1 comments

With Amma in Hyderabad on the occasion of her birthday - SPB - Thx to fb/spb


0 comments



விஜய் பொக்கிஷம் - பி. சுசிலாம்மா

10.08.2013 சனிக் கிழமை அன்று சுசில்லாம்மாவின் பொக்கிஷங்களாக அவரின் பாடல்களை விஜய் டிவியில் ஒளிப் பரப்பினார்கள். தவற விட்டவர்களுக்காக இங்கே. கண்டு மகிழுங்கள்  அன்பர்களே.


0 comments




சன் சிங்கர் நிகழ்ச்சியில்  இசையரசி சுசில்லாம்மா கலந்து கொண்ட நிகழ்ச்சியின்  ஒளிக்கோப்பு கண்டு இன்புறுங்கள் அன்பர்களே.


நிகழ்ச்சியை இதிலே சென்றும்  பார்க்கலாம்.


2 comments

இசைஞானி இளையராஜா இசையில் இதுவரையில் இசையரசி பி.சுசீலா பாடி வெளிவந்த பாடல் எது?

இந்தக் கேள்வியைப் பொதுவில் கேட்ட பொழுது “கற்பூர முல்லை ஒன்று”, “முத்துமணிமால” என்று ஓரளவு நெருங்கிய விடைகள் கிடைத்தன. ஆனால் அந்தப் பாடல்களுக்குப் பிறகும் ஒரு பாடல் வெளிவந்திருக்கிறது 1993ல்.

இளையராஜாவின் இசையில் முதன்முதலாக பாடல் பதிவு செய்யப்பட்டது பி.சுசீலா மற்றும் எஸ்.பி.பாலசுப்ரமணியம் ஆகியோர் குரலில். ஆனால் அந்தப் படம் எடுக்கப்படாமலே மறைந்தது. அந்தப் பாடலையோ அதன் மெட்டையோ வேறெங்கேனும் இளையராஜா பயன்படுத்தியிருக்கின்றாரா என்பது குறித்து தகவல் இல்லை.

அன்னக்கிளி படத்தில் ராஜா இசையில் சுசீலாம்மா பாடிய முதற்பாடல் திரையில் வந்தால், அரண்மனைக்கிளி படத்தில் இந்தப் பாடல் வந்திருக்கிறது. இதைக் கடைசிப் பாடல் என்று சொல்ல மனம் ஒப்பவில்லை.

1993ல் ராஜ்கிரண் நடித்து வெளிவந்த படம் அரண்மனைக்கிளி. அந்தப் படத்தில் எல்லாப் பாடல்களுமே நல்ல பாடல்கள்.

அப்படியிருக்க அந்தப் படத்தில் முதல் பாடலாக வருவதுதான் “நட்டு வெச்ச ரோசாச்செடி ஆமா ஆமா”.

ஒரு நாடோடிக் கூட்டம். அதில் ஒருத்தி பருவம் அடைந்திருக்கிறாள். அவளுக்கு அந்தக் கூட்டம் சீர் செய்து பாடும் பாடல்தான் இது.

1993 என்பது இசையரசி பி.சுசீலா பாட வந்து நாற்பதாண்டுகளுக்குப் பிறகான காலகட்டம். இசைப்புயல் வேகமாக வீசிக் கொண்டிருந்த காலகட்டத்திலும் தன்னுடைய குரல் இன்றளவும் புதுமையானதே என்று மீண்டுமொருமுறை நிரூபித்த பாடல்.

திரும்பத் திரும்பச் சொன்னாலும் சுசீலாம்மாவின் தமிழ் உச்சரிப்புக்கு இன்றும் ஒரு மாற்று இல்லை என்பதே உண்மை. அதைச் சொல்லத் தயங்கவும் தேவையில்லை. ஒவ்வொரு சொல்லும் துல்லியமாக நமது காதில் விழுகிறது.

இந்தப் பாடலோடு நின்று விடாமல் இந்தக் கூட்டணியில் இன்னுமொரு பாட்டு கிடைத்தால் நாம் எல்லாரும் மகிழ்வோம்.

சரி. இப்போது இந்தப் பாட்டை நாமெல்லாம் ரசிப்போம்.



அன்புடன்,
ஜிரா (எ) கோ.இராகவன்

0 comments

இன்னிசைப் பாடகர்கள்

நீண்ட இடைவெளிக்கு பிறகு இசையரசி பி.சுசீலா அவர்களுடன்  இன்னிசைப்பாடகர்கள் இணைந்து பாடிய பிரபல பாடல்கள் வானொலியில் கேட்க மிகவும் இனிமையாகவும் மனதுக்கு இதமாகவும் இருந்தது. எனது
இனிய நண்பர் அறிவிப்பாளர் திரு.ரவி அவர்கள் எப்போது நிகழ்ச்சி  வழங்கினாலும் வானொலியில் அதிகம் ஒலிபரப்படாத பாடல்களை தான் தேடிப் பிடித்து வழங்குவார் அந்த வகையில் நான் ரசித்த இந்த  ஒலித்தொகுப்பிலும் அறிதான பாடல்கள் வழங்கினார். இதோ உங்கள் செவிக்கும்.

