குருவினே தேடி என் அரசனே தேடி ..


சுசீலா − எல்.ஆர்.ஈஸ்வரி ஜோடிக்குரலில் ஒலித்த பாடல்கள் அனைத்தும் அருமை

அதே போல் 70'களில் மற்றும் 80'களில் சுசீலா − வாணிஜெயராம் இணைந்து பல அருமையான பாடல்களை நமக்கு தந்திருக்கின்றனர்

இந்த ஜோடிக்குரல் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என எல்லா மொழிகளிலும் இவர்களது ஜோடிக்குரலில் பல அருமையான பாடல்கள் பாடியிருக்கின்றனர்

அப்படிப்பட்ட ஒரு பாடல் தான் இது
படம்:எனிக்கும் ஒரு தெவச‌ம்
இசை: ஷ்யாம்
வரிக‌ள்: ஸ்ரீகுமாரன் தம்பி

கிளாசிகல் வகையில் அமைந்த இந்த அருமையான பாடலை கேட்டு மகிழுங்க‌ள்

2 comments:

கானா பிரபா said...

பாடலைத் தந்தமைக்கு நன்றி ராஜேஷ்

இதே போல் கன்னடத்தில் வி.எஸ்.நரசிம்மன் இசையமைத்த படமான Mugila Mallige வில் சுசீலாவும் வாணியும் பாடியிருக்கின்றார்கள்.

இதோ தொடுப்பு
http://www.musicindiaonline.com/music/kannada/m/music_director.829/

G.Ragavan said...

ராஜேஷ், நீங்கள் சொல்வது சரிதான். இசையரசி, எல்.ஆர்.ஈஸ்வரி இணைந்து பாடிய பாடல்கள் கலக்கல் என்றால் பின்னாளில் வாணிஜெயராமுடன் இணைந்த பாடல்களும் கலக்கலே. இசையரசி அவர்கள் ஜமுனாராணி, லீலா, ஜிக்கி ஆகியோருடனும் இணைந்து பாடியிருக்கின்றார் என்று நினைக்கிறேன். பாடல்கள் சட்டென்று நினைவிற்கு வரவில்லை. சூலமங்கலம், உமாரமணன், எஸ்.பி.ஷைலஜா ஆகியோருடனும் இணைந்து பாடியுள்ளார்.

நீங்கள் கொடுத்துள்ள பாடலும் மிக அருமையாக இருக்கிறது. தேர்ந்தெடுத்துக் கொடுத்தமைக்கு நன்றி.

Post a Comment