தேரு பாக்க வாரீகளா.....
நாட்டுப்புற பாட்டு வரிசை − 2
தேர்த்திருவிழா பாத்திருக்கீங்களா? தென்னாட்டு திருவிழாக்களில் தேர்த்திருவிழா மிகவும் முக்கியமான ஒன்று. இளைஞர்கள் வடம் பிடிக்க, தேர் ஆடி அசைந்து வீதி வீதியாக வரும் அழகும், சாலையின் இரு ஓரங்களிலும் சாமி தரிசனத்திற்கு காத்திருக்கும் மக்கள், நீர் மோர் என ஒரே அமர்க்களம் தான் போங்கள்
அப்படி ஒரு அமர்க்களமான பாட்டு தான் இந்த பாட்டு..இசையரசியும், ஏழிசை வேந்தரும் சும்மா பூந்து விளையாடியிருப்பாங்க... மெல்லிசை மன்னரின் இசையும், கண்ணதாசனின் வரிகளும் இந்த பாடலை மேலும் மெருகேற்றுகின்றது... நாட்டுப்புற மெட்டை எவ்வளவு அழகாக பயன்படுத்தியிருக்கிறார் மெல்லிசை மன்னர்.திரையில் சிவாஜியும், பத்மினியும் ஆட்டம் போட்டிருப்பார்கள் பாருங்கள் இன்றைய குத்தாட்டம் எல்லாம் ஒன்னுமில்லை
அதிலும் இசையரசி இனிக்க இனிக்க நெனச்சு... இரவும் பகலும் துடிச்சு.. பாடுவதை கேளுங்கள் அந்த நடுக்கம் கிரமாத்து பெண்ணுக்கே உரிய கூச்சத்தை குரலில் காட்டுவார்..
படம்: இரு துருவம்
தேரு பாக்க வந்திருக்கும்
சித்திரைப் பெண்ணே - உன்னைத்
திருடிக்கொண்டு போகட்டுமா
பத்தினிப்பெண்ணே
பத்தினிப் பெண்ணே...
ஊரு பாக்க மணமுடிப்போம்
பொறுத்திரு கண்ணா - அப்போ
ஊர்வலத்தில் நாம் வருவோம்
ஒண்ணுல ஒண்ணா..
ஒண்ணுல ஒண்ணா
ஆ..ஆடையைத் தொட்டவன் ஜாடையைத் தொட்டவன்
மேடையைத் தொட்டாண்டி
அள்ளுற அள்ளுல கிள்ளுற கிள்ளுல
வெக்கத்தை விட்டாண்டி
அம்மாடி.. கொஞ்சம் பூச்சூடவா
அத்தாணி முத்தம் நான் போடவா
அம்மானே பெத்த பெண்ணாயினும்
சும்மா வருமோ சொர்க்க லோகம்
(தேரு)
எடுத்து எடுத்துக் கொடுக்க
கொடுத்துக் கொடுத்துச் சிரிக்க
அடுத்து அடுத்து நடக்கும் நாளை
நெனச்சு கொள்ளேண்டி..
நெனச்சு கொள்ளேண்டி..
இனிக்க இனிக்க நெனச்சு
இரவும் பகலும் துடிச்சு
படுத்துப் படுத்துப் புரண்ட நாளை
நெனச்சுக் கொள்வேனோ..
நெனச்சுக் கொள்வேனோ..
(தேரு)
சிரிச்சு மயக்கும் ஒருத்தி
செடியில் வெடிச்ச பருத்தி
அணைச்சு ரசிக்கும் நாளை நெனச்சு
ஆட வந்தேண்டி.. ஆட வந்தேண்டி..
நெனைக்கத் தெரிஞ்ச மனசு
ரசிக்க தெரிஞ்ச வயசு
வளைக்கும் சுகத்தை நெனச்சுத்தானே
வந்தேன் முன்னாடி.. வந்தேன் முன்னாடி..
ஐயய்யய்யே.. மறைக்க மறைக்கத் துடிக்கும்..
ஐயய்யய்யே.. நெருங்க நெருங்க நெனைக்கும்..
ஆஹா.. கட்டுற கட்டுல வெட்டுற வெட்டுல
ஊர்வசி கெட்டாடி..
ஆஹா.. மாப்பிள்ளை போடுற மந்திரத்தில் அந்த
இந்திரன் கெட்டாண்டி..
(அம்மாடி)
பாடலை இங்கே கேட்டு மகிழவும்
http://psusheela.org/audio/ra/tamil/rare/raresong363.ram
2 comments:
அருமையான பாட்டு ராஜேஷ். சுறுசுறு பாட்டு. விறுவிறுப் பாட்டு.
இந்தப் படம் ஒரு இந்திப் படத்தோட தழுவல். ஆனா அந்தப் படத்துல இருந்து ஒரு இந்திப் பாட்டக் கூட விஸ்வநாதன் எடுத்துக்கலை.
நல்ல பாட்டை நினைவு படுத்தியதுக்கு நன்றி.
இதுக்கு முன்னாடி கேட்டதில்லை இந்த பாடலை!!
நல்லா தான் இருக்கு கேக்க!! :-)
Post a Comment