1. சொட்டு சொட்டு சொட்டுன்னு - ஆடவந்த தெய்வம் - டி.ஆர்.மகாலிங்கம்
2. புத்தம் புது மேனி -சுபதினம் - பாலமுரளி கிருஷ்னா
3. முடியாது சொல்ல முடியாது - கண்டசாலா - மஞ்சள் மகிமை
4. ஏ குட்டி என் நேசம்-நாகேஸ்வரராவ் - குடும்பம்
5. காவியமா நெஞ்சில் ஓவியமா -ஜெயராமன் - மஞ்சள் மகிமை
6. காதல் என்றால் ஆணும் - ஏ.எல்.ராகவன் - பாக்யலக்‌ஷ்மி
7. வாம்மா வாம்மா சின்னம்மா - சீர்காழி கோவிந்தராஜன் - தாயில்லா பிள்ளை
8. ஆனந்தஇல்லம் நான் கண்ட உள்ளம் - ஏ.எம்.ராஜா - இது இவர்களின் கதை
9. அனுபவம் புதுமை - பி.பி.ஸ்ரீனிவாஸ் - காதலிக்க நேரமில்லை
10. லவ் லவ் எத்தனை கனவு - டி.எம்.சௌந்தரராஜன் - அதே கண்கள்
11. மாதமோ ஆவணி - எஸ்.பி.பாலசுப்ரமணியம் - உத்தரவின்றி உள்ளே வா
12. விழியே கதை எழுது - கே.ஜே.யேசுதாஸ் - உரிமைக்குரல்


இசையரசியுடன் இன்னிசைப் பாடகர்கள் ஒலித்தொகுப்பு இங்கே கேட்கலாம்.


பாசப்பறவைகள் தளத்திற்க்கு நன்றி.

0 comments



நேயர்கள் அனைவருக்கும் புதுவருட நல்வாழ்த்துக்கள்.

கண்கள் மூலம் பார்த்தாலே இயற்கை காட்சிகளின் அழகை ரசிக்க முடியும். இருந்தாலும் இசையின் அழகை ரசிக்க சுசிலாம்மாவின் சுந்தரகுரலிலும் மனதை கரைக்கும் கானங்கள் தொகுப்பின் அழகை ரசிக்க நம் காதுகளாலும் முடியும்
அந்த அழகை அருகே வரவேற்று அள்ளி வழங்குபவர் யவ்வன குரலின் சொந்தக்காரர் யாழ் சுதாகரின் தொகுப்பு. சுசில்லாம்மாவின் பாடல்கள் எத்தனைமுறை கேட்டாலும் திகட்டாத பாடல்கள் அவரின் பாடல்களின் ஒலித்தொகுப்பை ரசிகர்களின் ரசணைகளூடன் சேர்த்து வழங்கிய அறிவிப்பாளர் யாழ் அவர்களூக்கு இணையதள நேயர்கள் சார்பாக நன்றி.

1.உன்னை ஒன்று கேட்பேன்
2.மானாட்டம் தந்த மயிலாட்டம்
3.ஆலயமணியின் ஓசையை
4.தென்றல் வரும் சேதி வரும்
5.மாலை சூடும் மணநாள்
6.யாருக்கு மாப்பிள்ளை யாரோ
7.பார்த்தால் பசி தீரும்
8.அழகே வா அருகே வா
9.வா அருகில் வா
10.நானே வருவேன்


அழகே வா அருகே வா தலைப்பில் யாழ் குரலில் பாமாலை தொகுப்பு இங்கே.


நன்றி: பாசப்பறவைகள் தளம்

1 comments

இன்றைய பாடல்

மானச வீணா மது கீதம்

திரை: பந்துலம்மா
இசை: ராஜன் நாகேந்திரா
குரல்கள்: இசையரசி, பாலு

மிகவும் அருமையான பாடல் .. இதோ

4 comments

வணக்கம்

ஆண்டாண்டு காலமாக தான் பாடிய இனிய தமிழ்ப் பாடல்களால் நம்மையெல்லாம் மகிழ்வித்தும் வாழ்வின் பலப்பல சமயங்களில் துணையிருந்தும் உதவியிருக்கும் இசையரசி பி.சுசீலா அவர்களுக்கு இன்று பிறந்த நாள்.

நாட்டில் சிலரைப் பார்க்கையில் இவர் ஏன் பிறந்தார் என்று கேள்வி தோன்றும். இசையரசியின் இன்னிசைப் பாடல்களைக் கேட்கும் பொழுதுதான் இவர் நமக்காகப் பிறந்தார் என்று தோன்றும்.

எத்தனை பாடல்கள்! தாலாட்டும் தாயாக, ஆதரவூட்டும் மனைவியாக, நல்லதொரு தோழியாக, குறும்பு மிக்க சுட்டிப் பெண்ணாக, எழுச்சியூட்டும் புரட்சிப் பெண்ணாக, நம்முடைய நெஞ்சில் இருக்கும் சோகத்தையெல்லாம் நெருப்பிட்டு உருக்கி கண்ணீராய் வழிந்து ஓடச் செய்து மனதை இலேசாக்கும் ஆதரவாக, இறைவன் புகழைப் பாடி நம்மை பரவசத்தில் ஆழ்த்தும் வழிகாட்டியாக என்று பலப்பல உணர்ச்சிகளில் தனது இனிய குரலால் பாடியிருக்கிறார்.

