பாட்டுக்கு பட்டாபிஷேகம்

ஆம் இசையரசி பி.சுசீலா அவர்களுக்கு பத்மபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

தாமதமாக வந்திருந்தாலும் அந்த விருதுக்கு விருதுகிடைத்தது என்றே சொல்லவேண்டும் ஆம் அது இசையிடம் வந்து சேர்ந்துள்ளதே...


இவர் தாதா சாகேப் பால்கே விருதுக்கு தகுதியுடையவர். அதையும் சீக்கிரமே கொடுத்து கெளரவிப்பார்கள் என எதிர்ப்பார்ப்போம்.

இந்த உயரிய விருது பெற்ற இந்த நேரத்தில் அவர் ஒவ்வொரு மொழியிலும் பாடிய முத்தான ஒரு பாடலை தரலாம் என நினைத்தேன்.. இசையரசியின் அந்த மொழி ஆளுமையை கண்டு/கேட்டு ரசிக்க வேண்டும் என்பதே இதன் நோக்கம்
1.
தமிழ் மன்றத்தில் பதிவு செய்தால் முதலில் தமிழ் பாடல்
முத்தான பாடல் என்று சொன்னானே .. தமிழில் எல்லாமே முத்தான பாடல்தானே என்று நீங்கள் கூறுவது என் காதில் கேட்கிறது. பாடல்கள் பல இருந்தாலும் சில பாடல்கள் ஏதோ சில காரணங்களலால் சில பாடல்கள் நம் மனதிற்கு நெருக்கமாக இருக்கும் அப்படி ஒரு பாடல் தான் இது

ஆம் " ஒரு நாள் இரவில் கண்ணுறக்கம் பிடிக்கவில்லை" என்று பணத்தோட்டம் திரையில் அபிநய சரஸ்வதிக்கு இசையரசி பாடிய அருமையான பாடல் ..

படம்: பணத்தோட்டம்
இசை: மெல்லிசை மன்னர்கள்
வரிகள்: கவிஞர் கண்ணதாசன்

இவர் பாடும் விதம் கேளுங்கள் .. தமிழ் இனிது அதை சுசீலாம்மாவின் குரலில் கேட்பது அதைவிட இனிது. கண்ணதாசனின் வரிகளும், மெல்லிசை மன்னர்களின் இசையும் இந்த பாடலை எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடலாக்கியது என்பது 100/100 உண்மை

இதோ பாடலை கண்டு கேட்டு மகிழுங்கள்

oru naal

2.
தமிழ் பாடலை தொடர்ந்து சுந்தர தெலுங்குப் பாடல்


தெலுங்கில் சுசீலா பாடல்கள் தமிழைவிடவும் கூடுதல் ஆதலால் எதை கொடுப்பது என்று யோசித்த வேளையில் அவருக்கு தேசிய விருது பெற்று தந்த "ஆகுலோ ஆகுனை" என்ற* பாடல் தான் நினைவிற்கு
வந்தது. தாசரி நாராயணராவ் இயக்கி நாகேஸ்வரராவ், ஜெயசுதா, ஜெயப்பிரதா நடித்து திரு ரமேஷ் நாயுடு இசையமைத்த படம். யேசுதாஸும் சுசீலாவும் மட்டுமே பாடியிருப்பார்கள். சுசீலாவிற்கும் விருது, யேசுதாஸுக்கும் விருது கிடைத்தது. அத்தனை பாடல்களும் பொக்கிஷங்கள். இன்றும் தெலுங்கு மக்கள் மத்தியில் பிரபலமான பாடலிது. தேவுலபள்ளி கிருஷ்ணா சாஸ்த்ரியின் வரிகளை பாராட்டாமல் இருக்க முடியாது

படம்: மேகசந்தேசம்
இசை: ரமேஷ் நாயுடு

இதோ பாடலை கண்டு கேட்டு மகிழுங்கள்





3.கடவுளின் சொந்த பூமிக்கு வருவோம் ஆம் மலையாளம் ..

மலையாள உலகிற்கு சுசீலாவை அறிமுகம் செய்தவர்
தக்ஷிணாமூர்த்தி சுவாமிகள் ஆனாலும் மலையாள உலகிற்கு சுசீலாவின் குரலில் பல அற்புத காணங்களை உருவாக்கியவர் மலையாள இசையுலகின் தேவகான ராஜா திரு தேவராஜன் மாஸ்டர் அவர்கள். தேவராஜன் வயலார் சுசீலா கூட்டணி மலையாளிகளலால் என்றுமே மறக்க முடியாத கூட்டணி.

இந்த கூட்டணியின் ஒரு சிறந்த பாடல் இதோ

படம்: நதி
இசை: தேவராஜன்
வரிகள்: வயலார் ராமவர்மா





4.கன்னடம் இதிலும் சுசீலாம்மா எத்தனையோ பாடல்கள் பாடியிருக்கிறார்

மிகவும் பிரபலாமான அமுதை பொழியும் நிலவே பாடலை கன்னடத்திலும் சுசீலாம்மா பாட அந்த பாடல் காலத்தால் அழியா பாடலானது

இதோ அந்த பாடல்

1 comments:

வல்லிசிம்ஹன் said...

நன்றி.
இன்றைய வெகு நல்ல செய்தி இதுதான்.
வாழ்த்துகள் விருதுக்கு:)

Post a Comment