விஜய் பொக்கிஷம் - பி. சுசிலாம்மா
10.08.2013 சனிக் கிழமை அன்று சுசில்லாம்மாவின் பொக்கிஷங்களாக அவரின் பாடல்களை விஜய் டிவியில் ஒளிப் பரப்பினார்கள். தவற விட்டவர்களுக்காக இங்கே. கண்டு மகிழுங்கள் அன்பர்களே.
சன் சிங்கர் நிகழ்ச்சியில் இசையரசி சுசில்லாம்மா கலந்து கொண்ட நிகழ்ச்சியின் ஒளிக்கோப்பு கண்டு இன்புறுங்கள் அன்பர்களே.
நிகழ்ச்சியை இதிலே சென்றும் பார்க்கலாம்.
இசைஞானி இளையராஜா இசையில் இதுவரையில் இசையரசி பி.சுசீலா பாடி வெளிவந்த பாடல் எது?
இந்தக் கேள்வியைப் பொதுவில் கேட்ட பொழுது “கற்பூர முல்லை ஒன்று”, “முத்துமணிமால” என்று ஓரளவு நெருங்கிய விடைகள் கிடைத்தன. ஆனால் அந்தப் பாடல்களுக்குப் பிறகும் ஒரு பாடல் வெளிவந்திருக்கிறது 1993ல்.
இளையராஜாவின் இசையில் முதன்முதலாக பாடல் பதிவு செய்யப்பட்டது பி.சுசீலா மற்றும் எஸ்.பி.பாலசுப்ரமணியம் ஆகியோர் குரலில். ஆனால் அந்தப் படம் எடுக்கப்படாமலே மறைந்தது. அந்தப் பாடலையோ அதன் மெட்டையோ வேறெங்கேனும் இளையராஜா பயன்படுத்தியிருக்கின்றாரா என்பது குறித்து தகவல் இல்லை.
அன்னக்கிளி படத்தில் ராஜா இசையில் சுசீலாம்மா பாடிய முதற்பாடல் திரையில் வந்தால், அரண்மனைக்கிளி படத்தில் இந்தப் பாடல் வந்திருக்கிறது. இதைக் கடைசிப் பாடல் என்று சொல்ல மனம் ஒப்பவில்லை.
1993ல் ராஜ்கிரண் நடித்து வெளிவந்த படம் அரண்மனைக்கிளி. அந்தப் படத்தில் எல்லாப் பாடல்களுமே நல்ல பாடல்கள்.
அப்படியிருக்க அந்தப் படத்தில் முதல் பாடலாக வருவதுதான் “நட்டு வெச்ச ரோசாச்செடி ஆமா ஆமா”.
ஒரு நாடோடிக் கூட்டம். அதில் ஒருத்தி பருவம் அடைந்திருக்கிறாள். அவளுக்கு அந்தக் கூட்டம் சீர் செய்து பாடும் பாடல்தான் இது.
1993 என்பது இசையரசி பி.சுசீலா பாட வந்து நாற்பதாண்டுகளுக்குப் பிறகான காலகட்டம். இசைப்புயல் வேகமாக வீசிக் கொண்டிருந்த காலகட்டத்திலும் தன்னுடைய குரல் இன்றளவும் புதுமையானதே என்று மீண்டுமொருமுறை நிரூபித்த பாடல்.
திரும்பத் திரும்பச் சொன்னாலும் சுசீலாம்மாவின் தமிழ் உச்சரிப்புக்கு இன்றும் ஒரு மாற்று இல்லை என்பதே உண்மை. அதைச் சொல்லத் தயங்கவும் தேவையில்லை. ஒவ்வொரு சொல்லும் துல்லியமாக நமது காதில் விழுகிறது.
இந்தப் பாடலோடு நின்று விடாமல் இந்தக் கூட்டணியில் இன்னுமொரு பாட்டு கிடைத்தால் நாம் எல்லாரும் மகிழ்வோம்.
சரி. இப்போது இந்தப் பாட்டை நாமெல்லாம் ரசிப்போம்.
