4 comments

வணக்கம்

ஆண்டாண்டு காலமாக தான் பாடிய இனிய தமிழ்ப் பாடல்களால் நம்மையெல்லாம் மகிழ்வித்தும் வாழ்வின் பலப்பல சமயங்களில் துணையிருந்தும் உதவியிருக்கும் இசையரசி பி.சுசீலா அவர்களுக்கு இன்று பிறந்த நாள்.

நாட்டில் சிலரைப் பார்க்கையில் இவர் ஏன் பிறந்தார் என்று கேள்வி தோன்றும். இசையரசியின் இன்னிசைப் பாடல்களைக் கேட்கும் பொழுதுதான் இவர் நமக்காகப் பிறந்தார் என்று தோன்றும்.

எத்தனை பாடல்கள்! தாலாட்டும் தாயாக, ஆதரவூட்டும் மனைவியாக, நல்லதொரு தோழியாக, குறும்பு மிக்க சுட்டிப் பெண்ணாக, எழுச்சியூட்டும் புரட்சிப் பெண்ணாக, நம்முடைய நெஞ்சில் இருக்கும் சோகத்தையெல்லாம் நெருப்பிட்டு உருக்கி கண்ணீராய் வழிந்து ஓடச் செய்து மனதை இலேசாக்கும் ஆதரவாக, இறைவன் புகழைப் பாடி நம்மை பரவசத்தில் ஆழ்த்தும் வழிகாட்டியாக என்று பலப்பல உணர்ச்சிகளில் தனது இனிய குரலால் பாடியிருக்கிறார்.

ஒரு முறை இன்னொரு மிகப்பெரிய பாடகியான எஸ்.ஜானகி குறிப்பிட்டார், “இப்பிடி ஒரு சிறப்பான குரல் ஆண்டவனிடத்தில் எவ்வளவு கெஞ்சினாலும் கிடைக்காது.” உண்மை. எஸ்.ஜானகி அவர்களின் பாடும் திறன் இசையரசியின் திறமையை நன்கு உணர்ந்து சொன்ன வாக்கியங்கள். கற்றாரைக் கற்றோரே காமுறுவர்.

இன்றைக்குத் தமிழகத்தில் பிறந்த பாடகர்களே தமிழைக் குதறிப் பாடும் பொழுது, தமிழைச் சரியாக உச்சரியுங்கள் என்று கெஞ்சிக் கேட்கும் தெலுங்கச்சி இவர். ஆந்திர மாநிலத்தின் விஜயநகரத்தில் பிறந்தவர். ஒரு முறை இப்பிடிச் சொன்னார். “நான் பொறந்தது ஆந்திரா. அதுனால தாய்மொழியான தெலுங்கு ஒரு கண். ஆனா என்னோட இன்னொரு கண் தமிழ்.” இதை தனது உச்சகட்டக் காலத்தில் சொல்லியிருந்தால் வாய்ப்பிற்காக சொல்லியிருப்பார் என்று நினைக்கலாம். ஆனால் திரைப்பாடல்கள் வேண்டாம் என்று பக்திப் பாடல்கள் மட்டும் பாடி ஓய்வெடுக்கும் காலத்தில் இப்பிடிச் சொல்ல நல்ல உள்ளம் வேண்டும். உங்களை வணங்குகிறோம் அம்மா. நீங்கள் எங்கு பிறந்தாலும் தமிழர்களாகிய நாங்கள் மார்தட்டிச் சொல்வோம் நீங்கள் தமிழ்ப் பாடகி என்று.

உங்களைத் தமிழ்ப் பாடகி என்று சொல்வது எங்களுக்குப் பெருமைதான். மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் நீங்கள் டி.எம்.எஸ் அவர்களோடு இணைந்து பாடிய தமிழ்த்தாய் வாழ்த்துதான் இன்றைக்கும் தமிழொலிக்கும் எல்லாப் பள்ளிகளிலும் எல்லா அரசு விழாக்களிலும் ஒலித்துக் கொண்டிருக்கிறது. உங்களைப் பெற்ற தெலுங்கு மொழிக்குக் கூட பெற முடியாத பெருமையை நமது தமிழ் மொழி உங்களிடம் பெற்றது. அதற்கு முற்றிலும் தகுதியானவர் தாங்கள் என்பதை அனைவரும் ஒப்புக்கொள்வர்.

இன்றைய பொழுது தாயாக நீங்கள் பாடிய சில பாடல்களை நாங்கள் இங்கு கேட்டு மகிழ்கிறோம். தமிழும் இனிமையும் இந்தப் பாடல்களில் உங்கள் குரல்தான் கொடுத்தது. நன்றி. நன்றி.

திரைப்படம் - சிப்பிக்குள் முத்து
இசை - இசைஞானி இளையராஜா
பாடல் - வைரமுத்துதிரைப்படம் - நிலவே மலரே
இசை - மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்
பாடல் -திரைப்படம் - கேளடி கண்மணி
இசை - இசைஞானி இளையராஜா
பாடல் - வாலிதிரைப்படம் - புதிய முகம்
இசை - இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான்
பாடல் - வைரமுத்துதிரைப்படம் - கடல் மீன்கள்
இசை - இசைஞானி இளையராஜா
பாடல் - கவியரசர் கண்ணதாசன்மீண்டும் ஒரு முறை உங்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்.

