6 comments

"ராகமாலிகா" என்னும் தொலைக்காட்சி இசை நிகழ்வில் நடுவராக இசையரசி பி.சுசீலா மற்றும் இசையமைப்பாளர் ரமேஷ் விநாயகம் கலந்து கொண்டிருந்தார்கள். அதில் ஒரு பாகத்தை இங்கே தருகின்றேன். "அத்தான் என் அத்தான்" என்ற பாடலை இளம் போட்டியாளர் பாடியபோது பி.சுசீலா இந்தப் பாடலின் ஏற்ற இறக்கங்களைச் சொல்லிக் கொடுத்துச் சிறப்பிக்கின்றார்.அப்போது கூடவே ரமேஷ் விநாயகமும் தன் பங்கிற்குக் கொடுக்கும் ஆலோசனையையும் காணொளியில் பார்த்து ரசியுங்கள்.

13 comments

ராணி தேனி திரைப்படம் ஜி.என்.ரங்கராஜன் இயக்கத்தில் 1982 இல் வெளிவந்திருந்தது. பாடகர் தீபன் சக்ரவர்த்தியை நாயகனாக்கி விஷப்பரீட்சை செய்திருந்த அந்தப்படத்தில் நாயகியாக மகாலஷ்மி நடித்திருப்பார். முன்னர் கல்யாணராமன் என்ற மெகா மசாலா வெற்றியைக் கொடுத்த இயக்குனர் என்ற நன்றிக்கடனுக்காக வை.ஜி.மகேந்திரனுடன் ஒரு துணை நடிகர் லெவலுக்கு கமலஹாசன் நகைச்சுவைப் பாத்திரம் ஏற்று நடித்திருந்தார். அதே நன்றிக்கடனை ஜி.என்.ரங்கராஜனுக்காக மகராசன் படத்திலும் கமல் செய்து கொ(கெ)டுத்தவர்.

"என்ன சொல்லி நான் எழுத, என் மன்னவனின் மனம் குளிர" என்ற அருமையான பாடல் இந்த ராணி தேனி திரைப்படத்தில் இசையரசி பி.சுசீலாவின் குரலில் என்றுமே கேட்பதற்கு இனியதொரு பாடலாக இருக்கின்றது. பாடல் இசை: இசைஞானி இளையராஜா.
இப்பாடலை வீடியோவாக வலையேற்றி உங்கள் ரசனைக்காகத் தருகின்றேன். கண்டு ரசியுங்கள்.

பாடல் வீடியோவிற்கான நேரடி இணைப்பு

1 comments


அடுத்த ஒரு போட்டிப்பாடல்
கன்னட பாடல் .. மன்ற நண்பர்கள் கோபம் கொள்ளாமல் இருக்க இதோ சிறிய விளக்கம்

படம்: குரு சிஷ்யரு
இசை: கே.வி.மகாதேவன்
குரல்கள் : ஜானகி, இசையரசி


மன்னன் இன்பத்தில் களிப்புற்றிருக்க, நாட்டையும் மக்களையும்
மறந்திருக்க, இன்ப நிலையில் அவனது ஆசை நாயகி பாடுகிறாள்... மன்னா இந்த மெளனம் சரியா என்னிடம் பேசு இந்த பேதை பெண்ணுக்கு இறக்கம் காட்டு இதை பாடுவது ஜானகி


சவாலாக அரசி பாடுகிறாள் . காவலனே மக்களையும் கடமைகளையும் மறப்பது சரியா இது முறையா இதை பாடுவது இசையரசி

பாடல் நல்ல கர்நாடக ராகமான ஹிந்தோளத்தில் அமைந்துள்ளது
ஸ்வர ஜதியுடன் அழகான போட்டி
கேட்டு கண்டு மகிழுங்கள்

3 comments

சன் டீவியின் பொங்கல் நிகழ்ச்சிகளை ஏற்கனவே வீடியோவில் பதிவு பண்ணி வைத்திருந்து இப்போது தான் போட்டுப் பார்த்தேன். அப்போது இடையில் வந்த சன் செய்திகளில் "இசையரசி பி.சுசீலாவுக்கு" பத்மபூஷன் விருது கிடைத்த செய்தியையும், அவரின் மன உணர்வையும் ஒளித்துண்டமாகக் காட்டியதைப் பார்த்து எங்கள் இசையரசி கூட்டுப் பதிவில் இதை இப்போது உங்களுடனும் பகிர்கின்றேன். இதோ:

1 comments

பாட்டுக்கு பட்டாபிஷேகம்

ஆம் இசையரசி பி.சுசீலா அவர்களுக்கு பத்மபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

தாமதமாக வந்திருந்தாலும் அந்த விருதுக்கு விருதுகிடைத்தது என்றே சொல்லவேண்டும் ஆம் அது இசையிடம் வந்து சேர்ந்துள்ளதே...


