தாலாட்டு தாராட்டு லாலி பாடா

எப்படி சொன்னாலும் பொருள் என்னவோ தாலாட்டு தான்
தாலாட்டு என்றாலே சுசீலாம்மாவிற்கு தனி இடம் உண்டு. மொழி எதுவாக இருந்தாலும் தாலாட்டு பாடுவதில் சுசீலாம்மாவிற்கு இணை சுசீலாம்மா தான்.. இதோ சில தாலாட்டுப்பாடல்கள் உ ங்கள் கண்களுக்கும் காதுகளுக்கும் விருந்து

தமிழில் எத்த்னையோ தாலாட்டு பாடல்கள் பாடியிருக்கிறார் எதை என்று சொல்வது
தாலாட்டு பாடுவது போல் பெண்ணின் பல்வேறு சோகங்களையும் சொல்லும் விதமாக அமைந்த பாடல் சித்தி திரையில் ஒலித்த "காலமிது காலமிது கண்ணுறங்கு மகளே காலமிதை தவறவிட்டால் தூக்கமில்லை மகளே". கவியரசரின் எழுத்துத்திறனுக்கு இந்த பாடல் ஒன்றே போதும் . இசையரசி பாடும் விதம் அடேயப்பா தாய்மை உணர்வை குரலில் பிரதிபலிக்க இசையரசியால் மட்டுமே இவ்வளவு கச்சிதமாக முடியும்

காலமிது காலமிது கண்ணுறங்கு


தெலுங்கிலும் பல தாலாட்டு பாடல்கள் உண்டு இருந்தாலும் இளையராஜாவின் இசையில் இசையரசி பாடிய லாலி லாலி என்ற சுவாதி முத்யம் படப்பாடல் தெலுங்கில் மிகச்சிறந்த ஒரு லாலி பாடல். படத்தில் அனைத்து பாடல்களையும் ஜானகி பாடியிருக்க இந்த பாடலுக்கு சுசீலாவை அழைத்ததும் காரணமாகத்தான் லாலி பாட சுசீலாவை விட சிறந்தவர் உண்டோ

இதோ



கன்னடத்திலும் நிறைய பாடல்கள் பாடியிருக்கிறார் இதோ கல்யாணி என்ற திரையில் ஒலித்த நின்ன முகா அரவிந்தா என்ற பாடல்




மலையாளத்தில் இசையரசி பாடிய முதல் பாடலே ஒரு தாலாட்டு தான்
ஆம் பாடு பாடி உரக்காம் ஞான் தாமரப்பூம் பைதலே என்று தகஷிணாமூர்த்தி சுவாமிகளின் இசையில் பாடிய பாடல் மலையாள மக்களின் மனதில் இன்றும் நிலைத்திருக்கும் ஒரு தாலாட்டுப்பாடல்

அதைத்தவிர பல தாலாட்டுப்பாடல்கள் பாடியிருக்கிறார் அதில் சில இதோ





2 comments:

G.Ragavan said...

அருமையான பதிவு ராஜேஷ். தாலாட்டுப் பாடல்களில் பெரும்பான்மையானவை இசையரசிக்கே சென்றன என்பது மறுக்க முடியாத உண்மை. ஒன்றல்ல..நான்கு தென்னிந்திய மொழிகளில் அருமையான தாலாட்டுப் பாடல்களைக் குடுத்தமைக்கு நன்றி பல.

கானா பிரபா said...

நேற்றே பதிவை வாசித்து/கேட்டாலும் பின்னூட்டம் இன்றுதான் கிட்டுகிறது. அருமையான தொகுப்பு ராஜேஷ். சுசீலாம்மா பாடிய இன்னொரு இனிமையான தாலாட்டு "ஏலே இளங்குயிலே என்னாசை பைங்கிளியே" என்றும் என் மனதை விட்டு நீங்காப் பாடல் அது.

Post a Comment