத பாடல் ..
வாலியின் வரிகளும் எம்.எஸ்.வியின் இசையும் அற்புதம்

எம்.ஜி.ஆர் படங்கள் என்றாலே எம்.எஸ்.வி அவர்களுக்கு அல்வா சாப்பிடுவது போல .. ஒவ்வொரு பாடலும் கடலில் மூழ்கி எடுத்த முத்து போல விலைமதிப்பற்றது... இதிலும் இந்த பாடலை கேளுங்கள் .. அடேயப்பா மேடை பாடலில் கூட இத்தனை விஷயங்களை புகுத்த முடியும் என நிரூபித்திருப்பார்..

இசையரசியின் குரலில் கம்பீரமாக ஒலிக்கும் பொன்னழகு பெண்மையின் அழகு

பாடலை பார்த்து மகிழுங்கள்

13 comments

"தேர் கொண்டு சென்றவன் யாரென்று சொல்லடி தோழி" எத்தனை முறை கேட்டாலும் அலுக்காத மெட்டும், இசையும் கலந்து மனசுக்குள் நர்த்தனமாடும் பாட்டு. சன் டீவியின் சப்தஸ்வரங்கள் போன்ற இசைநிகழ்ச்சிகளில் அதிகம் பாடப்பட்டு அடிக்கடி புதுப்பிக்கப்படும் பாடலும் கூட. நடன நிகழ்ச்சிகள் போன்ற கலைவிழாக்களுக்கு அதிகம் உபயோகிக்கப்படும், உபயோகிக்கப்படக் கூடிய பாங்கில் வடிவமைக்கப்பட்டிருக்கின்றது இவ்வினிய பாடல்.

பாடலின் ஒவ்வொரு வரிகளும் இசையரசியினால் மெருகேற்றப்பட்டு இன்னொரு பாடகியை இப்பாடலுக்கு நிரப்பமுடியா அளவுக்குச் சிறப்பாகச் செதுக்கப்பட்டிருக்கின்றது. உதாரணத்துக்கு

"ஊமைத் தென்றல் வந்து என்னைக் கொல்கிறதே,
கண்களிலே உப்பு மழை பெய்கிறதே"

என்ற வரிகளை அவர் பாடும் கணம் கேட்கும் போது நெஞ்சில் பிரவாகம் அள்ளி வியாபிக்கின்றது. தேர் கொண்டு சென்றவனைத் தன் தோழியிடம் வினாவும் பாங்கை உணர்வுபூர்வமாக வரிகளுக்கு ஏற்ற இறக்கம் கொடுத்துச் சிறப்பித்திருக்கின்றார் இசையரசி பி.சுசீலா. "என்னவொரு வேதனை.....பத்துவிரல் சோதனை" என்று அவர் கனியும் போது தேர் கொண்டு சென்றவனைத் தேடிப்பிடித்துக் கொண்டு வர மனம் பரபரக்கின்றது. வைரமுத்துவின் வைர வரிகள் ஓவ்வொன்றுக்கும் ஓவ்வொரு பொற்காசுகள் (இருந்தால்) கொடுக்கலாம்.


இசைஞானி இளையராஜா இசையில் இசையரசி பி.சுசீலா பாடும் இப்பாடல் "எனக்குள் ஒருவன்" திரையில் இடம்பெற்றதாகும். இத்திரைப்படம் 1984 இல் கவிதாலயா தயாரிப்பில் கமல்,ஸ்ரீபிரியா நடிப்பில் வந்த மறுபிறவிக்கதை. இயக்கம் எஸ்.பி.முத்துராமன்.
சி.வி.ஆர், கோபி போன்ற வாலிபக் குருத்துக்களுக்காக ஒரு தகவல் இப்படத்தில் தான் ஷோபனா தமிழில் அறிமுகமானார்.

இதே பாடலின் மெட்டை மலையாளத்தில் அதே ஆண்டு வெளிவந்த "ஒன்னானு நம்மள்" திரைப்படத்தில் கே.ஜே.ஜேசுதாசை வைத்துப் பாட வைத்திருக்கின்றார் இசைஞானி. அதைப்பற்றி இங்கே வீடியோஸ்பதி பதிவில் குறிப்பிட்டிருக்கின்றேன்.


