ராணி தேனி திரைப்படம் ஜி.என்.ரங்கராஜன் இயக்கத்தில் 1982 இல் வெளிவந்திருந்தது. பாடகர் தீபன் சக்ரவர்த்தியை நாயகனாக்கி விஷப்பரீட்சை செய்திருந்த அந்தப்படத்தில் நாயகியாக மகாலஷ்மி நடித்திருப்பார். முன்னர் கல்யாணராமன் என்ற மெகா மசாலா வெற்றியைக் கொடுத்த இயக்குனர் என்ற நன்றிக்கடனுக்காக வை.ஜி.மகேந்திரனுடன் ஒரு துணை நடிகர் லெவலுக்கு கமலஹாசன் நகைச்சுவைப் பாத்திரம் ஏற்று நடித்திருந்தார். அதே நன்றிக்கடனை ஜி.என்.ரங்கராஜனுக்காக மகராசன் படத்திலும் கமல் செய்து கொ(கெ)டுத்தவர்.

"என்ன சொல்லி நான் எழுத, என் மன்னவனின் மனம் குளிர" என்ற அருமையான பாடல் இந்த ராணி தேனி திரைப்படத்தில் இசையரசி பி.சுசீலாவின் குரலில் என்றுமே கேட்பதற்கு இனியதொரு பாடலாக இருக்கின்றது. பாடல் இசை: இசைஞானி இளையராஜா.
இப்பாடலை வீடியோவாக வலையேற்றி உங்கள் ரசனைக்காகத் தருகின்றேன். கண்டு ரசியுங்கள்.

பாடல் வீடியோவிற்கான நேரடி இணைப்பு

13 comments:

வடுவூர் குமார் said...

விடியோ சுத்திக்கிட்டே இருக்கு....

கானா பிரபா said...

வாங்க வடுவூர் குமார்

கொஞ்சம் காத்திருந்தால் பாடல் வந்திருக்கும், நேரடி இணைப்பையும் கொடுத்திருக்கேன், பாருங்கள்.

CVR said...

மிக அழகான பாடல்!!
குரலில் அந்த பாத்திரத்தின் உணர்வுகள் மிக அழகாக வெளிப்படுகிறது!
இந்த அசைப்படமும் மிக தெளிவாக இருக்கிறது!
கதாநாயகியின் அரிதாரப்பூச்சு மட்டும் சற்றே அதிகம்!! ;)

சுரேகா.. said...

ஆஹா...அருமையான பாடல்!

நேத்துதான், மதுரகீதத்தில் போட்டேன்.

இதோட சேத்து, ஒரு கடிதம் எழுதினேன்...இதுமாதிரி..கடிதப்பாடல்கள்,
கடிதம் பற்றிய தகவல்களோடு..!

Unknown said...

அருமையான பாட்டு!

முதன்முறையா இப்பதான் வீடியோல பாக்குறேன்!

நன்றி!!

கானா பிரபா said...

//CVR said...
மிக அழகான பாடல்!!
குரலில் அந்த பாத்திரத்தின் உணர்வுகள் மிக அழகாக வெளிப்படுகிறது!
இந்த அசைப்படமும் மிக தெளிவாக இருக்கிறது!
கதாநாயகியின் அரிதாரப்பூச்சு மட்டும் சற்றே அதிகம்!! ;)//



காமிரா கவிஞரே

முகப்பூச்சு அதிகம் தான், கணினித் திரையில் ஒளியை அட்ஜட் பண்ணலாமே ;-)

கானா பிரபா said...

//சுரேகா.. said...
ஆஹா...அருமையான பாடல்!

நேத்துதான், மதுரகீதத்தில் போட்டேன்.

இதோட சேத்து, ஒரு கடிதம் எழுதினேன்...இதுமாதிரி..கடிதப்பாடல்கள்,
கடிதம் பற்றிய தகவல்களோடு..!//

வாங்க நண்பா

நானும் இதே மாதிரி ஒரு தொகுப்பு செய்திருக்கிறேன், ஒரு கடிதம் எழுதினேன், அன்புள்ள மான்விழியே ஆசையில் ஓர் கடிதம், காதல் கடிதம் வரைந்தேன் அப்படி பாடல்கள் போகும்.

கானா பிரபா said...

//தஞ்சாவூரான் said...
அருமையான பாட்டு!

முதன்முறையா இப்பதான் வீடியோல பாக்குறேன்!//

வருகைக்கு நன்றி தஞ்சாவூரான், இதேமாதிரி கொஞ்சம் அரிய பாடல் தொகுப்பு கைவசம் இருக்கு. அவ்வப்போது தருகின்றேன்.

ராஜேஷ் said...

என்ன சொல்லி நான் எழுதி இசையரசியின் புகழ் சொல்ல

ராணி தேனீ பாட‌ல் மிக‌வும் அழ‌கான‌ பாட‌ல்
ந‌டுவில் ராஜ‌ ராஜ ராஜ‌ஸ்ரீ என்று சொல்லி ஒரு சிரிப்பு சிரிப்பார் பாருங்க‌ள் அருமை அருமை

கானா பிரபா said...

உண்மை தான் ராஜேஷ், பாடலைப் பாடிக்கொண்டே போய் பின்னர் வசனமாக ஒப்பிப்பது போல புதுமை கலந்து சிறப்பித்திருப்பார்.

G.Ragavan said...

மிகவும் நல்ல பாடல். கேட்க இனிமையாக இருக்கிறது. குரலில் உணர்ச்சியையும் அழகையும் கலந்து மிக அருமையாக பாடியிருக்கின்றார்கள். படம் எப்படியோ தெரியவில்லை.. ஆனால் பாடல் மிக அருமை.

கானா பிரபா said...

வாங்க ராகவன்

பாடலும் சரி, காட்சி அமைப்பும் சரி பிரமாதம், ஆனால் படம் ஊத்தல் ரகம்..

Anonymous said...

Hello. This post is likeable, and your blog is very interesting, congratulations :-). I will add in my blogroll =). If possible gives a last there on my blog, it is about the MP3 e MP4, I hope you enjoy. The address is http://mp3-mp4-brasil.blogspot.com. A hug.

Post a Comment