இசையரசி எத்தனையோ பாடல்கள் பாடியிருக்கின்றார்கள். கந்தன் மீதும் கண்ணன் மீதும் அம்மன் மீதும் ஈசன் மீதும்..எத்தனையெத்தனை பாடல்கள். முதற்பாடலாக எனக்குப் பிடித்த முருகன் பாடலை நான் கொடுக்க விரும்புகிறேன்.

கந்தன் கருணை. படத்தின் பெயர் மட்டுமல்ல..படத்தின் இசையமைப்பாளருக்குக் கிடைத்ததும். ஆமாம். இந்தப் படத்திற்காக அவர் தேசிய விருது பெற்றார். அவர்தான் கே.வி.மகாதேவன்.

சொல்லச் சொல்ல இனிக்குதடா என்ற இந்த அருமையான பாடலை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மகிழ்கிறேன்.



அன்புடன்,
கோ.இராகவன்

13 comments:

CVR said...

சொல்ல சொல்ல அவங்களுக்கு இனிக்குதோ இல்லையோ.அவங்களோட இனிமையான குரலில் அழகு முருகன் பெயரை கேட்பதற்கு எவ்வளவு இனிமையாக இருக்கிறது நமக்கு!!
முதல் பாடலுக்கு நல்ல பாடல் தேர்வு ஜிரா!! :-)

G.Ragavan said...

// CVR said...
சொல்ல சொல்ல அவங்களுக்கு இனிக்குதோ இல்லையோ.அவங்களோட இனிமையான குரலில் அழகு முருகன் பெயரை கேட்பதற்கு எவ்வளவு இனிமையாக இருக்கிறது நமக்கு!!
முதல் பாடலுக்கு நல்ல பாடல் தேர்வு ஜிரா!! :-) //

நன்றி சிவிஆர். அந்தப் பாட்டு அம்மா மகனோட பெருமையப் பாடுற மாதிரி அமைந்த பாட்டு. பராசக்தியே இப்படிப் பெருமையோட "ஈன்ற பொழுதினிலும் பெருதுவக்கும் தன் மகனைச் சான்றோன் எனக் கேட்ட" தாயாகப் பாடுவது என்றால் எளிதல்ல. நல்ல மெட்டு. நல்ல இசை. நல்ல கவிதை. இவையனைத்திற்கும் பொருத்தமான குரல். அதனால்தான் நாம் பிறப்பதற்கெல்லாம் பல ஆண்டுகளுக்கு முன்னால் வந்த இந்தப் பாடலையும் நினைவில் வைத்திருக்கிறோம்.

வல்லிசிம்ஹன் said...

நேற்றுத்தான் கந்தன் கருணை படம் வீடியோவில் பார்த்தோம்.

இனிக்குதடானு சுசீலா சொல்லும்போதே இனிப்பாக இருக்கும்.
நல்ல பொழுது முருகனை நினைக்கும் பொழுது.

Anonymous said...

எங்கே எனது மறுமொழி ....missing...haiya!

G.Ragavan said...

// துர்கா|†hµrgåh said...
எங்கே எனது மறுமொழி ....missing...haiya! //

மமா, இந்தப் பாட்டுக்கு மறுமொழி வரலையே...வந்தா நான் வெச்சுக்கிட்டு என்ன செய்யப் போறேன்!

VSK said...

முருகனை எவர் பாடினாலும் அழகு!

அதுவும் தாயே பாடினால்..... கேட்கவா வேண்டும்!

அருமையான பாடலை இட்டு அகமகிழ வைத்தமைக்கு நன்றி, ஜி.ரா.

TBR. JOSPEH said...

ஆஹா... அருமையான பாட்டு..

எம்மதத்தினரையும் கவர்ந்திழுக்கக் கூடிய குரல்..

இதே மெட்டில் ஒரு கிறிஸ்த்துவ பாடலும் இருந்தது...

G.Ragavan said...

// VSK said...
முருகனை எவர் பாடினாலும் அழகு!

அதுவும் தாயே பாடினால்..... கேட்கவா வேண்டும்!

அருமையான பாடலை இட்டு அகமகிழ வைத்தமைக்கு நன்றி, ஜி.ரா. //

வாருங்கள் வி.எஸ்.கே. முருகன் பாட்டு இருந்தால் உங்கள் வருகை நிச்சயம். இந்தப் பாட்டு அனைவருக்கும் பிடிக்கும் பொழுது முருகன் என்னும் அழகன் பெயரை ஊனாகக் களிக்கும் நீங்கள் விரும்பாமலா இருப்பீர்கள்.

G.Ragavan said...

// tbr.joseph said...
ஆஹா... அருமையான பாட்டு..

எம்மதத்தினரையும் கவர்ந்திழுக்கக் கூடிய குரல்..

இதே மெட்டில் ஒரு கிறிஸ்த்துவ பாடலும் இருந்தது... //

ஜோசப் சார், நீங்க சொன்னது எனக்குத் தூத்துக்குடி நெனைவலைகளைக் கிளப்பி விட்டுருச்சு.

பழைய பஸ்டாண்டுல (அப்ப அதுதான் இருந்துச்சு)...எங்க போகவும் அங்கதான் போகனும். அங்க பஸ்சுல அடிக்கடி நான் கேட்ட பாட்டுகள் ரெண்டு. சொல்லச் சொல்ல இனிக்குதடா...திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால். அது ஒரு குருட்டுப் பெண்மணி டக்கடக்கன்னு கட்டையைத் தட்டிக்கிட்டே பாடுவாங்க. அந்தம்மா கண்டிப்பா இசை படிச்சிருக்க மாட்டாங்க. இந்தப் பாட்டை வாசித்திருக்கவும் முடியாது. ஆனா மனப்பாடம் செஞ்சு இசை குன்றாம பாடி சுசீலாவ நம்ம பக்கத்துலயே கூட்டீட்டு வந்திருவாங்க. விளையாடுறோம்னு கூட விளையாடாத வயசுல அந்தப் பாட்டுக அவ்வளவு பிடிச்சிருந்தது. இப்ப பிடிக்காம இருக்குமா?

சார், அந்தக் கிருத்துவப் பாட்டு கிடைக்குமா? அது யார் பாடியது?

நானானி said...

T.M.S. அவர்களுக்கும் சுசீலா அவர்களுக்கும், அவர்கள் உச்சத்திலிருக்கும் போது கிடைத்ததைவிட அதிகமான பேரும்
புகழும் இப்போது கிடைக்கிறது.
மிகவும் மகிழ்ச்சியாயிருக்கிறது!!

Anonymous said...

ராகவன் சார், தாமத மறுமொழிக்கு மன்னிக்கவும். அழகான இனிமையான எனக்கு பிடித்த கடவுள் பாடல். நன்றி. வாஆஆஆஆஆழ்ழ்ழ்ழ்ழ்ழ்த்துக்க்க்க்கள்.

கானா பிரபா said...

arumaiyaana paattu raagavan, thanks

ஜீவி said...

அழகன் முருகனைப் போற்றும் அற்புதமான பாடல் இது.
ஆரம்பமே அசத்தலாக இருக்கிறது.

Post a Comment