ஒரு முறை இன்னொரு மிகப்பெரிய பாடகியான எஸ்.ஜானகி குறிப்பிட்டார், “இப்பிடி ஒரு சிறப்பான குரல் ஆண்டவனிடத்தில் எவ்வளவு கெஞ்சினாலும் கிடைக்காது.” உண்மை. எஸ்.ஜானகி அவர்களின் பாடும் திறன் இசையரசியின் திறமையை நன்கு உணர்ந்து சொன்ன வாக்கியங்கள். கற்றாரைக் கற்றோரே காமுறுவர்.

இன்றைக்குத் தமிழகத்தில் பிறந்த பாடகர்களே தமிழைக் குதறிப் பாடும் பொழுது, தமிழைச் சரியாக உச்சரியுங்கள் என்று கெஞ்சிக் கேட்கும் தெலுங்கச்சி இவர். ஆந்திர மாநிலத்தின் விஜயநகரத்தில் பிறந்தவர். ஒரு முறை இப்பிடிச் சொன்னார். “நான் பொறந்தது ஆந்திரா. அதுனால தாய்மொழியான தெலுங்கு ஒரு கண். ஆனா என்னோட இன்னொரு கண் தமிழ்.” இதை தனது உச்சகட்டக் காலத்தில் சொல்லியிருந்தால் வாய்ப்பிற்காக சொல்லியிருப்பார் என்று நினைக்கலாம். ஆனால் திரைப்பாடல்கள் வேண்டாம் என்று பக்திப் பாடல்கள் மட்டும் பாடி ஓய்வெடுக்கும் காலத்தில் இப்பிடிச் சொல்ல நல்ல உள்ளம் வேண்டும். உங்களை வணங்குகிறோம் அம்மா. நீங்கள் எங்கு பிறந்தாலும் தமிழர்களாகிய நாங்கள் மார்தட்டிச் சொல்வோம் நீங்கள் தமிழ்ப் பாடகி என்று.

உங்களைத் தமிழ்ப் பாடகி என்று சொல்வது எங்களுக்குப் பெருமைதான். மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் நீங்கள் டி.எம்.எஸ் அவர்களோடு இணைந்து பாடிய தமிழ்த்தாய் வாழ்த்துதான் இன்றைக்கும் தமிழொலிக்கும் எல்லாப் பள்ளிகளிலும் எல்லா அரசு விழாக்களிலும் ஒலித்துக் கொண்டிருக்கிறது. உங்களைப் பெற்ற தெலுங்கு மொழிக்குக் கூட பெற முடியாத பெருமையை நமது தமிழ் மொழி உங்களிடம் பெற்றது. அதற்கு முற்றிலும் தகுதியானவர் தாங்கள் என்பதை அனைவரும் ஒப்புக்கொள்வர்.

இன்றைய பொழுது தாயாக நீங்கள் பாடிய சில பாடல்களை நாங்கள் இங்கு கேட்டு மகிழ்கிறோம். தமிழும் இனிமையும் இந்தப் பாடல்களில் உங்கள் குரல்தான் கொடுத்தது. நன்றி. நன்றி.

திரைப்படம் - சிப்பிக்குள் முத்து
இசை - இசைஞானி இளையராஜா
பாடல் - வைரமுத்து



திரைப்படம் - நிலவே மலரே
இசை - மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்
பாடல் -



திரைப்படம் - கேளடி கண்மணி
இசை - இசைஞானி இளையராஜா
பாடல் - வாலி



திரைப்படம் - புதிய முகம்
இசை - இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான்
பாடல் - வைரமுத்து



திரைப்படம் - கடல் மீன்கள்
இசை - இசைஞானி இளையராஜா
பாடல் - கவியரசர் கண்ணதாசன்



மீண்டும் ஒரு முறை உங்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்.

தமிழுள்ள வரைக்கும் உங்கள் புகழ் நிலைக்கும் என்று வாழ்த்தி வணங்குகிறோம்.

அன்புடன்,
உங்கள் ரசிகன்

5 comments

On behalf of the millions of her admirers we wish her a Very Happy Birthday. May
God shower her health and wealth for ever.

Hail the lord for giving us such a wonderful musician.

I've created a video for this special occasion.

http://www.youtube.com/watch?v=sdUjAp9etlk

some rare songs of hers for your listening pleasure

1. Nilavo neruppo from Muyalukku moonu kaal

http://www.4shared.com/audio/O7jRGjTs/Nilavo_neruppo-Muyalukku_moonu.html

2.Naan mohini-Ratha katteri

http://www.4shared.com/audio/O1SdhiR7/Naan_mohini-Ratha_katteri-PS.html

3.Radhai oruthi irundhaal-Ival oru pudhu yugam

http://www.4shared.com/audio/AzXdqn7n/radhai_endru_oruthi-Ival_oru_p.html

4.Veenai enadhu kuzhandhai- OOnjaladum uravugal

http://www.4shared.com/audio/jkyA82WO/veenai_enadhu-Oonjaladum_uravu.html

5.Prema veeneya-Shubhaashaya
beautiful Kannada song by PS

http://www.4shared.com/audio/FfI69pc6/Prema_veenaya-Shubhaashaya-PS-.html


Will share more rare songs later.