இவர் தாதா சாகேப் பால்கே விருதுக்கு தகுதியுடையவர். அதையும் சீக்கிரமே கொடுத்து கெளரவிப்பார்கள் என எதிர்ப்பார்ப்போம்.

இந்த உயரிய விருது பெற்ற இந்த நேரத்தில் அவர் ஒவ்வொரு மொழியிலும் பாடிய முத்தான ஒரு பாடலை தரலாம் என நினைத்தேன்.. இசையரசியின் அந்த மொழி ஆளுமையை கண்டு/கேட்டு ரசிக்க வேண்டும் என்பதே இதன் நோக்கம்
1.
தமிழ் மன்றத்தில் பதிவு செய்தால் முதலில் தமிழ் பாடல்
முத்தான பாடல் என்று சொன்னானே .. தமிழில் எல்லாமே முத்தான பாடல்தானே என்று நீங்கள் கூறுவது என் காதில் கேட்கிறது. பாடல்கள் பல இருந்தாலும் சில பாடல்கள் ஏதோ சில காரணங்களலால் சில பாடல்கள் நம் மனதிற்கு நெருக்கமாக இருக்கும் அப்படி ஒரு பாடல் தான் இது

ஆம் " ஒரு நாள் இரவில் கண்ணுறக்கம் பிடிக்கவில்லை" என்று பணத்தோட்டம் திரையில் அபிநய சரஸ்வதிக்கு இசையரசி பாடிய அருமையான பாடல் ..

படம்: பணத்தோட்டம்
இசை: மெல்லிசை மன்னர்கள்
வரிகள்: கவிஞர் கண்ணதாசன்

இவர் பாடும் விதம் கேளுங்கள் .. தமிழ் இனிது அதை சுசீலாம்மாவின் குரலில் கேட்பது அதைவிட இனிது. கண்ணதாசனின் வரிகளும், மெல்லிசை மன்னர்களின் இசையும் இந்த பாடலை எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடலாக்கியது என்பது 100/100 உண்மை

இதோ பாடலை கண்டு கேட்டு மகிழுங்கள்

oru naal

2.
தமிழ் பாடலை தொடர்ந்து சுந்தர தெலுங்குப் பாடல்


தெலுங்கில் சுசீலா பாடல்கள் தமிழைவிடவும் கூடுதல் ஆதலால் எதை கொடுப்பது என்று யோசித்த வேளையில் அவருக்கு தேசிய விருது பெற்று தந்த "ஆகுலோ ஆகுனை" என்ற* பாடல் தான் நினைவிற்கு
வந்தது. தாசரி நாராயணராவ் இயக்கி நாகேஸ்வரராவ், ஜெயசுதா, ஜெயப்பிரதா நடித்து திரு ரமேஷ் நாயுடு இசையமைத்த படம். யேசுதாஸும் சுசீலாவும் மட்டுமே பாடியிருப்பார்கள். சுசீலாவிற்கும் விருது, யேசுதாஸுக்கும் விருது கிடைத்தது. அத்தனை பாடல்களும் பொக்கிஷங்கள். இன்றும் தெலுங்கு மக்கள் மத்தியில் பிரபலமான பாடலிது. தேவுலபள்ளி கிருஷ்ணா சாஸ்த்ரியின் வரிகளை பாராட்டாமல் இருக்க முடியாது

படம்: மேகசந்தேசம்
இசை: ரமேஷ் நாயுடு

இதோ பாடலை கண்டு கேட்டு மகிழுங்கள்





3.கடவுளின் சொந்த பூமிக்கு வருவோம் ஆம் மலையாளம் ..

மலையாள உலகிற்கு சுசீலாவை அறிமுகம் செய்தவர்
தக்ஷிணாமூர்த்தி சுவாமிகள் ஆனாலும் மலையாள உலகிற்கு சுசீலாவின் குரலில் பல அற்புத காணங்களை உருவாக்கியவர் மலையாள இசையுலகின் தேவகான ராஜா திரு தேவராஜன் மாஸ்டர் அவர்கள். தேவராஜன் வயலார் சுசீலா கூட்டணி மலையாளிகளலால் என்றுமே மறக்க முடியாத கூட்டணி.