தமிழுள்ள வரைக்கும் உங்கள் புகழ் நிலைக்கும் என்று வாழ்த்தி வணங்குகிறோம்.

அன்புடன்,
உங்கள் ரசிகன்

5 comments

On behalf of the millions of her admirers we wish her a Very Happy Birthday. May
God shower her health and wealth for ever.

Hail the lord for giving us such a wonderful musician.

I've created a video for this special occasion.

http://www.youtube.com/watch?v=sdUjAp9etlk

some rare songs of hers for your listening pleasure

1. Nilavo neruppo from Muyalukku moonu kaal

http://www.4shared.com/audio/O7jRGjTs/Nilavo_neruppo-Muyalukku_moonu.html

2.Naan mohini-Ratha katteri

http://www.4shared.com/audio/O1SdhiR7/Naan_mohini-Ratha_katteri-PS.html

3.Radhai oruthi irundhaal-Ival oru pudhu yugam

http://www.4shared.com/audio/AzXdqn7n/radhai_endru_oruthi-Ival_oru_p.html

4.Veenai enadhu kuzhandhai- OOnjaladum uravugal

http://www.4shared.com/audio/jkyA82WO/veenai_enadhu-Oonjaladum_uravu.html

5.Prema veeneya-Shubhaashaya
beautiful Kannada song by PS

http://www.4shared.com/audio/FfI69pc6/Prema_veenaya-Shubhaashaya-PS-.html


Will share more rare songs later.

Once again let's pray the almighty for Melody Queen's Long and healthy life.

5 comments

தாய்மை பொங்கும் குரலில் பாடுவது என்பது இசையரசி பி.சுசீலாவிற்கு மிக எளிதான வேலை என்றே நினைக்கிறேன். பொதுவாகவே மெல்லிசை மன்னரிலிருந்து இளையராஜா ஏ.ஆர்.ரகுமான் வரைக்கும் அவருக்கு தாய்மை மிகுந்த பாடல்களைக் கொடுத்துள்ளார்கள். கண்ணுக்கு மை அழகு கூட தாய்மை மிகுந்த காதல்தானே.

இந்தப் பதிவில் நாம் பார்க்கப் போவது கங்கை அமரனின் இசையில் தன் மகளுக்குத் திருமணம் செய்து வைக்கும் தாயின் பாசப்பரிதவிப்பு. பொதுவாகவே மகிழ்ச்சி பொங்கியிருக்கும் திருமணப் பாடல்கள். ஆனால் இதில் அந்தத் தாய் உருகிப் பாடுகிறாள். மனம் கெஞ்சி ஏதோ எடுத்துச் சொல்கிறாள். ஐயா.. மாப்பிள்ளை... என் பெண்ணை நன்றாகப் பார்த்துக் கொள்ளுங்கள். பசிக்கிறது சோறு வேண்டும் என்று கேட்கும் வாயில்லாதவள். அன்பை வெளிப்படையாக உரைக்கும் வாயில்லாதவள். ஆம். அவளொரு ஊமை.

டி.எம்.சௌந்தரராஜனும் பி.சுசீலாவும் இணைந்து பாசத்தைப் பொழிந்து பாடியுள்ள இந்தப் பாடலுக்கு இசை கங்கை அமரன். மிக அருமையான இசை. நீதிபதி திரைப்படத்தில் இடம் பெற்ற இந்தப்பாடல் மிக இனிமையானது என்பதில் ஐயமில்லை. கேட்டு மகிழுங்கள்.அன்புடன்,
ஜிரா(எ)கோ.இராகவன்

1 comments

என் கண்ணில் ஆடும் ஜாலம் யாவும்

இசையரசியும் ஏ.எம்.ராஜா பாடிய பூலோக ரம்பை

பாடல்1 comments

இசையரசி பதிவில் என் பங்குக்குப் பாட்டுப் போட்டு நீண்ட நாட்களாகிவிட்டது. எனவே அந்தக் குறையை நிவர்த்தி செய்யும் முகமாக ஒரு பாடல். இன்று வேலை முடிந்து களைப்போடு இரவு உணவை எடுத்துக் கொண்டிருக்கும் போது ஜெயா டிவியில் வந்த இந்தப் பாடலை கிட்டத்தட்ட பத்து வருஷங்களுக்குப் பின்னர் கேட்கிறேன்.