Once again let's pray the almighty for Melody Queen's Long and healthy life.

5 comments

தாய்மை பொங்கும் குரலில் பாடுவது என்பது இசையரசி பி.சுசீலாவிற்கு மிக எளிதான வேலை என்றே நினைக்கிறேன். பொதுவாகவே மெல்லிசை மன்னரிலிருந்து இளையராஜா ஏ.ஆர்.ரகுமான் வரைக்கும் அவருக்கு தாய்மை மிகுந்த பாடல்களைக் கொடுத்துள்ளார்கள். கண்ணுக்கு மை அழகு கூட தாய்மை மிகுந்த காதல்தானே.

இந்தப் பதிவில் நாம் பார்க்கப் போவது கங்கை அமரனின் இசையில் தன் மகளுக்குத் திருமணம் செய்து வைக்கும் தாயின் பாசப்பரிதவிப்பு. பொதுவாகவே மகிழ்ச்சி பொங்கியிருக்கும் திருமணப் பாடல்கள். ஆனால் இதில் அந்தத் தாய் உருகிப் பாடுகிறாள். மனம் கெஞ்சி ஏதோ எடுத்துச் சொல்கிறாள். ஐயா.. மாப்பிள்ளை... என் பெண்ணை நன்றாகப் பார்த்துக் கொள்ளுங்கள். பசிக்கிறது சோறு வேண்டும் என்று கேட்கும் வாயில்லாதவள். அன்பை வெளிப்படையாக உரைக்கும் வாயில்லாதவள். ஆம். அவளொரு ஊமை.

டி.எம்.சௌந்தரராஜனும் பி.சுசீலாவும் இணைந்து பாசத்தைப் பொழிந்து பாடியுள்ள இந்தப் பாடலுக்கு இசை கங்கை அமரன். மிக அருமையான இசை. நீதிபதி திரைப்படத்தில் இடம் பெற்ற இந்தப்பாடல் மிக இனிமையானது என்பதில் ஐயமில்லை. கேட்டு மகிழுங்கள்.



அன்புடன்,
ஜிரா(எ)கோ.இராகவன்

1 comments

என் கண்ணில் ஆடும் ஜாலம் யாவும்

இசையரசியும் ஏ.எம்.ராஜா பாடிய பூலோக ரம்பை

பாடல்



1 comments

இசையரசி பதிவில் என் பங்குக்குப் பாட்டுப் போட்டு நீண்ட நாட்களாகிவிட்டது. எனவே அந்தக் குறையை நிவர்த்தி செய்யும் முகமாக ஒரு பாடல். இன்று வேலை முடிந்து களைப்போடு இரவு உணவை எடுத்துக் கொண்டிருக்கும் போது ஜெயா டிவியில் வந்த இந்தப் பாடலை கிட்டத்தட்ட பத்து வருஷங்களுக்குப் பின்னர் கேட்கிறேன்.

"சட்டம் என் கையில்" படத்தில் வரும் "ஒரே இடம் நிரந்தரம்...இதோ உன் துணை, இதோ என் இசை" என்ற இந்தப் பாடலைப் பாடியிருப்பவர் பி.சுசீலா. இடையில் மலேசியா வாசுதேவன் என்று நினைக்கிறேன், அல்லது அவர் சாயலில் ஒரு ஆண் குரலில் ஹம்மிங் ஒலிக்கிறது இந்தப் பாடல். இசையமைத்திருப்பவர் இசைஞானி இளையராஜா. ராஜாவின் ஆரம்ப காலப் பாடல்கள் சிலவற்றில் எம்.எஸ்.விஸ்வநாதனின் பாதிப்பு இருக்கும். அந்த உணர்வை இந்தப் பாடலும் ஏற்படுத்துகின்றது. பி.சுசீலா தவிர்த்து வேறு யாராவது பாடியிருந்தால் அந்த சாயல் பெரிதாகத் தெரிந்திருக்காது என்று நினைக்கும் போது பாடலை ஒலிக்க விட்டுப் பின்னணியில் போகும் இசையைக் கேட்டால், அதில் வரும் பேஸ் கிட்டாரும் எம்.எஸ்.வி ரகமாக இருக்கிறது.

ஒரு விரகதாப சூழ்நிலைக்கு எடுக்கப்பட்ட பாடல் என்றாலும் லேசான சோகம் கலந்த உணர்வு கேட்கம் போது எழாமல் இல்லை, அதுவே இந்தப் பாடலின் தனித்துவம் ஆகி விடுகின்றது.


0 comments



வெண் தாமரை வாணி

மன்னவன் வந்தானடி >> நாளை என்ற வேளை பார்த்து >> நவராத்திரி சுபராத்திரி >> காதலெனும் வடிவம் கண்டேன் >> கண்ணா கருமை கண்ணா >> லவ் பேர்ட்ஸ் லவ் பேர்ட்ஸ் >> பாலிருக்கும் பழமிருக்கும் >> ஓராயிரம் நாடகம் >> மாலை பொழுதின் மயக்கத்திலே >> வசந்ததில் ஓர் நாள்.

