
மத்தாப்பு சுந்தரி ஆட்டத்த பாருங்கோ!!
நாட்டுப்புற வரிசை − 3
இப்ப வரும் குத்தாட்ட பாடல்களில் என்ன இருக்கிறது
இந்த பாட்டை கேளுங்கள்/பாருங்கள் கிராமத்து ஆட்டத்தை கள்ளப்பார்ட் நடராஜனும் குழுவினரும் தத்ரூபமாக ஆடியிருப்பார்கள்.. அதே போல்
மருதகாசியின் பாடல் வரிகளும், கே.வி.மகாதேவனின் துள்ளல் மெட்டும்
எஸ்.சி.கிருஷ்ணன்,சுசீலாவின் குரலிசையில் அடேயப்பா..
வண்ணக்கிளி திரைப்படம் ஆர்.எஸ்.மனோகரை ஹீரோவாக உயர்த்திய படம். பி.எஸ்.சரோஜா, மைனாவதி, பிரேம் நசீர் என பலரும் நிறைந்த படம்
மாமாவின் இசையில் பாடல்கள் அனைத்தும் பொக்கிஷங்கள்
திருச்சி லோகனாதன்,சுசீலா பாடும் அடிக்கிற கை தான் அணைக்கும்,
சீர்காழியார் பாடும் மாட்டுக்கார வேலா உன் மாட்ட,
சுசீலா,சீர்காழியார் பாடும் வண்டி உருண்டோட அச்சானி தேவை,
சுசீலா பாடும் சின்னப்பாப்பா எந்தன் செல்ல பாப்பா
மற்றும் சீர்காழியார்,சுசீலா பாடும் ஓடுகிற தண்ணியில
என எல்லாமே ஜனரஞ்சக பாடல்கள்
இருந்தாலும் நம்மை ஆட வைக்கும் சித்தாட கட்டிக்கிட்டு பாடலுக்கு மவுசு அதிகம் தான்
கேட்டு மகிழுங்கள்:
சுசீலா: சித்தாடை கட்டிக்கிட்டு
சிங்காரம் பண்ணிக்கிட்டு
மத்தாப்பு சுந்தரி ஒருத்தி
மயிலாக வந்தாளாம்
குழுவினர்: சித்தாடை கட்டிக்கிட்டு
சிங்காரம் பண்ணிக்கிட்டு
மத்தாப்பு சுந்தரி ஒருத்தி
மயிலாக வந்தாளாம்
சுசீலா: அத்தானைப் பாத்து
அசந்து போயி நின்னாளாம்
பெண் குழுவினர்: அத்தானைப் பாத்து
அசந்து போயி நின்னாளாம்
சுசீலா: ஆஆ
பெண் குழுவினர்: சித்தாடை கட்டிக்கிட்டு
சிங்காரம் பண்ணிக்கிட்டு
மத்தாப்பு சுந்தரி ஒருத்தி
மயிலாக வந்தாளாம்
கிருஷ்ணன்: முத்தாத அரும்பெடுத்து
மொழ நீள சரம் தொடுத்து
வித்தார கள்ளி கழுத்தில்
முத்தாரம் போட்டானாம்
ஆண் குழுவினர்: முத்தாத அரும்பெடுத்து
மொழ நீள சரம் தொடுத்து
வித்தார கள்ளி கழுத்தில்
முத்தாரம் போட்டானாம்
கிருஷ்ணன்: எத்தாகப் பேசி இள மனசைத் தொட்டானாம்
குழுவினர்: எத்தாகப் பேசி இள மனசைத் தொட்டானாம்
கிருஷ்ணன்: ஆ ..முத்தாத அரும்பெடுத்து
மொழ நீள சரம் தொடுத்து
வித்தார கள்ளி கழுத்தில்
முத்தாரம் போட்டானாம்
சுசீலா: குண்டூசி போல ரெண்டு கண்ணும் உள்ளவளாம்
