ஆம். வலைப்பூ வரலாற்றில் முதன்முறையாக ஒரு முயற்சி. எத்தனையோ பேட்டிகளைப் படித்திருப்பீர்கள். ஆனால் இங்கே பேட்டி எடுக்கப் போவதே நீங்கள்தான். யாரை? இசையரசி பி.சுசீலா அவர்களைத்தான். இசையரசியிடம் நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகளை என்னுடைய gragavan@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும். உங்கள் கேள்விகளுக்கு சென்னையிலிருக்கும் இசையரசியிடமிருந்து பதில் பெற்றுத் தரப்படும். கேள்வி என்றில்லை. இசையரசியிடம் நீங்கள் பகிர்ந்து கொள்ள விரும்பும் செய்திகளையும் வாழ்த்துகளையும் அனுப்புங்கள். உங்கள் கேள்விகளுக்காகவும் வாழ்த்துகளுக்காகவும் இசையரசி காத்துக்கொண்டிருக்கிறார். இசையரசிக்கு வலைப்பூ அன்பர்கள் சார்பாக மனமார்ந்த நன்றி பல.

கேள்விகளை அனுப்பக் கடைசி நாள் ஜூலை 17.

எப்படிப் பட்ட கேள்விகள் நீங்கள் அனுப்ப வேண்டும் என்று நான் பாடம் எடுக்கப் போவதில்லை. நல்ல கேள்விகள் உங்களிடமிருந்து வரும் என்ற நம்பிக்கையில் காத்திருக்கிறேன்.

கேள்விகளை யுனிகோடு தமிழிலோ, ஆங்கிலத்திலோ அனுப்பலாம். உடன் உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் வலைப்பூ முகவரியையும் குறிப்பிடவும்.

நமக்காக இசையரசியிடம் பேசி உதவ ஒத்துக்கொண்ட ராஜகோபால் அவர்களுக்கு எனது உளமார்ந்த நன்றி.

இதோ உங்களுக்காக ஒரு இனிய பாடல்.


உங்கள் ஆதரவையும் அன்பையும் எதிர்பார்க்கும்,
கோ.இராகவன்

19 comments:

நாமக்கல் சிபி said...

சுசீலா அம்மா அவர்களுக்கு முதலில் வாழ்த்துக்கள்!

உங்களிடம் கேட்பதற்கு என்னிடம் கேள்வி எதுவும் இல்லை!

இனிமையான குரலில் இன்னும் பல்வேறு திரையிசைப் பாடல்களோடு பக்திப் பாடல்களும் பாடி எங்கள் காதுகளையும் மனங்களையும் குளிர வைக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்!

Sridhar Narayanan said...
This comment has been removed by the author.
தருமி said...

கேள்விகளெல்லாம் உங்க முகவரிக்கு அனுப்பச் சொல்லியுள்ளீர்கள். இங்கேயே மக்கள்ஸ் ஆரம்பித்தது போல் தெரிகிறதே.

ஆர்வம் ...ம்ம்..ம்?

இதில் உள்ள படத்தைவிடவும் widget-ல் உள்ளது அழகு.

வவ்வால் said...

ராகவன் நல்ல முயற்சி ,பாராட்டுக்கள்!

ஏன் எல்லா பாடகர்களும் அந்த காலத்தில் பாடல்வரிகள் தெளிவாக புரிவது போல் இசை அமைத்தார்கள் என்று சொல்கிறார்கள். உண்மையில் அந்த காலத்திலும் பல்லவிக்கு அப்புறம் எந்த வரியும் புரியாத போல தான் இசை அமைப்பு இருக்கும். இதை கேள்வியாக கேட்க முடியுமெனில் கேட்கலாம்!

சிவபாலன் said...

ஜிரா

நல்ல முயற்சி!,

நானும் அனுப்புறேன்.

மாசிலா said...

நல்ல முயற்சி திரு.ராகவன் ஐயா.

திரு.சுசீலா பாடிய பாடல்களில் என்னை மிகவும் கவர்ந்தது "மாலைப் பொழுதின் மயக்கத்திலே கனவு கண்டேன் தோழி" என்பதுதான். மிகவும் கடினப்பட்டு பாடியிருப்பார்.

தமிழ் உலகத்திற்கு அவர் செய்துவரும் தொண்டுகளுக்கு கோடான கோடி வணக்கங்கள்.

நன்றி.

குமரன் (Kumaran) said...