Clik here for download

இசையன்பர்களே வானொலி நேயர்களின் ரசனைகள் தான் எவ்வேறு வித்தியாசமானவை மேலே உள்ள பாடல்கள் அனைத்தும் பல முறை கேட்ட பாடல்கள் தான். ஏன் நானே இந்த தளத்திலும், தேன்கிண்ணத்திலும் தொகுப்புகளாக பதிந்துள்ளேன். சுசீல்லாம்மாவின் குரலில் வெளிவந்த இந்த பாடல்கள் எத்தனை முறை கேட்டாலும் ஓவ்வொருமுறையும் நம் பழைய நினவுகளை இனிமை என்ற சங்கிலியால் கட்டி இழுத்து கொண்டு வெளியில் போட்டு விடுகின்றன பாடல்களின் பாதிப்பிலிருந்து விடுபடுவதற்க்கு நாம் படாத பாடு படுகிறோம். அந்த வகையில் நேற்று ஒரு சுசில்லாம்மாவின் அருமையான ஒலித்தொகுப்பு வானொலியில் கேட்டேன் ஒரு நேயரின் அற்புதமான ரசனை கொண்ட தொகுப்பு இவை. உருவாக்கியவர் குறிச்சியில் வசிக்கும் திருமதி.ரேவதி தியாரகராஜன் அவர்கள் சுசீலாம்மாவின் குரலிற்க்கு தன் கிண்கிணி மணிகளால் தோரணம் கட்டி தன் அற்புத ரசனைப் பூக்களால் எவ்வாறு அர்ச்சனை செய்கிறார் நீங்களூம் கேளூங்கள். இந்த ஒலித்தொகுப்பை மிகவும் அற்புதமாக வழக்கம் போல் நிறுத்தி நிதானமாக ஆக்கத்தின் வரிகளை அச்சரம் பிசகாமல் பேசி தொகுத்து
வழங்கியிருக்கிறார் அறிவிப்பாளர் திரு.க.சுந்தரராஜன் அவர்கள். இணைய இசை நேயர்களின் அன்பு உள்ளங்களை உருண்டையாக உருட்டி தன் கட்டுக்குள் வைத்திருக்கும் சுசில்லாம்மவுக்கும் அவரின் குரலை அனுஅனுவாக ரசித்த திருமதி.ரேவதி தியாகராஜன் அவர்களூக்கும், நான் கேட்ட இந்த ஒலித்தொகுப்பை உஙகளுக்கும் வழங்க ஒரு வாய்ப்பை ஏற்படுத்திய வானவில் பண்பலைக்கும், சுந்தர தமிழில் சொக்க வைத்த சுந்த்ரராஜன் அவர்களூக்கும் சூசீலாம்மா தளத்தின் நேயர்கள் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் பெருமையடைகிறேன்.

Get this widget | Track details | eSnips Social DNA


பாலுஜிக்கு சாதனையாளர் விருது வழங்கி மரியாதை செய்த வெள்ளைக்குயில் சுசீலாம்மா அவர்களின் ட்ரஸ்டி நடத்திய நிகழ்ச்சியின் புகைப்பட ஆல்பத்தை இங்கே உங்களூக்கு வழங்குவதில் பெருமை கொள்கிறேன் அகில உலக பாலுஜி ரசிகர்கள் சார்பாக சுசீலாம்மாவிற்க்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இந்தியாகிளீட்ஸ் இணையத்தில் ஏற்றிய அந்த தளத்திற்க்கும் நன்றி. இங்கே கிளிக் செய்து பார்த்து மகிழுங்கள்.

0 comments



வெற்று காகிதமானாலும் நம் கண்முன் தோன்றும் கணினியின் திரையானாலும்
கவிதை கனவுகளை உண்மையாக்க என்றும் முயற்சி செய்திருக்கிறோம்.
இதோ சமீப காலமாக ஜெர்மணியின் செந்தேன்மலர் கவிதை கவிக்குயில்
ராகினி பாஸ்கரன் அவர்களின் தொகுப்பு ஒலித்தொகுப்புக்களாகவும்,
அதுவும் நம் கனவுகளை உண்மையாக்கும் திரையிசை பாடல்களின் குத்தகைதாரர் வெள்ளைக்குயில் சுசில்லாம்மாவின் சுகந்தம் வீசும்
சுகமான குரலுடன் இரண்டும் சேர்ந்து நம் மனதை
என்னென்னவோ என்னென்னவோ எதிர்ப்பார்க்க வைக்கின்றன அவை
இன்னமும் இன்னமும் இது போன்ற குயில்கள் வராதா என்று.
திரையிசை தொகுப்பில் கவிதைகள் ஒலித்தாலும் அவைகளை
வரிவடிவமாக இங்கே பதிய முயற்சி செய்தும் விட்டு விட்டேன்
ஏனென்றால், கவிதையின் சாராம்சம் தட்டச்சு பிழையால்
தடம் மாற வாய்புகள் ஏராளம் என்பதால் ஆக்கத்தை உருவாக்கிய
அறிவிப்பாளரின் கொஞ்சும் குரலிலே கேட்டு மகிழ நேயர்களிடமே விட்டுவிட்டேன்.
இந்த இரு ஒலித்தொகுப்புக்களூம் ஜெர்மனி நாட்டின்
ஏகோபித்த அபிமானிகளை பெற்ற இ.டி.ஆர் வானொலியில்
வலம் வந்தவை இந்த கவிக்குரல் மற்றும் கவிக்குயில்
இருவரும் நீடுழி வாழ்ந்து இணைய நண்பர்களூக்கு
இனிய படைப்புக்களை வழங்க வேண்டுமென்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.