முகம் கோணாமல் ஆசை அன்பாப் பேசும் நல்லவளாம்
கிருஷ்னன்: அஹா ஆஆஆஆ
சுசீலா: ஓஓஓஓஓஓஓஓஓஓ
சுசீலா: அந்தக் கண்டாங்கி சேலை காரி கைகாரியாம்
பெண் குழுவினர்: அந்தக் கண்டாங்கி சேலை காரி கைகாரியாம்
அந்தக் கள்ளி அத்தானைக் கல்யாணம் பண்ணிக் கொண்டாளாம்
சுசீலா: ஆஆ
பெண் குழுவினர்: சித்தாடை கட்டிக்கிட்டு
சிங்காரம் பண்ணிக்கிட்டு
மத்தாப்பு சுந்தரி ஒருத்தி
மயிலாக வந்தாளாம்
கிருஷ்ணன்: அஞ்சாத சிங்கம் போலே வீரம் உள்ளவனாம்
யானை வந்தாலும் பந்தாடி ஜெயிக்க வல்லவனாம்
சுசீலா: ஆஆஆஆ
கிருஷ்ணன்: ஆஆஆஆஆஆ
ஆண் குழுவினர்: அஞ்சாத சிங்கம் போலே வீரம் உள்ளவனாம்
யானை வந்தாலும் பந்தாடி ஜெயிக்க வல்லவனாம்
கிருஷ்ணன்: அந்த முண்டாசுக்கரன் கொஞ்சம் முன் கோபியாம்
ஆண் குழுவினர்: அந்த முண்டாசுக்கரன் கொஞ்சம் முன் கோபியாம்
ஆனாலும் பெண் ஏன்றால் அவன் அஞ்சிக் கெஞ்சி நிற்பானாம்
கிருஷ்ணன்: ஆ ..முத்தாத அரும்பெடுத்து
மொழ நீள சரம் தொடுத்து
வித்தார கள்ளி கழுத்தில்
முத்தாரம் போட்டானாம்
சுசீலா: முன்னூறு நாளை மட்டும் எண்ணிக் கொள்ளுங்க
கிருஷ்ணன்: அதன் பின்னாலே என்ன ஆகும் நீங்க சொல்லுங்க
பெண் குழுவினர்:ஆஆஆஆ
ஆண் குழுவினர்: ஆஆஆ
பெண் குழுவினர்: முன்னூறு நாளை மட்டும் எண்ணிக் கொள்ளுங்க
ஆண் குழுவினர்: அதன் பின்னாலே என்ன ஆகும் நீங்க சொல்லுங்க
சுசீலா: அந்த ரெண்டோடு ஒண்ணும் சேர்ந்து மூணாகுங்க
கிருஷ்ணன்: இந்த ரெண்டோடு ஒண்ணும் சேர்ந்து மூணாகுங்க
பெண் குழுவினர்: அதைக் கண்டு சந்தோஷம் கொண்டாடிப் பாடப் போறாங்க
ஆண் குழுவினர்: கண்டு சந்தோஷம் கொண்டாடிப் பாடப் போறாங்க
பெண் குழுவினர்: சித்தாடை கட்டிக்கிட்டு
ஆண் குழுவினர்: சிங்காரம் பண்ணிக்கிட்டு
பெண் குழுவினர்: மத்தாப்பு சுந்தரி ஒருத்தி
ஆண் குழுவினர்: மயிலாக வந்தாளாம்
பெண் குழுவினர்: முத்தாத அரும்பெடுத்து
ஆண் குழுவினர்: மொழ நீள சரம் தொடுத்து
பெண் குழுவினர்: வித்தார கள்ளி கழுத்தில்
ஆண் குழுவினர்: முத்தாரம் போட்டானாம்
பெண் குழுவினர்: மயிலாக வந்தாளாம்
ஆண் குழுவினர்: முத்தாரம் போட்டானாம்
பெண் குழுவினர்: மயிலாக வந்தாளாம்
ஆண் குழுவினர்: முத்தாரம் போட்டானாம்