இவரை வில்லியாகத்தான் நிறையப் படங்களில் பார்த்திருப்பீர்கள். அல்லது சிங்காரிச் சரக்கு மாதிரி பாடல்களில் கவர்ச்சியாகத்தான் பார்த்திருப்பீர்கள். ஆம். நடிகை ஒய்.விஜயாவைத்தான் சொல்கிறேன்.
சில நடிகைகள் வில்லிகளாகவே வாழ்ந்து விடுகிறார்கள். சி.கே.சரஸ்வதிக்குப் பிறகு ஒய்.விஜயாவிற்கு அந்த வாய்ப்பு. ஆனாலும் இவருக்கும் ஒரு இனிய பாடலும் பாத்திரமும் ஒரு சில படங்களில் கிடைத்திருக்கின்றன.
அப்படியொரு படமே "அவர் எனக்கே சொந்தம்". ஜெய்சங்கர், ஸ்ரீவித்யா, படாபட் ஜெயலட்சுமி ஆகியோர் பெரிய பாத்திரங்கள் ஏற்று நடித்த படத்தில் கைம்பெண் பாத்திரத்தில் நடித்திருக்கிறார் ஒய்.விஜயா. ஒரு குழந்தைக்குத் தாய்ப் பாத்திரத்தில் நடித்த அவருக்கு இளையராஜாவின் இசையில் ஒரு இனிய பாடலும் கூட உண்டு. ஆம். இசையரசியின் அமுதக் குரலில் "தேனில் ஆடும் ரோஜா" என்று பாடிக் குழந்தைக்குச் சோறு ஊட்டுகிறார். இந்த இனிய பாடலைக் கண்டும் கேட்டும் ரசியுங்கள்.
சென்னையில் இந்தப் படத்தில் ஒளித்தகடு கிடைத்ததும் வாங்கி விட்டேன். பாடல்கள் அனைத்தையும் வலையேற்றியும் விட்டேன். இந்தப் படத்தில் தொலினேனு ஜேயு என்ற தியாகராஜர் கீர்த்தனையையும் கபிகபி மேரே தில் மே என்ற பாடலையும் டி.எம்.சௌந்தரராஜனை நகைச்சுவை நையாண்டியோடு பாட வைத்திருக்கிறார் இளையராஜா. அதற்கு நடித்திருப்பவர் வி.கே.ராமசாமி. பாட்டைக் கேளுங்கள். இலவசமாக அந்தப் பாடலையும் இங்கேயே தருகிறேன்.
அன்புடன்,
ஜிரா (எ) கோ.இராகவன்
Subscribe to:
Post Comments (Atom)
9 comments:
அவர் குறிப்பிடும்படியாக நடித்த படங்கள் வரிசையில் - மன்மத லீலை, மூன்று முடிச்சு, கல்யாண அகதிகள் என்று சில இருக்கும்.
இந்த வில்லிகள் வரிசையில் சிஐடி சகுந்தலா-வையும் சேர்த்துக் கொள்ளலாம்.
இரண்டு பாட்டும் வெகு அருமை ராகவன்.
எப்போதோ கேட்டதை அழகாக இங்கே கொண்டு வந்து வைத்துவிட்டீர்கள். நன்றி.
விஜயா நன்றாகவே இமோட் செய்கிறார்.
ஸ்ரீதர் குறிப்பிட்டது போல இவருக்குப் பாங்கான பாத்திரங்கள் கிடைக்காமல் போயிற்றோ
விகே ராமசாமி போல நடிகரையெல்லாம் பார்க்க முடியுமா இனிமேல்.
சூப்பர் கச்சேரி. ரொம்பவும் ரசித்தேன்.
வலை ஏத்துனதுக்கு நன்றிப்பா.
இந்தப் படம் பார்க்கலை(-:
nice post
// Sridhar Narayanan said...
அவர் குறிப்பிடும்படியாக நடித்த படங்கள் வரிசையில் - மன்மத லீலை, மூன்று முடிச்சு, கல்யாண அகதிகள் என்று சில இருக்கும். //
ஆமாங்க... அதுலயும் மூன்று முடிச்சுல ஒரு துணைநடிகையாவே வருவாங்க. அதுலயும் தீக்காயம் பட்ட பிறகு....நல்லா நடிச்சிருப்பாங்க. கல்யாண அகதிகள்ள ரொம்ப மரியாதை வர்ர மாதிரி நடிச்சிருப்பாங்க. ரெண்டுமே எனக்கு ரொம்பப் பிடிச்ச படங்கள்.
// இந்த வில்லிகள் வரிசையில் சிஐடி சகுந்தலா-வையும் சேர்த்துக் கொள்ளலாம். //
சி.ஐ.டி.சகுந்தலாவோ சில படங்கள்ள கதாநாயகியா நடிச்சிட்டுதான் வில்லியானங்கன்னு நெனைக்கிறேன். சரியா?
// வல்லிசிம்ஹன் said...
இரண்டு பாட்டும் வெகு அருமை ராகவன்.
எப்போதோ கேட்டதை அழகாக இங்கே கொண்டு வந்து வைத்துவிட்டீர்கள். நன்றி.
விஜயா நன்றாகவே இமோட் செய்கிறார். ஸ்ரீதர் குறிப்பிட்டது போல இவருக்குப் பாங்கான பாத்திரங்கள் கிடைக்காமல் போயிற்றோ //
ஆம. நல்லா நடிக்கிறாங்க. ஆன பெரும்பாலும் வில்லி வேடம். ரொம்பவும் பழய படங்களில் கூட ஆணவம் கொன்ட பாத்திரங்களே கொடுக்கப்பட்டனன்னு நெனைக்கிறேன்.
// விகே ராமசாமி போல நடிகரையெல்லாம் பார்க்க முடியுமா இனிமேல். //
வி.கே.ராமசாமியின் நடிப்பும் பிடிக்கும். கத்திக் கத்திப் பேசுவாரு. ஆன அது அவரோட பாணி.
இப்படியான பொக்கிஷங்களை வாங்க நீங்க அடிக்கடி சென்னை போகணும், அருமையான பாட்டு இப்போது தான் தெரியும் இவருக்கு இந்தப் பாட்டுக் கிடைத்தது பற்றி
// Blogger துளசி கோபால் said...
சூப்பர் கச்சேரி. ரொம்பவும் ரசித்தேன்.
வலை ஏத்துனதுக்கு நன்றிப்பா.
இந்தப் படம் பார்க்கலை(-: //
என்னது... இந்தப் படம் பாக்கலையா.. மொதல்ல பாருங்க. நீங்களே விமர்சனம் எழுதீருவீங்க. ஒரு வாட்டி பாக்கலாம். பாட்டுகள்ளாம் கலக்கல். தேவன் திருச்சபை மலர்களேன்னு கூட ஒரு பாட்டு இருக்கு.
அருமையான பாடலைத் தெரியப்படுத்தியதற்கு நன்றி...
Post a Comment