தை மாதம் என்றாலே தமிழர்களுக்கு ஓர் உவகை பொங்கும் காலம். எங்களூர் இயல்பிலேயே தோட்டம் நிறைந்த செம்பாட்டு வளம் கொழிக்கும் அசல் கிராமப்புறம் என்பதால் தைமாதப் பொங்கலின் மகத்துவத்தை நன்றாக உணர்ந்தே இத் தைப்பொங்கல் திருநாளைக் கொண்டாடுவோம். எங்களூர்ப் பொங்கல் நினைவுகளை "வெடி கொழுத்தி ஒரு ஊர்ப்பொங்கல்" என்று என் மடத்துவாசல் பிள்ளையாரடிப் பதிவில் பதிந்திருக்கின்றேன்.

தைப்பொங்கல் வரும் போது "தை"யைக் குறிக்கும் பாடல்களும் நினைப்புக்கு வரும். வானொலிகளும் அடிக்கொரு தடவை அவற்றைச் சலிக்காமல் ஒலிபரப்பும். அப்படியான ஒரு இனிய பாடல் தான் "பூப்பூக்கும் மாசம் தை மாசம்". இசையரசி பி.சுசீலா அனுபவித்துப் பாடியிருக்கும் அந்தப் பாடலின் இசை, சொல்லியும் தெரிய வேண்டுமா? அப்படியாயின் அது இளையராஜா என்று சொல்லி வைக்கின்றேன்.

இப்பாடலின் முதல் அடிகள் மட்டுமே தை மாசத்தைச் சொல்லி வைத்தாலும், மற்றைய வரிகளைப் பற்றிக் கவலைப்படாமல் மனதில் உவகை பொங்க இந்தக் காதல் ரசம் கொட்டும் பாடலைப் பொதுவான பாடலாக யாரும் ரசிக்கலாம்.

கதாநாயகி வரிசையில் குஷ்புவுக்காக பி.சுசீலா அவர்கள் பாடியிருக்கும் இப்பாடலை விடுத்து இன்னொரு மிகச் சிறந்த தேர்வைக் கொடுக்க முடியாது.

அனைவருக்கும் இனிய தைத்திருநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டு இப்பாடலை ரசித்து மகிழ உங்களை அழைக்கின்றேன்.


You Tube: nsureshrasr

8 comments:

கோபிநாத் said...

அழகான பாடல்...;)


ம்ம்ம்ம் எம்புட்டு நாள் ஆச்சு இப்படி பார்த்து..;)))

கானா பிரபா said...

வருகைக்கு நன்றி தல

கொஞ்சம் ஞாபக மறதியிலே இதே பாட்டை மீண்டும் இட்டு விட்டேன், அதனால் என்ன தை மாதத்துக்குப் பொருத்தமான பாட்டுத்தானே ;-)

CVR said...

அதானே பார்த்தேன்!
இந்த பாடலை ஏற்கெனவே பார்த்தார் போல் உள்ளதே என்று!!

மிக இனிமையான பாடல்!!
எத்தனை முறை கேட்டாலும் அலுக்காதது!!
பதிவிட்டதற்கு நன்றி! :-)

இறக்குவானை நிர்ஷன் said...

உண்மையில ரொம்ப அழகான பாட்டு..

கானா பிரபா said...

//CVR said...
அதானே பார்த்தேன்!
இந்த பாடலை ஏற்கெனவே பார்த்தார் போல் உள்ளதே என்று!!//

தல நீங்க இந்த டயலாக் வுடும் போது இன்னொரு பாட்டு ஞாபகத்துக்கு வருகுது
"உன்னை எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பதில்லை" ;-)

தங்ஸ் said...

சுசீலா கலக்கியிருப்பாங்க..அருமையான பாடல்.

கானா பிரபா said...

// இறக்குவானை நிர்ஷன் said...
உண்மையில ரொம்ப அழகான பாட்டு..//


வருகைக்கு நன்றிகள் நிர்ஷான்

கானா பிரபா said...

//தங்ஸ் said...
சுசீலா கலக்கியிருப்பாங்க..அருமையான பாடல்.//

தங்ஸ்

வருகைக்கு நன்றிகள்

Post a Comment