இன்றைய கதாநாயகி வரிசையில் ஸ்ரீபிரியாவிற்காக அமையும் இப்பாடல் அவருக்கான கன கச்சிதமான தேர்வென்றே நினைக்கின்றேன். அவர் பரத நாட்டியாமாடும் இப்ப படத்தில் அவர் நடித்திருக்கின்றார். எண்பதுகளின் ஆரம்பத்தில் இவர் முன்னணியில் இருந்த காலத்தில் பல பாடகிகள் குரல் கொடுத்திருந்தாலும் பி.சுசீலாவின் குரல் இவரின் குரல் அமைப்புக்கும் ஏற்றதென்றே நினைக்கின்றேன். அன்னை ஓர் ஆலயம் திரையில் வரும் "நதியோரம் நாணல் ஒன்று நாட்டியம் ஆடிடக் கண்டேன்" என்ற ஜோடிப்பாடலும் ஸ்ரீபிரியாவுக்கான பி.சுசீலாவின் இன்னொரு இனிய பாடல். (கஷ்டப்பட்டு வீடியோவை ஓடவிட்டு பதிவுக்காகப் பொருத்தமான இப்பாடலின் screen shot ஐயும் எடுத்துப் போட்டிருக்கின்றேன்)

சரி, இனி தேர் கொண்டு சென்றவனை ரசியுங்கள்.

2 comments



எத்தனையோ மொழிகளில் சுசீலாம்மா பாடியிருந்தாலும் ஹிந்தியில் அவ்வளவாக பாடவில்லை என்பது எல்லோருக்கும் ஒரு குறையாகவே உள்ளது..




சலீல் செளத்ரி சுசீலாம்மாவை ஹிந்திக்கு அழைத்தும் ஏனோ சுசீலாம்மா செல்லவில்லை.. சலீல் செளத்ரி சொன்னது ஆஷாஜி மாதிரியும் இல்லாமல் லதாஜி மாதிரியும் இல்லாமல் புதுவிதமாக இருக்கிறது என்று தான் . அது 100/100 உண்மை என்பதை இந்த பாடலை கேட்டாலே தெரியும்

இதை தவிற இன்னும் சில பாடல்களை பாடியிருக்கிறார்.

இதோ " உய் மா பக்லி மேரா நாம் ரக் தியா"

படம்: பச்பன்
இசை: லக்ஷ்மிகாந்த் − பியாரிலால்



14 comments

80 கள் நடிகை ராதிகாவுக்குப் பொற்காலம் என்று தான் சொல்ல வேண்டும். நிறையப் படங்கள் இவரை மையப்படுத்தியே வந்திருந்தன. குறிப்பாக கலைஞர் கருணாநிதியின் வாயால் "கலையரசி" என்ற பட்டத்தையும் பெற்றதோடு அவரின் வசனத்தில் மிளிர்ந்த பல படங்களில் நடித்திருக்கின்றார் ராதிகா. கூடவே எஸ்.ஏ.சந்திரசேகரின் இயக்கத்தில் வெளிவந்தவை தான் பல.



இங்கே ஒலிக்கப் போகும் பாடல் தென்றல் சுடும் என்ற திரையில் இருந்து ஒலிக்கின்றது. கலைஞர் கருணாநிதியின் வசனத்தில் மனோபாலா இயக்கியது இப்படம். "Return to Eden" என்ற அவுஸ்திரேலியத் தொலைக்காட்சித் தொடர் பின்னர் ஹிந்தியில் நடிகை ரேகாவை வைத்து " Khoon Bhari Maang" வெளிவந்திருந்தது. அப்படமே "தென்றல் சுடும்" திரையின் மூலக் கரு.

கதாநாயகி வரிசையில் ராதிகாவைத் தேர்ந்தெடுத்து விட்டு இசையரசி பி.சுசீலாவின் குரலில் ராதிகா நடித்த இரண்டு பாடல்களில் எதை எடுப்பது என்று முதலில் திணறி விட்டேன். முதலில் "நினைவுச் சின்னம்" திரையில் வந்த "ஏலே இளங்கிளியே என்னாசைப் பைங்கிளியே" பாடலை எடுக்கலாமா என்று சபலம் தட்டியது. ஆனால் வெற்றி பெற்றதே "தென்றல் சுடும்" திரையில் வரும் "தூரி தூரி தும்மக்க தூரி" என்ற பாடல்.


இந்தப் பாடல் படத்தில் குழந்தைகளோடு ராதிகா பாடும் சந்தோஷ மெட்டிலும், பின்னர் இழந்த குழந்தைகளை நினைத்துப் பாடும் சோகராகமாக இரு வடிவில் இருக்கும். இங்கே நான் தருவது சோக மெட்டு. வழக்கமாக ராஜா இசையில் வரும் குடும்பப் பாட்டுக்கு விலக்காக புதுமாதிரி கிட்டார் இசையும் வாலியின் வரிகளுமாக குதூகலிக்கும் பாட்டு இது.


இசைஞானி இளையராஜாவின் இசையில் இசையரசி பி.சுசீலா பாடும் இந்த இனிய பாடலைக் கேட்டு மகிழுங்கள். வலையுலக சுட்டிப்பதிவர்களுக்கும் இப்பாடல் சமர்ப்பணம் ;-)
Get this widget | Track details | eSnips Social DNA