ஜெர்மனி, ராகினி பாஸ்கரன்

முதல் தொகுப்பு பதிவிறக்கம் இங்கே

ஆயிரம் இரவுகள் வருவதுண்டு >> மலர்கள் நனைந்தன பனியாலே >> என்னுயிர் தோழி கேளொரு சேதி.

Get this widget | Track details | eSnips Social DNA


இரண்டாவது தொகுப்பு பதிவிறக்கம் இங்கே

நான் உன்னை தேடுகிறேன் >> உன்னை உன்னை எண்ணி >> ஆயிரம் பெண்மை மலரட்டுமே >> உறவு சொல்ல ஒருவன்

Get this widget | Track details | eSnips Social DNA

2 comments




ஆதிபராசக்தி அம்ருதவர்ஷினி என்ற அழகான பாடல்

பாடல் இடம்பெற்ற திரை : பொன்னபுரம் கோட்டா
இசை: தேவராஜன் மாஸ்டர்
வரிகள்: வயலார்
குரல்கள்: யேசுதாஸ், பி.பி.ஸ்ரீனிவாஸ், சுசீலா, மாதுரி, லீலா


குறிப்பாக மாதுரி சுசீலா பாடும் ஜதிஸ்வர பகுதி அருமை.

5 comments



இசையரசியின் இனிமையான தெரிவுகள்

இசையரசியின் அபிமானிகளே ரொம்ப நாள் கழித்து வந்துள்ளேன். இசையரசியின் இனிமையான பாடல்கள் எல்லோரும் கேட்ட பாடல்கள் தான். அவரின் வாழ்க்கை தகவல்களுடன், திரைப்படத்துடன் கொண்ட தகவல்களூடன். அற்புதமான ஒலித்தொகுப்பு சென்ற வாரத்தில் வானொலியில் ஒலிப்பரப்ப்பட்டது. அறிவிப்பாளர் மிகவும் அழகாக அவரின் தகவல்க்ளை தொகுத்து வழங்கியது பாராட்டுக்குரியது. இதுபோல் ஒலித்தொகுப்புகள் இந்த தளத்தில் வந்துள்ளாதா என்று தெரியவில்லை? (ஜீரா சார், பிரபாசார் நீங்கதான் சொல்லனும்)இந்த பதிவு வரும் நாள் என் திருப்பூர் அன்பர் திரு. அகிலா விஜயகுமார் அவர்கள் மூலம் என்னிடம் இசையரசி பற்று சில தகவல்கள் கேட்டார்கள். நான் இணையத்தில் தேடி பிடித்து உடனே அனுப்பிவைத்தேன். அறிவிப்பாளருக்கு மிக்க மகிழ்ச்சியாக இருந்தது. இசையன்பர்களே ஒலித்தொகுப்பை கேட்டு உங்கள் மேலான உணர்வுகளை ஒரு வரியில் எழுதுங்கள். ஆக்கத்தை உருவாக்கியவருக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். இசையரசியின் ரசிகர்கள் சார்பாக. ஆக்கத்தை உருவாக்கிய அறிவிப்பாளர் தொண்டாமுத்தூர் திரு. ரவி அவர்களூக்கு வாழ்த்துக்கள். நன்றி.

குறிப்பு: ஒலிக்கோப்பின் நீளம் அதிகம் ஆகையால் தரவிறக்கம் செய்யும் வகையில் தரப்பட்டுள்ளது. இசையன்பர்கள் இசையரசியின் மழையில் மறுபடியும் நனைய வாருங்கள் என்று அழைக்கின்றேன். கோவை ரவி

Get this widget | Track details | eSnips Social DNA

8 comments

நீண்ட நாட்களாக இசையரசி பதிவு வெறுமையாக இருக்கக் கூடாது என்பதற்காக ஒரு இனிய பாடலுடன் இந்த இடைவெளியை நிரப்புகின்றேன். இந்தப் பதிவு இசையரசி பி.சுசீலாவுடன் எஸ்.பாலசுப்ரமணியம் இணைந்து பாடும் ஒரு ஜோடிப் பாடல்.

இயக்குனர் ஆர்.சுந்தரராஜன் இயக்கிய படங்கள் என்றால் கண்ணை மூடிக்கொண்டே சொல்லி விடலாம், பாடல்கள் சிறப்பாக, இனிமையாக இருக்கும் என்று. ஆர்.சுந்தரராஜன் இளையராஜாவோடு கூட்டணி சேரும் போது மட்டுமல்ல, தேவாவோடு "என் ஆசை மச்சான்" போன்ற படங்களில் இணைந்தபோதும், "அந்த ராத்திரிக்கு சாட்சி இல்லை" திரைப்படத்தில் கே.வி.மகாதேவனோடு இணைந்தபோதும் கூட அந்தச் சிறப்பு இருந்தது.

