இந்த வலைப்பூவில் சேர்ந்தவுடன் ஜிராவிடம் ஒரு பாட்டை நான் தான் பதிவிடுவேன் என முன்பதிவு செய்துக்கொண்டேன்்.
சிறு வயதில் இருந்தே எனை பெரிதும் கவர்ந்த பாடல் அது!! பாடலை கேட்டாலே ஒரு வித அமைதி நம்மை சுற்றி பரவிக்கொள்ளும்.கதாபாத்திரங்களின் சூழ்நிலைக்கேற்ப கச்சிதமாக படத்தில் பொருந்தும் பாடல் அது.

"புதிய பறவை" எனும் படத்தில் வரும் "பார்த்த ஞாபகம் இல்லையோ" எனும் பாடல் தான் அது!!
பாடலின் தொடக்கத்தில் சுசீலாவின் ஹம்மிங்கில் ஆரம்பிக்கும் கம்பீரம் பாடல் முடியும் வரை நிறைந்து நிற்கும். பாடலின் படமாக்கிய விதமும்,எடிட்டிங்,லைட்டிங்,நடன அமைப்பு எல்லாமே நம்மை பாடலுடன் ஒன்றச்செய்துவிடும்.

இதனுடன் சிவாஜி மற்றும் சௌகார் ஜானகியின் நடிப்பு வேறு களை கட்டும்!!! சுட்டும் விழி பார்வையில் கண்களை உருட்டி உருட்டி சௌகார் ஜானகி பாடுவதும்,தன்னையே மறந்து (ஜொல்லு விட்டுக்கொண்டு) பாடலையும் பாடகியையும் ஒரு வித திகைப்போடு சிவாஜி ரசிப்பதும்!! ஆஹா!! அற்புதம்!!!
இந்த பாடலில் கம்பீரமும் ஆடம்பரத்தன்மையும் எடுத்து காட்டுவதற்காக பல இசைக்கருவிகளை எம்.எஸ்.விஸ்வநாதன் பயன்படுத்தினார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அவரின் முயற்சிகள் எதுவும் வீண் போகவில்லை என்பதை தைரியமாக சொலலாம் என்று நினைக்கிறேன்.

இந்த பாடல் ஒரு மேற்கத்திய பாடலால் இன்ஸ்பையர் ஆகியிருக்கலாம் என்றும் ஒரு கருத்து உண்டு!!
அதை பற்றிய விஷயங்களை இந்த பதிவிற்கு போய் தெரிந்து கொள்ளுங்கள்!! :-)

இத்தனையும் சொல்லிட்டு பாடல் வரிகள் பற்றி சொல்லாமல் போக முடியுமா??கவியரசர் கண்ணதாசன் எப்பவும் போல கலக்கியிருக்காரு!! என்ன வார்த்தை விளையாட்டு!!

உதாரணத்திற்கு

இந்த இரவைக் கேளது சொல்லும்
அந்த நிலவைக் கேளது சொல்லும்
உந்தன் மனதைக் கேளது சொல்லும்
நாம் மறுபடி பிறந்ததைச் சொல்லும்! (பார்)


ஆகா ஆகா!!
இசைக்கும் கதைக்கும் கனக்கச்சிதமாக பொருந்தக்கூடிய வார்த்தையாடல்!!இவரின் வைர வரிகள் என்னை இந்த பாடலை மேலும் மேலும் ரசிக்க வைத்தது!!

சரி சரி!! என் மொக்கையை நிறுத்திக்கொண்டு உங்களை பாடலை கேட்க விடுகிறேன்!! :-)

என்ன ?? உங்களுக்கும் இது ரொம்ப பிடித்தமான பாடலா???
அப்போ பின்னூட்டத்தில் சொல்லிட்டு போலாமே!! :-)



படம் : புதிய பறவை
பாடல் : பார்த்த ஞாபகம் இல்லையோ
பாடலாசிரியர் : கவியரசர் கண்ணதாசன்
இசை அமைப்பாளர் : எம்.எஸ்.விஸ்வனாதன்

பார்த்த ஞாபகம் இல்லையோ
பருவ நாடகம் தொல்லையோ
வாழ்ந்த காலங்கள் கொஞ்சமோ
மறந்ததே என் நெஞ்சமோ? (பார்த்த)

அந்த நீல நதிக்கரை ஓரம்
நீ நின்றிருந்தாய் அந்திநேரம்
நான் பாடி வந்தேன் ஒரு ராகம்
நாம் பழகி வந்தோம் சிலகாலம்! (பார்)

இந்த இரவைக் கேளது சொல்லும்
அந்த நிலவைக் கேளது சொல்லும்
உந்தன் மனதைக் கேளது சொல்லும்
நாம் மறுபடி பிறந்ததைச் சொல்லும்! (பார்)

அன்று சென்றதும் மறந்தாய் உறவை
இன்று வந்ததே புதிய பறவை
எந்த ஜென்மத்திலும் ஒரு தடவை
நாம் சந்திப்போம் இந்த நிலவை (பார்)

5 comments:

SurveySan said...

டக்கர் பாட்டு இது.

கலக்குங்க.

MSV, MSV தான். அட்டஹாசம்.

ராஜேஷ் said...

சி.வி.ஆர் தூள் பாட்டுப்பா

புதியபறவை ஒரு இசைப்பொக்கிஷம்
ஆம் அனைத்து பாடல்களும் அருமை..

உன்னை ஒன்று கேட்பேனாகட்டும், சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து,
ஆஹா மெல்ல நட, எங்கே நிம்மதி என அனைத்தும் அருமை
பார்த்த ஞாபகம் இல்லையோ .. இது மறக்கமுடியாத பாடல்
அந்த ஆரம்ப ஹம்மிங்கும் இசையரசியின் குரலும் கண்ணதாசனின் அழகான வரிகளும் மெல்லிசை மன்னர்களின் இசையும் என்னவென்று சொல்வதெம்மா ......

இதே பாடலை சமீபத்தில் இசையரசி சென்னையில் பாடியதை
இங்கே பார்த்து மகிழுங்கள்

watch here

துளசி கோபால் said...

எனக்குப் பிடிச்சது 'உன்னை ஒன்று கேட்பேன்'.

இதுவும் நல்ல பாட்டுதான். ஆனா........ எனக்குப் பிடிச்சது .....

Akila said...

¯ý¨É ´ýÚ §¸ð§Àý À¡ðÎ ´Õ ´Õ Å¡÷¨¾¸Ùõ
ͺ£Ä¡Å¢É¡ø ¾¡ý ¯Â¢÷¦ÀüÈÐ ±ýÚ ¦º¡øÄÄ¡õ.
my vote is for this song.
akila

pon.ravichandran said...

yeppodhu kaettaalum ,eththanai murai kaettaalum,muzhudhaaga nammai vasapaduthum paadal.

Post a Comment