கதா நாயகி வரிசை: 8

நவ்யா நாயர். மிகவும் அழகான நடிக்கத்தெரிந்த நடிகை. சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி, அமிர்தம், மாயக்கண்ணாடி என எல்லாவற்றிலும் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்

இதோ இசையரசி சமீபத்தில் பாடிய அழகான பாடல்

நவ்யா நாயருக்கும் இசையரசி பாடிவிட்டார் ஆம் சில நேரங்களில் என்ற திரையில் ஸ்ரீகாந்த தேவாவின் இசையில் வைரமுத்துவின் வரிகள். அதே இனிமை அதே மென்மை ..

பொட்டு வைத்த முகத்தை
தொட்டு வைத்த தலைவா
உனக்கொரு உனக்கொரு கோரிக்கை
தொட்டு வைத்த முகமும்
விட்டு வைத்த அழகும்
உனக்கென்று உனக்கென்று காணிக்கை
காதலை தொடர்ந்தே திருமணம் நடக்கும்
திருமணம் நமக்கே காதலின் தொடக்கம்
இதயம் ஒன்று தான் இருவருக்கும்
உயிரென்று நினைத்தேன் உங்களை
உங்களுக்கு தருவேன் கண்களை


பொட்டு வைத்த முகத்தை
தொட்டு வைத்த தலைவா
உனக்கொரு உனக்கொரு கோரிக்கை


தலைவன் தந்த பூக்களை
தலையில் எடுத்து சூடுவேன்
மலர்கள் தந்த கைகளை
மார்பில் எடுத்து சூடுவேன்
என் சேலை போர்வை கொண்டு
உன்னை தூங்க செய்குவேன்
என் கூந்தல் ஈரம் கொண்டு
உனது தூக்கம் போக்குவேன்
உன் அசைவுகள் இடுகின்ற ஆணைக்கும்
இசைவுகள் தெரிவித்து வாழுவேன்

பொட்டு வைத்த முகத்தை
தொட்டு வைத்த தலைவா
உனக்கொரு உனக்கொரு கோரிக்கை
தொட்டு வைத்த முகமும்
விட்டு வைத்த அழகும்
உனக்கென்று உனக்கென்று காணிக்கை

தரியில் நெருங்கும் நூல்களோ
தரிக்கும் ஆடை ஆகுமே
உறவில் நெருங்கும் காதலோ
யுகங்கள் வரையில் வாழுமே

உன் பேரை சொல்லிடும்போதே
உயிரில் பாசம் ஊருமே
ஜென்மங்கள் மாறிய போதும்
ஜீவன் உன்னை சேருமே
இருதயம் பெருகிய நன்றியை
என் இருவிழி அருவிகள் காட்டுமே

பாடலை பார்த்து மகிழுங்கள்3 comments:

கானா பிரபா said...

பாடலுக்கு நன்றி ராஜேஷ்

பழைய பாடல் தொனியில் இசையமைக்கப்பட்டிருக்கு.

G.Ragavan said...

பாடலைக் கொடுத்தமைக்கு நன்றி பல.

இந்தப் பாடலை ஆடியோவில் கேட்டிருக்கிறேன். ஆனால் வீடியோவில் இன்றுதான் பார்க்கிறேன்.

மிகவும் அழகாகப் பாடியிருக்கிறார் இசையரசி.

ஆனால் ஸ்ரீகாந்த் தேவாவின் இசையில் இன்னும் முதிர்ச்சி தேவைப்படுகிறது.

கோவை விஜய் said...

பாடலை வீடியோவில் கொடுத்தமைக்கு பாரட்டுக்கள்

Post a Comment