சரணாலயம் திரைப்படம் ஆர்.சுந்தராஜன், எம்.எஸ்விஸ்வநாதனோடு இணைந்து பணியாற்றிய வந்த அருமையான பாடல்களோடு வந்த படமாகும். குறிப்பாக நான் இங்கு தரும் "நெடுநாள் ஆசை ஒன்று இந்த நெஞ்சினில் உதித்ததுண்டு" பாடலைக் கேளுங்கள், உண்மை புரியும். எம்.எஸ்.வி எண்பதுகளிலும் சோர்ந்து விடவில்லை என்பதற்கு இப்படியான பாடல்களும் மிகச்சிறந்த உதாரணங்கள்.

Nedunaal aasai - SPB P.Suseelaa

9 comments

இவரை வில்லியாகத்தான் நிறையப் படங்களில் பார்த்திருப்பீர்கள். அல்லது சிங்காரிச் சரக்கு மாதிரி பாடல்களில் கவர்ச்சியாகத்தான் பார்த்திருப்பீர்கள். ஆம். நடிகை ஒய்.விஜயாவைத்தான் சொல்கிறேன்.




சில நடிகைகள் வில்லிகளாகவே வாழ்ந்து விடுகிறார்கள். சி.கே.சரஸ்வதிக்குப் பிறகு ஒய்.விஜயாவிற்கு அந்த வாய்ப்பு. ஆனாலும் இவருக்கும் ஒரு இனிய பாடலும் பாத்திரமும் ஒரு சில படங்களில் கிடைத்திருக்கின்றன.

அப்படியொரு படமே "அவர் எனக்கே சொந்தம்". ஜெய்சங்கர், ஸ்ரீவித்யா, படாபட் ஜெயலட்சுமி ஆகியோர் பெரிய பாத்திரங்கள் ஏற்று நடித்த படத்தில் கைம்பெண் பாத்திரத்தில் நடித்திருக்கிறார் ஒய்.விஜயா. ஒரு குழந்தைக்குத் தாய்ப் பாத்திரத்தில் நடித்த அவருக்கு இளையராஜாவின் இசையில் ஒரு இனிய பாடலும் கூட உண்டு. ஆம். இசையரசியின் அமுதக் குரலில் "தேனில் ஆடும் ரோஜா" என்று பாடிக் குழந்தைக்குச் சோறு ஊட்டுகிறார். இந்த இனிய பாடலைக் கண்டும் கேட்டும் ரசியுங்கள்.



சென்னையில் இந்தப் படத்தில் ஒளித்தகடு கிடைத்ததும் வாங்கி விட்டேன். பாடல்கள் அனைத்தையும் வலையேற்றியும் விட்டேன். இந்தப் படத்தில் தொலினேனு ஜேயு என்ற தியாகராஜர் கீர்த்தனையையும் கபிகபி மேரே தில் மே என்ற பாடலையும் டி.எம்.சௌந்தரராஜனை நகைச்சுவை நையாண்டியோடு பாட வைத்திருக்கிறார் இளையராஜா. அதற்கு நடித்திருப்பவர் வி.கே.ராமசாமி. பாட்டைக் கேளுங்கள். இலவசமாக அந்தப் பாடலையும் இங்கேயே தருகிறேன்.



அன்புடன்,
ஜிரா (எ) கோ.இராகவன்

1 comments

இசையரசியும் தாலாட்டும் - பாகம் 2

தாலாட்டு என்ன குழந்தைக்கு மட்டும் சொந்தமா
இல்லை என்கிறார் ஒரு கணவர். ஆம் ஆதர்ஸ மனைவி கணவனுக்காக பாடும் தாலாட்டாக ஒரு பாடல். எந்த பாடல் என்று யூகிக்கமுடிகிறதா ம்ம்ம்

"நீ மதி சல்லகா சுவாமி நிதுரபோ" என்ற தெலுங்குப்பாடல் அது

பிரபல ஹிந்திப்பாடலான கில்தேஹை குல் யஹான் மெட்டை தமிழிலும் தெலுங்கிலும் பாடியவர் இசையரசி

தமிழில் ராதையின் நெஞ்சமே , தெலுங்கில் நீ மதி சல்லகா. ஹிந்தியில் லதா காட்டிய அதே இனிமையை இசையரசி தமிழிலும் தெலுங்கிலும் மேலும் ஒரு படி கூடியாவறு பாடியிருப்பார்

அன்பான மனைவி ஜமுனா தன் கணவர் என்.டி.ஆரை தூங்கச்செய்யும் பாடல் இது

கண்டு மகிழுங்கள்





தாய் தாலாட்டு பாடுவது இயல்பு. கல்யாணமாகாத பெண் தாலாட்டு பாடுவதென்றால் எப்படி. அப்படி ஒரு சூழல்தான் இங்கே ஒரு பெண்ணுக்கு. கல்யாணம் ஆகவில்லை ஆனால் தன் காதலனின் பிள்ளை என்று சொல்லிக்கொண்டு ஒரு பையன் வந்து நிற்க தன் காதலனின் மீது கொண்ட நம்பிக்கையால் அவனுக்கு உதவ அப்படித்தான் அந்த பையனை தன் வீட்டிற்கு தன் காதலன் கொண்டுவந்து விட அவனது சுட்டித்தனத்தை சமாளித்து அவனை தூங்கச்செய்கிறாள் இந்த பெண். அப்படி ஒரு குறும்பான தாலாட்டு தான் " தந்தை யாரோ தாயும் யாரோ " என்ற யார் பையன் திரைப்படப்பாடல். சாவித்திரியும் டெய்ஸி ராணியும் அழகாக நடித்திருப்பர். இசையரசி குறும்பு குறையாமல் பாடியிருப்பார் அதுவும் "தூங்குடா"என்று சொல்லும் அந்த செல்ல்க்கோபம் அழகோ அழகு.