அன்புடன்,
ஜிரா (எ) கோ.இராகவன்
Labels: Ilayaraja, அரண்மனைக்கிளி, பி.சுசீலா p.susheela p.suseela
நீண்ட இடைவெளிக்கு பிறகு இசையரசி பி.சுசீலா அவர்களுடன் இன்னிசைப்பாடகர்கள் இணைந்து பாடிய பிரபல பாடல்கள் வானொலியில் கேட்க மிகவும் இனிமையாகவும் மனதுக்கு இதமாகவும் இருந்தது. எனது
இனிய நண்பர் அறிவிப்பாளர் திரு.ரவி அவர்கள் எப்போது நிகழ்ச்சி வழங்கினாலும் வானொலியில் அதிகம் ஒலிபரப்படாத பாடல்களை தான் தேடிப் பிடித்து வழங்குவார் அந்த வகையில் நான் ரசித்த இந்த ஒலித்தொகுப்பிலும் அறிதான பாடல்கள் வழங்கினார். இதோ உங்கள் செவிக்கும்.
1. சொட்டு சொட்டு சொட்டுன்னு - ஆடவந்த தெய்வம் - டி.ஆர்.மகாலிங்கம்
2. புத்தம் புது மேனி -சுபதினம் - பாலமுரளி கிருஷ்னா
3. முடியாது சொல்ல முடியாது - கண்டசாலா - மஞ்சள் மகிமை
4. ஏ குட்டி என் நேசம்-நாகேஸ்வரராவ் - குடும்பம்
5. காவியமா நெஞ்சில் ஓவியமா -ஜெயராமன் - மஞ்சள் மகிமை
6. காதல் என்றால் ஆணும் - ஏ.எல்.ராகவன் - பாக்யலக்ஷ்மி
7. வாம்மா வாம்மா சின்னம்மா - சீர்காழி கோவிந்தராஜன் - தாயில்லா பிள்ளை
8. ஆனந்தஇல்லம் நான் கண்ட உள்ளம் - ஏ.எம்.ராஜா - இது இவர்களின் கதை
9. அனுபவம் புதுமை - பி.பி.ஸ்ரீனிவாஸ் - காதலிக்க நேரமில்லை
10. லவ் லவ் எத்தனை கனவு - டி.எம்.சௌந்தரராஜன் - அதே கண்கள்
11. மாதமோ ஆவணி - எஸ்.பி.பாலசுப்ரமணியம் - உத்தரவின்றி உள்ளே வா
12. விழியே கதை எழுது - கே.ஜே.யேசுதாஸ் - உரிமைக்குரல்
இசையரசியுடன் இன்னிசைப் பாடகர்கள் ஒலித்தொகுப்பு இங்கே கேட்கலாம்.
பாசப்பறவைகள் தளத்திற்க்கு நன்றி.
Labels: P.Susheela, Vanoli
நேயர்கள் அனைவருக்கும் புதுவருட நல்வாழ்த்துக்கள்.
கண்கள் மூலம் பார்த்தாலே இயற்கை காட்சிகளின் அழகை ரசிக்க முடியும். இருந்தாலும் இசையின் அழகை ரசிக்க சுசிலாம்மாவின் சுந்தரகுரலிலும் மனதை கரைக்கும் கானங்கள் தொகுப்பின் அழகை ரசிக்க நம் காதுகளாலும் முடியும்
அந்த அழகை அருகே வரவேற்று அள்ளி வழங்குபவர் யவ்வன குரலின் சொந்தக்காரர் யாழ் சுதாகரின் தொகுப்பு. சுசில்லாம்மாவின் பாடல்கள் எத்தனைமுறை கேட்டாலும் திகட்டாத பாடல்கள் அவரின் பாடல்களின் ஒலித்தொகுப்பை ரசிகர்களின் ரசணைகளூடன் சேர்த்து வழங்கிய அறிவிப்பாளர் யாழ் அவர்களூக்கு இணையதள நேயர்கள் சார்பாக நன்றி.
1.உன்னை ஒன்று கேட்பேன்
2.மானாட்டம் தந்த மயிலாட்டம்
3.ஆலயமணியின் ஓசையை
4.தென்றல் வரும் சேதி வரும்
5.மாலை சூடும் மணநாள்
6.யாருக்கு மாப்பிள்ளை யாரோ
7.பார்த்தால் பசி தீரும்
8.அழகே வா அருகே வா
9.வா அருகில் வா
10.நானே வருவேன்
அழகே வா அருகே வா தலைப்பில் யாழ் குரலில் பாமாலை தொகுப்பு இங்கே.
நன்றி: பாசப்பறவைகள் தளம்
Labels: சுசீலா p.susheela p.சுசீலா
இன்றைய பாடல்
மானச வீணா மது கீதம்
திரை: பந்துலம்மா
இசை: ராஜன் நாகேந்திரா
குரல்கள்: இசையரசி, பாலு
மிகவும் அருமையான பாடல் .. இதோ