8 comments



நெஞ்சில் ஓர் ஆலயம் என்ற படத்தில் கண்ணதாசன் வரிகளில் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களின் இசையமைப்பில் அமைதியான அழகான முத்தான உச்சரிப்பில் சுசீலாம்மாவின் ஓரு பாடல் என்மனதை கொள்ளை கொண்ட பாடல்களில் இதுவும் ஒன்று நீங்களூம் கேளூங்கள்.

Get this widget | Track details | eSnips Social DNA





தென் இந்தியாவின் லதாமங்கேஷ்கர் என்று திரு எஸ்.பி.பி அவர்களால் வர்ணிக்கப்பட்ட பி.சுசீலாம்மாவுக்கு இந்தியாவின் மிகப்பெரிய கவுர விருதான “பத்மபூஷன்” விருது வழங்கியிருப்பது. இசைப் பிரியர்களான நம் அனைவருக்கும் மிகப்பெருமை. அவரது இனிமையான குரலின் அடிமைகளில் அடியேனும் ஒருவன். பத்மபூஷன் சுசீலாம்மாவை வாழ்த்த வயதில்லையென்றாலும் அவர் நீடுழி வாழ வாழ்த்தி வணங்குகிறேன்.

போடோ உபயம்: நன்றி பி.சுசீலாம்மா தளம், மற்றும் லக்‌ஷ்மன் ஸ்ருதி தளம்.


Get this widget | Track details | eSnips Social DNA


சுசிலம்மாவின் அழகான உச்சரிப்புக்கு மற்றுமொரு அத்தைமகள் ரத்தினத்தை என்ற பாடல் பணக்காரகுடும்பத்தில், கண்ணதாசன் வரிகளில் எம்.எஸ்.விஸ்வநாதனின் இசையமிப்பில் என் மனதை மயக்கும் இந்த பாடலையும் அவர் பாதங்களில் உங்கள் சார்பாகவும் இசைப்பூக்களாக சமர்ப்பித்து வணங்குகிறேன்.

10 comments

"இங்கேயும் ஒரு கங்கை" திரைப்படம், முரளி மற்றும் தாரா (பின்னாளில் கன்னடப் படவுலகில் பின்னிய அதே தாரா) நடிக்க, மணிவண்ணன் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம். இளையராஜாவின் இசையில் மணிவண்ணன் இயக்கிய எல்லாப் படங்களிலும் எல்லாப் பாடல்களுமே பெரிதாகப் பேசப்படாவிட்டாலும், நூறாவது நாள் படத்தில் வரும் "விழியிலே", தீர்த்தக்கரையினிலே படத்தில் வரும் "விழியில் ஒரு கவிதை", முதல் வசந்தம் திரையில் வரும் "ஆறும் அது ஆழமில்ல" வரிசையில் வருவது தான் இந்த இங்கேயும் ஒரு கங்கை திரைப்பாடலான "சோலை புஷ்பங்களே" என்ற பாடல்.

இசையரசி சுசீலாவுடன், இணைந்து பாடியிருக்கின்றார் கங்கை அமரன். இளையராஜாவைப் பொறுத்தவரை தன் தம்பி கங்கை அமரன் இயக்கிய படங்களில் கூட அதிகம் வாய்ப்புக் கொடுத்ததில்லை. கங்கை அமரனுக்கு கிடைத்த மிகச் சிறந்த பாடல்களில் இது தான் என் தெரிவில் மிகச் சிறந்தது என்பேன். கூடவே சுசீலா அம்மாவும், அமரனோடு சேர்ந்து ஒரே நீரோட்டத்தில் கலந்து பாடுவது மனசுக்குள்ளுள் கங்கை போல பிரவாகிக்கின்றது. காதல் சோகம் மட்டுமல்ல, இடிந்து உட்கார்ந்திருக்கும் எந்த மனசுக்கும் இந்தப் பாடல் ஓர் ஒத்தடம்.



Get this widget | Track details | eSnips Social DNA

8 comments

தை மாதம் என்றாலே தமிழர்களுக்கு ஓர் உவகை பொங்கும் காலம். எங்களூர் இயல்பிலேயே தோட்டம் நிறைந்த செம்பாட்டு வளம் கொழிக்கும் அசல் கிராமப்புறம் என்பதால் தைமாதப் பொங்கலின் மகத்துவத்தை நன்றாக உணர்ந்தே இத் தைப்பொங்கல் திருநாளைக் கொண்டாடுவோம். எங்களூர்ப் பொங்கல் நினைவுகளை "வெடி கொழுத்தி ஒரு ஊர்ப்பொங்கல்" என்று என் மடத்துவாசல் பிள்ளையாரடிப் பதிவில் பதிந்திருக்கின்றேன்.

தைப்பொங்கல் வரும் போது "தை"யைக் குறிக்கும் பாடல்களும் நினைப்புக்கு வரும். வானொலிகளும் அடிக்கொரு தடவை அவற்றைச் சலிக்காமல் ஒலிபரப்பும். அப்படியான ஒரு இனிய பாடல் தான் "பூப்பூக்கும் மாசம் தை மாசம்". இசையரசி பி.சுசீலா அனுபவித்துப் பாடியிருக்கும் அந்தப் பாடலின் இசை, சொல்லியும் தெரிய வேண்டுமா? அப்படியாயின் அது இளையராஜா என்று சொல்லி வைக்கின்றேன்.

