சுசீலாம்மா, பி.பி.ஸ்ரீனிவாச் கொஞ்சும் குரலில் அழகான பாடல் கேளுங்கள்.

படம்: பாசமலர்
பாடகர்கள்: பி.பி.எஸ், பி.சுசீலா
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன் ராமமூர்த்தி
பாடலாசிரியர்: கண்ணதாசன்

யார் யார் யார் அவள் யாரோ

ஊர் பேர் தான் தெரியாதோ
யார் யார் யார் அவள் யாரோ

ஊர் பேர்தான் தெரியாதோ

சலவைக் கல்லே சிலையாக
தங்கப் பாளம் கையாக
மலர்களில் இரண்டும் விழியாக
மயங்க வைத்தாளோ ஓஓ

யார் யார் யார் அவள் யாரோ

ஊர் பேர்தான் தெரியாதோ

முத்து மணிதிரள் ரத்தினமோ
மொய்குழல் மேக சித்திரமோ
முத்து மணிதிரள் ரத்தினமோ
மொய்குழல் மேக சித்திரமோ

செக்கச் சிவந்த இதழாமே
சிந்தும் புன்னகை மந்திரமோ
செக்கச் சிவந்த இதழாமே
சிந்தும் புன்னகை மந்திரமோ

யார் யார் யார் அவள் யாரோ

ஊர் பேர்தான் தெரியாதோ

கண்கள் மயங்கும் கண்ணானாள்
பெண்கள் மயங்கும் பெண்ணானாள்
கண்கள் மயங்கும் கண்ணானாள்
பெண்கள் மயங்கும் பெண்ணானாள்

நினைவில் மயங்கும் பொருளானாள்
நிலவில் மயங்கும் இருளானால்
நினைவில் மயங்கும் பொருளானாள்
நிலவில் மயங்கும் இருளானால்

யார் யார் யார் அவள் யாரோ

ஊர் பேர்தான் தெரியாதோ

அஞ்சனம் கொண்டாள் நகை கொண்டாள்
அச்சம் நாணம் மடம் கொண்டாள்
அஞ்சனம் கொண்டாள் நகை கொண்டாள்
அச்சம் நாணம் மடம் கொண்டாள்

மஞ்சள் குங்குமம் மலர் கொண்டாள்
மனதை சேர்த்து ஏன் கொண்டாள்

யார் யார் யார் அவள் யாரோ

ஊர் பேர்தான் தெரியாதோ

யார் யார் யார் அவள் யாரோ

ஊர் பேர்தான் தெரியாதோ

Get this widget | Track details | eSnips Social DNA

2 comments:

கானா பிரபா said...

இரு மென்மையான குரல்களின் சங்கமத்தில் வந்த இனிய பாடல்.

நன்றி ரவி சார்

ராஜேஷ் said...

கோவை ரவி அவர்களே

பாலு அவர்களின் தளத்தில் தங்கள் பங்களிப்பு அற்புதம், பிரமாதம் பிரம்மாண்டம் (சங்கர் படம் போல)
இசையரசியின் தளத்திலும் அதே அளவு பங்களிப்பு இருக்கும் என்பதில்
எள்ளவும் ஐயம் இல்லை
வருக நிறைய தருக


மதுரக்குரலோன் ஸ்ரீனிவாஸும் , இசையரசியும் சேர்ந்து எத்தனையோ இனிய பாடல்களை பாடியிருக்கிறார்கள் அதில் இது மிகவும் சிறப்பான பாடல்..
தந்தமைக்கு நன்றிகள் பல

Post a Comment