படம்: யார் பையன்
இசை: சலபதிராவ்
வரிகள் : மருதகாசி

http://psusheela.org/audio/ra/tamil/...aresong023.ram


தாய்மை உணர்வு அற்புதமானது. ஒவ்வொரு தாயும் எந்த சூழலிலும் தன் பிள்ளைகளின் நலனைப்பற்றியே
சிந்திப்பாள். இங்கும் அப்படித்தான் ஒரு தாய் இருக்கிறாள். ஆம் மன நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருக்கும்போதும் அவள் நினைவெல்லாம் தன் பிள்ளையை சுற்றியே அவனுக்கு தாலாட்டு பாடுவதாக இங்கே அழகான தாலாட்டை பாடுகிறாள். இசையரசியின் குரலில் பாடலை கண்டு மகிழுங்கள்

" முத்துலா மா பாபு"
ஜீவன ஜோதி என்னும் திரையில் ஒலிக்கும் பாடல் இது. வாணிஸ்ரீ பிரமாதமாக நடித்த படம் இது.



மலையாள திரையில் எத்தனையோ இனிமையான தாலாட்டுப்பாடல்கள் உள்ளன அவற்றில் இதுவும் முக்கிய ஒன்றாகும்.
சலீல் செளத்ரியின் இசையில், வயலாரின் வரிகளை இசைக்கிறார் இசைக்குயில் ராகம் திரைப்படத்திற்காக.

இவர்கள் மூவரும் சேர்ந்து பாடலை இனிமையாக்குகிறார்கள் என்றால் அளவான அழகான நடிப்பார் ஊர்வசி சாரதா திரையில் மெருகேற்றுகிறார்.

" ஓமன திங்கள் பக்ஷி " என்ற பாடல் தான் அது. இந்த இனிமையன மெட்டுக்கு எந்த மனமும் கண்மூடத்தானே செய்யும்

http://www.youtube.com/watch?v=33x_pOHxdzk

5 comments



மணிமண்டபம் படத்தில் சுசீலாம்மாவின் கொஞ்சும் குரலில் ஓர் பழைய்ய்ய்ய்ய்ய்ய இனிமையான அற்புதமான வரிகளில் இந்த பாடல் ரொம்ப நாள் கழித்து எனக்கு கிடைத்தது நானும் ரொம்ப நாள் கழித்து இந்த தளத்தில் பதிகின்றேன் இசைப்பிரியர்கள் கேட்டு மகிழுங்கள்.

படம்: மணிமண்டபம்
பாடியவர்: பி.சுசீலா
இசை: ஸ்வரப்ரம்மா கே.வி.மஹாதேவன்

போட்டோ உதவி : நன்றி, இண்டியாக்ளிட்ஸ்.காம்

Get this widget | Track details | eSnips Social DNA



உறவு வரும் ஒரு நாள் பிரிவு வரும்
ஹ ஹ ஹ் ஹஹஹஹ

உறவு வரும் ஒரு நாள் பிரிவு வரும்
வரவு வரும் வழியில் செலவு வரும்
உறவு வரும் ஒரு நாள் பிரிவு வரும்

பகலும் வரும் உடனே இரவு வரும்
பகலும் வரும் உடனே இரவு வரும்

பழக வரும் துணையும் விலகி விடும்
பழக வரும் துணையும் விலகி விடும்

உறவு வரும் ஒரு நாள் பிரிவு வரும்

ஆசையிலே சிலநாள் அவதியிலே சிலநாள்
ஆசையிலே சிலநாள் அவதியிலே சிலநாள்
காதலிலே சிலநாள் கவலையிலே சிலநாள்
காதலிலே சிலநாள் கவலையிலே சிலநாள்

தாழ்வதோ சிலநாள் மனம் வாடுவதே பலநாள்
தாழ்வதோ சிலநாள் மனம் வாழடுவதே பலநாள்

உறவு வரும் ஒரு நாள் பிரிவு வரும்

சென்றதெல்லாம் வருமோ அதை சிந்தனை தான் தருமோ
வந்ததை யார் தடுப்பார் இனி வருவதை யார் மறுப்பார்

உறவு வரும் ஒரு நாள் பிரிவு வரும்

இமைகளை மூடிடுவோம் ..ஓஓஓஓஓஓஒ
துயர்களை மூடிடுவோம் ஆஆஆஆஆ
இமைகளை மூடிடுவோம் துயர்களை மூடிடுவோம்

மறுபடியும் விழித்தால் மனிதரைப் போல் பிறப்போம்
மறுபடியும் விழித்தால் புதுமனிதரைப் போல் பிறப்போம்

உறவு வரும் ஒரு நாள் பிரிவு வரும்
பழக வரும் துணையும் விலகி விடும்
உறவு வரும் ஒரு நாள் பிரிவு வரும்