இப்பாடலின் முதல் அடிகள் மட்டுமே தை மாசத்தைச் சொல்லி வைத்தாலும், மற்றைய வரிகளைப் பற்றிக் கவலைப்படாமல் மனதில் உவகை பொங்க இந்தக் காதல் ரசம் கொட்டும் பாடலைப் பொதுவான பாடலாக யாரும் ரசிக்கலாம்.

கதாநாயகி வரிசையில் குஷ்புவுக்காக பி.சுசீலா அவர்கள் பாடியிருக்கும் இப்பாடலை விடுத்து இன்னொரு மிகச் சிறந்த தேர்வைக் கொடுக்க முடியாது.

அனைவருக்கும் இனிய தைத்திருநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டு இப்பாடலை ரசித்து மகிழ உங்களை அழைக்கின்றேன்.


You Tube: nsureshrasr

2 comments




சுசீலாம்மா, பி.பி.ஸ்ரீனிவாச் கொஞ்சும் குரலில் அழகான பாடல் கேளுங்கள்.

படம்: பாசமலர்
பாடகர்கள்: பி.பி.எஸ், பி.சுசீலா
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன் ராமமூர்த்தி
பாடலாசிரியர்: கண்ணதாசன்

யார் யார் யார் அவள் யாரோ

ஊர் பேர் தான் தெரியாதோ
யார் யார் யார் அவள் யாரோ

ஊர் பேர்தான் தெரியாதோ

சலவைக் கல்லே சிலையாக
தங்கப் பாளம் கையாக
மலர்களில் இரண்டும் விழியாக
மயங்க வைத்தாளோ ஓஓ

யார் யார் யார் அவள் யாரோ

ஊர் பேர்தான் தெரியாதோ

முத்து மணிதிரள் ரத்தினமோ
மொய்குழல் மேக சித்திரமோ
முத்து மணிதிரள் ரத்தினமோ
மொய்குழல் மேக சித்திரமோ

செக்கச் சிவந்த இதழாமே
சிந்தும் புன்னகை மந்திரமோ
செக்கச் சிவந்த இதழாமே
சிந்தும் புன்னகை மந்திரமோ

யார் யார் யார் அவள் யாரோ

ஊர் பேர்தான் தெரியாதோ

கண்கள் மயங்கும் கண்ணானாள்
பெண்கள் மயங்கும் பெண்ணானாள்
கண்கள் மயங்கும் கண்ணானாள்
பெண்கள் மயங்கும் பெண்ணானாள்

நினைவில் மயங்கும் பொருளானாள்
நிலவில் மயங்கும் இருளானால்
நினைவில் மயங்கும் பொருளானாள்
நிலவில் மயங்கும் இருளானால்

யார் யார் யார் அவள் யாரோ

ஊர் பேர்தான் தெரியாதோ

அஞ்சனம் கொண்டாள் நகை கொண்டாள்
அச்சம் நாணம் மடம் கொண்டாள்
அஞ்சனம் கொண்டாள் நகை கொண்டாள்
அச்சம் நாணம் மடம் கொண்டாள்

மஞ்சள் குங்குமம் மலர் கொண்டாள்
மனதை சேர்த்து ஏன் கொண்டாள்

யார் யார் யார் அவள் யாரோ

ஊர் பேர்தான் தெரியாதோ

யார் யார் யார் அவள் யாரோ

ஊர் பேர்தான் தெரியாதோ

Get this widget | Track details | eSnips Social DNA

5 comments



எஸ்.பி.பி யின் அபிமான வெள்ளைக்குயில் சுசிலாம்மா.

Get this widget | Track details | eSnips Social DNA


சுசிலாம்மாவை பற்றி நாம் சொல்றதுக்கு முன் டாக்டர் எஸ்.பி.பி. அவர்களை சுசிலாம்மா எப்படி கவர்ந்தார்கள் என்பதை என்னோடு பாட்டு பாடுங்கள் நிகழ்ச்சியில் பல தடவை
குறிப்பிட்டுள்ளார்கள் ரசிகர்கள் அனைவரும் கேட்டிருக்க முடியும். இருந்தாலும் இந்த 2008 புதுவருடத்தில் முதல் தேதியன்று ஒரு பேட்டியில் அவர் சுசில்லாம்மாவை பற்றி குறிப்பிட்டது மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. வெள்ளைக்குயிலின் குரலைப் பற்றி அவர் அப்படி என்னதான்
கூறியிருப்பார்? நீங்களே கேளுங்களேன். இந்த ஒரு நிமிட பதிவையே ராகவன் சாரின் "இசையரசி" தளத்தில் என்னுடைய முதல் பதிவாக பதிந்து உங்கள் மகிழ்ச்சியில் கலந்து கொண்டு நானும் மகிழ்ச்சியடைகின்றேன்.