அருமை. அம்மாவிடம் என் நன்றிகளை மட்டும் தெரிவித்துவிடுங்கள். எத்தனை நாட்கள் இவங்க குரலைக் கேட்டு மன மகிழ்வுடன் தூங்கியிருப்பேன்.

துளசி கோபால் said...

எனக்குக் கையும் ஓடலை காலும் ஓடலை.

நல்லா யோசிச்சு ஒரு கேள்வி அனுப்பறேன் அப்புறமா.

இலவசக்கொத்தனார் said...

இவங்க கூட ஜோடியா பாடினவங்களில் யாரோட பாடறது ரொம்ப கஷ்டம்?

வெற்றி said...

இராகவன்,
நல்ல முயற்சி.

சுசீலா அம்மா அவர்களிடம் கேட்க நிறையக் கேள்விகள் இருக்கின்றது.
பின்னர் மின்னஞ்சலில் அனுப்புகிறேன்.

என் வாழ்வில் எவ்வளவோ இரவுகள் சுசீலா அம்மாவின் பாடல்கள்தான் என்னை துயில்கொள்ள வைத்தது என்றால் மிகையல்ல.

வடுவூர் குமார் said...

நான் கேட்க நினைக்கும் கேள்வி,இது தான்.
சிங்கை வானொலியில் திருமதி மீனாட்சி சபாபதியிடம் தமிழில் பேட்டி கொடுக்க மறுத்தது ஏன்?
இத்தனைக்கும் முன்பே அவரிடம் இந்த விபரம் சொல்லி தான் ஸ்டூடியோவிற்கு கூப்பிட்டு வந்தார்களாம்.
தமிழில் பல பாடல்களை பாடி நம் மனதை கொள்ளை கொண்ட பாடகி,தமிழை மறுத்தது ஏன்?

Anonymous said...

Dear RAgavan,
Ippodhu dhan unga blog ai parthen.
Sandhoshamana vishayathai solli irukeenga..

PS -- Ivanga mugathil irumum saantham. amaidhi. siripu - ellamae GREAT dhan.....

Ivanga kite kelvi enna kekkaradhu.Ivanga padalgal kettu manam sandhosha patadahi dhan share pannikanam....

With Love,
Usha Sankar.

G.Ragavan said...

நண்பர்களே, கேள்விகளை gragavan@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள். இங்கு பின்னூட்டமாக இட வேண்டாம்.

நன்றி.

கானா பிரபா said...

வாழ்த்துக்கள் ராகவன்

கேள்விகளை அனுப்பி வைக்கிறேன். ;-)

TBR. JOSPEH said...

ராகவன்,

தனி மயிலில் இரண்டு கேள்விகள் அனுப்பியுள்ளேன்.

உங்களுடைய முயற்சி வெற்றிபெற வாழ்த்துக்கள்.

Bee'morgan said...

உண்மையிலேயே புதுமையான ஒரு முயற்சி.. வாழ்த்துக்கள்..

Kannabiran, Ravi Shankar (KRS) said...

ஜிரா

அந்த ஓவியம் உங்கள் நண்பர் வரைந்ததா?
பல சமயங்களில் புகைப்படத்தை விட ஓவியத்தில் மிடுக்கும், கருணையும் நன்கு தெரிகிறது!

சுசீலாம்மாவின் "வரம் தந்த சாமிக்கு" பாடல் தான் இங்கு மழலைகளுக்குத் தாலாட்டு!
அவர்களோடு கூடவே பாடித் தான், ஆண் பிள்ளைகளும் தாலாட்டத் தெரிந்து கொண்டோம் என்று என் சார்பாக சுசீலாம்மாவிடம் சொல்லுங்கள்!

கேள்விகளுக்கும், அம்மாவின் பதில்களுக்கும் ஆவலுடன் வெயிட்டீடீடீடீங்....

ஷைலஜா said...

சுசீலாவின் பாடல் வரிகளில் ஜீவன் இருக்கும்.குரல் இனிமையுடன் பாடல்வரிகளுக்கு உயிர்கொடுத்து அவர் பாடுவது அந்தப்பாடலை மனதோடு தங்க வைத்துவிடும்'மன்னவன் வந்தானடி- தோழி!' பிடித்த பாடல்களில் ஒன்று. அவரிடம் நான் கேட்க விரும்பும் கேள்வி...'குரல் இனிமை கெடாமல் இருக்க விசேஷ பயிற்சி ஏதும் செய்கிறாரா?' என்பதுதான்.நன்றி ராகவன் உங்களின் இந்த அருமையான பதிவிற்கு.

isaiparavaigal said...

romba nallaerukku baladrummar

Post a Comment