மணிமண்டபம் படத்தில் சுசீலாம்மாவின் கொஞ்சும் குரலில் ஓர் பழைய்ய்ய்ய்ய்ய்ய இனிமையான அற்புதமான வரிகளில் இந்த பாடல் ரொம்ப நாள் கழித்து எனக்கு கிடைத்தது நானும் ரொம்ப நாள் கழித்து இந்த தளத்தில் பதிகின்றேன் இசைப்பிரியர்கள் கேட்டு மகிழுங்கள்.

படம்: மணிமண்டபம்
பாடியவர்: பி.சுசீலா
இசை: ஸ்வரப்ரம்மா கே.வி.மஹாதேவன்

போட்டோ உதவி : நன்றி, இண்டியாக்ளிட்ஸ்.காம்

Get this widget | Track details | eSnips Social DNA



உறவு வரும் ஒரு நாள் பிரிவு வரும்
ஹ ஹ ஹ் ஹஹஹஹ

உறவு வரும் ஒரு நாள் பிரிவு வரும்
வரவு வரும் வழியில் செலவு வரும்
உறவு வரும் ஒரு நாள் பிரிவு வரும்

பகலும் வரும் உடனே இரவு வரும்
பகலும் வரும் உடனே இரவு வரும்

பழக வரும் துணையும் விலகி விடும்
பழக வரும் துணையும் விலகி விடும்

உறவு வரும் ஒரு நாள் பிரிவு வரும்

ஆசையிலே சிலநாள் அவதியிலே சிலநாள்
ஆசையிலே சிலநாள் அவதியிலே சிலநாள்
காதலிலே சிலநாள் கவலையிலே சிலநாள்
காதலிலே சிலநாள் கவலையிலே சிலநாள்

தாழ்வதோ சிலநாள் மனம் வாடுவதே பலநாள்
தாழ்வதோ சிலநாள் மனம் வாழடுவதே பலநாள்

உறவு வரும் ஒரு நாள் பிரிவு வரும்

சென்றதெல்லாம் வருமோ அதை சிந்தனை தான் தருமோ
வந்ததை யார் தடுப்பார் இனி வருவதை யார் மறுப்பார்

உறவு வரும் ஒரு நாள் பிரிவு வரும்

இமைகளை மூடிடுவோம் ..ஓஓஓஓஓஓஒ
துயர்களை மூடிடுவோம் ஆஆஆஆஆ
இமைகளை மூடிடுவோம் துயர்களை மூடிடுவோம்

மறுபடியும் விழித்தால் மனிதரைப் போல் பிறப்போம்
மறுபடியும் விழித்தால் புதுமனிதரைப் போல் பிறப்போம்

உறவு வரும் ஒரு நாள் பிரிவு வரும்
பழக வரும் துணையும் விலகி விடும்
உறவு வரும் ஒரு நாள் பிரிவு வரும்

5 comments:

G.Ragavan said...

வாங்க கோவை ரவி. மிக அருமையான பாடலைத் தந்து நினைவுபடுத்தியமைக்கு நன்றி. இன்னும் பலப்பல பொக்கிஷங்களை உங்களிடமிருந்து எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம். :)

கானா பிரபா said...

அருமையான பாடல் ரவி சார் மிக்க நன்றி

Anonymous said...

ராகவன் சார், கானாப்ரபா சார்,

தாமத மறுமொழிக்கு மன்னிக்கவும். வெள்ளைகுயில் சுசீல்லாம்மாவின் அறிதான பாடல் எப்போ கேட்டலும் இங்கே பதிந்திடுவேன். வருகைக்கு மிக்க நன்றி.

வல்லிசிம்ஹன் said...

இவ்வளவு நாட்கள் கழித்து இந்தப் பாடலைக் கேட்பதில் நிறைந்த அமைதி கொடுத்தீர்கள் ரவி. நன்றி மிக்க நன்றி.

Anonymous said...

வல்லிசிம்ஹன் அவர்களே..

வாங்க தவறாது துரத்தி வந்து தேடி பிடித்து ஜாம்பவான்களின் பாடல்கள் கேட்டு மறுமொழி தருகிறீர்கள் நீங்கள் ஒரு நல்ல கலைஞன் (ரசிகன்). நன்றி.

Post a Comment