"சட்டம் என் கையில்" படத்தில் வரும் "ஒரே இடம் நிரந்தரம்...இதோ உன் துணை, இதோ என் இசை" என்ற இந்தப் பாடலைப் பாடியிருப்பவர் பி.சுசீலா. இடையில் மலேசியா வாசுதேவன் என்று நினைக்கிறேன், அல்லது அவர் சாயலில் ஒரு ஆண் குரலில் ஹம்மிங் ஒலிக்கிறது இந்தப் பாடல். இசையமைத்திருப்பவர் இசைஞானி இளையராஜா. ராஜாவின் ஆரம்ப காலப் பாடல்கள் சிலவற்றில் எம்.எஸ்.விஸ்வநாதனின் பாதிப்பு இருக்கும். அந்த உணர்வை இந்தப் பாடலும் ஏற்படுத்துகின்றது. பி.சுசீலா தவிர்த்து வேறு யாராவது பாடியிருந்தால் அந்த சாயல் பெரிதாகத் தெரிந்திருக்காது என்று நினைக்கும் போது பாடலை ஒலிக்க விட்டுப் பின்னணியில் போகும் இசையைக் கேட்டால், அதில் வரும் பேஸ் கிட்டாரும் எம்.எஸ்.வி ரகமாக இருக்கிறது.

ஒரு விரகதாப சூழ்நிலைக்கு எடுக்கப்பட்ட பாடல் என்றாலும் லேசான சோகம் கலந்த உணர்வு கேட்கம் போது எழாமல் இல்லை, அதுவே இந்தப் பாடலின் தனித்துவம் ஆகி விடுகின்றது.


0 commentsவெண் தாமரை வாணி

மன்னவன் வந்தானடி >> நாளை என்ற வேளை பார்த்து >> நவராத்திரி சுபராத்திரி >> காதலெனும் வடிவம் கண்டேன் >> கண்ணா கருமை கண்ணா >> லவ் பேர்ட்ஸ் லவ் பேர்ட்ஸ் >> பாலிருக்கும் பழமிருக்கும் >> ஓராயிரம் நாடகம் >> மாலை பொழுதின் மயக்கத்திலே >> வசந்ததில் ஓர் நாள்.

Clik here for download

இசையன்பர்களே வானொலி நேயர்களின் ரசனைகள் தான் எவ்வேறு வித்தியாசமானவை மேலே உள்ள பாடல்கள் அனைத்தும் பல முறை கேட்ட பாடல்கள் தான். ஏன் நானே இந்த தளத்திலும், தேன்கிண்ணத்திலும் தொகுப்புகளாக பதிந்துள்ளேன். சுசீல்லாம்மாவின் குரலில் வெளிவந்த இந்த பாடல்கள் எத்தனை முறை கேட்டாலும் ஓவ்வொருமுறையும் நம் பழைய நினவுகளை இனிமை என்ற சங்கிலியால் கட்டி இழுத்து கொண்டு வெளியில் போட்டு விடுகின்றன பாடல்களின் பாதிப்பிலிருந்து விடுபடுவதற்க்கு நாம் படாத பாடு படுகிறோம். அந்த வகையில் நேற்று ஒரு சுசில்லாம்மாவின் அருமையான ஒலித்தொகுப்பு வானொலியில் கேட்டேன் ஒரு நேயரின் அற்புதமான ரசனை கொண்ட தொகுப்பு இவை. உருவாக்கியவர் குறிச்சியில் வசிக்கும் திருமதி.ரேவதி தியாரகராஜன் அவர்கள் சுசீலாம்மாவின் குரலிற்க்கு தன் கிண்கிணி மணிகளால் தோரணம் கட்டி தன் அற்புத ரசனைப் பூக்களால் எவ்வாறு அர்ச்சனை செய்கிறார் நீங்களூம் கேளூங்கள். இந்த ஒலித்தொகுப்பை மிகவும் அற்புதமாக வழக்கம் போல் நிறுத்தி நிதானமாக ஆக்கத்தின் வரிகளை அச்சரம் பிசகாமல் பேசி தொகுத்து
வழங்கியிருக்கிறார் அறிவிப்பாளர் திரு.க.சுந்தரராஜன் அவர்கள். இணைய இசை நேயர்களின் அன்பு உள்ளங்களை உருண்டையாக உருட்டி தன் கட்டுக்குள் வைத்திருக்கும் சுசில்லாம்மவுக்கும் அவரின் குரலை அனுஅனுவாக ரசித்த திருமதி.ரேவதி தியாகராஜன் அவர்களூக்கும், நான் கேட்ட இந்த ஒலித்தொகுப்பை உஙகளுக்கும் வழங்க ஒரு வாய்ப்பை ஏற்படுத்திய வானவில் பண்பலைக்கும், சுந்தர தமிழில் சொக்க வைத்த சுந்த்ரராஜன் அவர்களூக்கும் சூசீலாம்மா தளத்தின் நேயர்கள் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் பெருமையடைகிறேன்.

Get this widget | Track details | eSnips Social DNA


பாலுஜிக்கு சாதனையாளர் விருது வழங்கி மரியாதை செய்த வெள்ளைக்குயில் சுசீலாம்மா அவர்களின் ட்ரஸ்டி நடத்திய நிகழ்ச்சியின் புகைப்பட ஆல்பத்தை இங்கே உங்களூக்கு வழங்குவதில் பெருமை கொள்கிறேன் அகில உலக பாலுஜி ரசிகர்கள் சார்பாக சுசீலாம்மாவிற்க்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இந்தியாகிளீட்ஸ் இணையத்தில் ஏற்றிய அந்த தளத்திற்க்கும் நன்றி. இங்கே கிளிக் செய்து பார்த்து மகிழுங்கள்.