எஸ்.பி.பி யின் அபிமான வெள்ளைக்குயில் சுசிலாம்மா.
|
சுசிலாம்மாவை பற்றி நாம் சொல்றதுக்கு முன் டாக்டர் எஸ்.பி.பி. அவர்களை சுசிலாம்மா எப்படி கவர்ந்தார்கள் என்பதை என்னோடு பாட்டு பாடுங்கள் நிகழ்ச்சியில் பல தடவை
குறிப்பிட்டுள்ளார்கள் ரசிகர்கள் அனைவரும் கேட்டிருக்க முடியும். இருந்தாலும் இந்த 2008 புதுவருடத்தில் முதல் தேதியன்று ஒரு பேட்டியில் அவர் சுசில்லாம்மாவை பற்றி குறிப்பிட்டது மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. வெள்ளைக்குயிலின் குரலைப் பற்றி அவர் அப்படி என்னதான்
கூறியிருப்பார்? நீங்களே கேளுங்களேன். இந்த ஒரு நிமிட பதிவையே ராகவன் சாரின் "இசையரசி" தளத்தில் என்னுடைய முதல் பதிவாக பதிந்து உங்கள் மகிழ்ச்சியில் கலந்து கொண்டு நானும் மகிழ்ச்சியடைகின்றேன்.
5 comments:
வாங்க ரவி. இசையரசி வலைக்குழுமம் வரவேற்கிறது. கானா பிரபாவின் சார்பாகவும் ராஜேஷின் சார்பாகவும் உங்களை வரவேற்கிறேன்.
வந்ததும் பாடும் நிலா பாலு அவர்கள் குரலில் இசையரசி பற்றிக் கேட்க வைத்து விட்டீர்கள். நன்றி. :)
ராகவன் சார், வந்தோம்ல சுசீலாம்மாக்கு மரியாதை செய்யாமல் இருந்த்தோம்னா என்ன அர்த்தம்னேன்? இது லேட்டஸ்ட் பிட் ஒலி கோப்பு சார். பாலுஜியை பத்தி இதுல பேசக்கூடாது என்று தான் இருந்தேன் (அதற்கு தான் தனியா தளம் இருக்கே) இருந்தாலூம் என்னால் உடனே முடியல அதனால் உடனடி பதிவாக இது. அப்புறம் கோப்பில் டிஸ்டர்பன்ஸ் இருக்கும் அது ரிலே மிஸ்டேக். கண்டுக்க்காதீங்க சார்.
ரவி சார்
எடுத்த எடுப்பிலேயே ஒலிக்கோப்பு போட்டு அசத்தீட்டீங்க. மிக்க நன்றி
பிரபா சார், உங்க ஊர்ல நடைபெற்ற சிட்னி கான்செர்ட் பற்றியும் 2 வரி சொல்லியிருக்கிறார். ஒரு மணி நேரம் ஓடும் ஒலிக்கோப்பாக பின்னர் பா.நி.பா வில் தனிபதீவாக வழங்கப்படும். அதை கேளுங்க சார். உங்கள் எல்லோரின் வாழ்த்துக்கள் நன்றி.
oru 'blog'a vittu vaikirathu illaingala Ravee sir
Post a Comment