தாய்மை பொங்கும் குரலில் பாடுவது என்பது இசையரசி பி.சுசீலாவிற்கு மிக எளிதான வேலை என்றே நினைக்கிறேன். பொதுவாகவே மெல்லிசை மன்னரிலிருந்து இளையராஜா ஏ.ஆர்.ரகுமான் வரைக்கும் அவருக்கு தாய்மை மிகுந்த பாடல்களைக் கொடுத்துள்ளார்கள். கண்ணுக்கு மை அழகு கூட தாய்மை மிகுந்த காதல்தானே.

இந்தப் பதிவில் நாம் பார்க்கப் போவது கங்கை அமரனின் இசையில் தன் மகளுக்குத் திருமணம் செய்து வைக்கும் தாயின் பாசப்பரிதவிப்பு. பொதுவாகவே மகிழ்ச்சி பொங்கியிருக்கும் திருமணப் பாடல்கள். ஆனால் இதில் அந்தத் தாய் உருகிப் பாடுகிறாள். மனம் கெஞ்சி ஏதோ எடுத்துச் சொல்கிறாள். ஐயா.. மாப்பிள்ளை... என் பெண்ணை நன்றாகப் பார்த்துக் கொள்ளுங்கள். பசிக்கிறது சோறு வேண்டும் என்று கேட்கும் வாயில்லாதவள். அன்பை வெளிப்படையாக உரைக்கும் வாயில்லாதவள். ஆம். அவளொரு ஊமை.

டி.எம்.சௌந்தரராஜனும் பி.சுசீலாவும் இணைந்து பாசத்தைப் பொழிந்து பாடியுள்ள இந்தப் பாடலுக்கு இசை கங்கை அமரன். மிக அருமையான இசை. நீதிபதி திரைப்படத்தில் இடம் பெற்ற இந்தப்பாடல் மிக இனிமையானது என்பதில் ஐயமில்லை. கேட்டு மகிழுங்கள்.அன்புடன்,
ஜிரா(எ)கோ.இராகவன்

5 comments:

கானா பிரபா said...

நீண்ட நாட்களுக்கும் பின் ராகவன் பதிவு :0

இனிய தீபாவளி வாழ்த்துக்கள்


அருமையான , அடிக்கடி கேட்கும் பாடலில் இதுவும் ஒன்று

G.Ragavan said...

வாங்க பிரபா. ஆமா. ரொம்ப நாளாச்சு. எந்தப் பதிவு போடுறோமோ இல்லையோ இந்தப் பதிவு போடலாம்னுதான் வந்தாச்சு. :)

எனக்கும் இந்தப் பாடல் ரொம்பவும் பிடிக்கும்.

Covai Ravee said...

ஜிஆர் சார் வணக்கம்.. எப்படி இருக்கீங்க?

நான் அடிக்கடி கேட்கும் என் மனதுக்கு இதம் அளிக்கும் பாடல் இது. பதிவிற்க்கு நன்றி.

Anonymous said...

pasamalarea ...... song - singers
T.M.S. , P.Suseela & S.P.Sailaja.

Anonymous said...

pasamalarea ...... song - singers
T.M.S. , P.Suseela & S.P.Sailaja.

Post a Comment