இந்த கூட்டணியின் ஒரு சிறந்த பாடல் இதோ

படம்: நதி
இசை: தேவராஜன்
வரிகள்: வயலார் ராமவர்மா





4.கன்னடம் இதிலும் சுசீலாம்மா எத்தனையோ பாடல்கள் பாடியிருக்கிறார்

மிகவும் பிரபலாமான அமுதை பொழியும் நிலவே பாடலை கன்னடத்திலும் சுசீலாம்மா பாட அந்த பாடல் காலத்தால் அழியா பாடலானது

இதோ அந்த பாடல்

8 comments



நெஞ்சில் ஓர் ஆலயம் என்ற படத்தில் கண்ணதாசன் வரிகளில் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களின் இசையமைப்பில் அமைதியான அழகான முத்தான உச்சரிப்பில் சுசீலாம்மாவின் ஓரு பாடல் என்மனதை கொள்ளை கொண்ட பாடல்களில் இதுவும் ஒன்று நீங்களூம் கேளூங்கள்.

Get this widget | Track details | eSnips Social DNA





தென் இந்தியாவின் லதாமங்கேஷ்கர் என்று திரு எஸ்.பி.பி அவர்களால் வர்ணிக்கப்பட்ட பி.சுசீலாம்மாவுக்கு இந்தியாவின் மிகப்பெரிய கவுர விருதான “பத்மபூஷன்” விருது வழங்கியிருப்பது. இசைப் பிரியர்களான நம் அனைவருக்கும் மிகப்பெருமை. அவரது இனிமையான குரலின் அடிமைகளில் அடியேனும் ஒருவன். பத்மபூஷன் சுசீலாம்மாவை வாழ்த்த வயதில்லையென்றாலும் அவர் நீடுழி வாழ வாழ்த்தி வணங்குகிறேன்.

போடோ உபயம்: நன்றி பி.சுசீலாம்மா தளம், மற்றும் லக்‌ஷ்மன் ஸ்ருதி தளம்.


Get this widget | Track details | eSnips Social DNA


சுசிலம்மாவின் அழகான உச்சரிப்புக்கு மற்றுமொரு அத்தைமகள் ரத்தினத்தை என்ற பாடல் பணக்காரகுடும்பத்தில், கண்ணதாசன் வரிகளில் எம்.எஸ்.விஸ்வநாதனின் இசையமிப்பில் என் மனதை மயக்கும் இந்த பாடலையும் அவர் பாதங்களில் உங்கள் சார்பாகவும் இசைப்பூக்களாக சமர்ப்பித்து வணங்குகிறேன்.

10 comments

"இங்கேயும் ஒரு கங்கை" திரைப்படம், முரளி மற்றும் தாரா (பின்னாளில் கன்னடப் படவுலகில் பின்னிய அதே தாரா) நடிக்க, மணிவண்ணன் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம். இளையராஜாவின் இசையில் மணிவண்ணன் இயக்கிய எல்லாப் படங்களிலும் எல்லாப் பாடல்களுமே பெரிதாகப் பேசப்படாவிட்டாலும், நூறாவது நாள் படத்தில் வரும் "விழியிலே", தீர்த்தக்கரையினிலே படத்தில் வரும் "விழியில் ஒரு கவிதை", முதல் வசந்தம் திரையில் வரும் "ஆறும் அது ஆழமில்ல" வரிசையில் வருவது தான் இந்த இங்கேயும் ஒரு கங்கை திரைப்பாடலான "சோலை புஷ்பங்களே" என்ற பாடல்.

இசையரசி சுசீலாவுடன், இணைந்து பாடியிருக்கின்றார் கங்கை அமரன். இளையராஜாவைப் பொறுத்தவரை தன் தம்பி கங்கை அமரன் இயக்கிய படங்களில் கூட அதிகம் வாய்ப்புக் கொடுத்ததில்லை. கங்கை அமரனுக்கு கிடைத்த மிகச் சிறந்த பாடல்களில் இது தான் என் தெரிவில் மிகச் சிறந்தது என்பேன். கூடவே சுசீலா அம்மாவும், அமரனோடு சேர்ந்து ஒரே நீரோட்டத்தில் கலந்து பாடுவது மனசுக்குள்ளுள் கங்கை போல பிரவாகிக்கின்றது. காதல் சோகம் மட்டுமல்ல, இடிந்து உட்கார்ந்திருக்கும் எந்த மனசுக்கும் இந்தப் பாடல் ஓர் ஒத்தடம்.



Get this widget | Track details | eSnips Social DNA