இந்தப் பாடல் சற்று அபூர்வமானது என்றுதான் சொல்ல வேண்டும். இளையராஜாவின் இசையில் தாய்மூகாம்பிகை என்ற படத்தில் இடம் பெற்றது. இது ஒரு போட்டிப் பாட்டு. அம்மனே வந்து பாடுவதாக அமைந்த பாடல். அப்பொழுது பாலில் மருந்து கலந்து கொடுத்து விடுகிறார்கள். அம்மன் ஊமை மாதிரி நடிக்க...ஊமையான அம்மன் பக்தைக்குக் குரல் வந்து விடுகிறது. இப்படிப் போகிறது பாடல்.
அம்மனாக கே.ஆர்.விஜயா. அவருக்குப் பாடியது இசையரசி. அம்மன் அருளால் குரல் எடுத்துப் பாடுவது சரிதா. அவருக்குக் குரல் இசைக்குயில் எஸ்.ஜானகி. போட்டிக்கு வந்திருக்கும் மனோரமாவிற்கு எஸ்.ராஜேஸ்வரி. கேட்டுப் பாருங்கள். சிறப்பான பாட்டு.
இசையரசி எந்நாளும் நீயே
உனக்கொடு இணையாரம்மா!
அன்புடன்,
கோ.இராகவன்
Subscribe to:
Post Comments (Atom)
11 comments:
இரண்டு குயில்கள் குரல்கள்...அற்புதம் :)
what a combination!!!
// துர்கா|†hµrgåh said...
இரண்டு குயில்கள் குரல்கள்...அற்புதம் :)
what a combination!!! //
ஆமாம் துர்கா. மிகவும் அருமையான பாடல். இது கேட்கத் திகட்டாத கானம். இசையரசி வலைப்பூவிற்கு உன்னையும் வரவேற்கிறேன்.
அற்புதமான காம்பினேஷன்
ராகவன் மிக நல்ல பாட்டு
பாடலின் முடிவில் சரிதா திடீரென்று பாட ஆரம்பிப்பார். அம்மா.. அம்மா.. என்று தொடங்கும் ஜானகியின் குரல் அற்புதம். இசையமைப்பாளர் சொல்லிக் கொடுத்தது போல பாட லட்சம் பேர் உள்ளனர். ஆனால் பாடலின் சூழ்நிலையை நம் கண் முன்னே நிறுத்த ஜானகியால் மட்டுமே முடியும். கோடிகளில் ஒரு குரல்
வாங்க ஸ்ரீசரண். உண்மைதான். இந்தப் பாடலில் மூன்று பேருக்கும் மூன்று விதமான உணர்ச்சிகள். தெய்வாதீனமாகப் பாடுவது ஒன்று. செருக்கோடு பாடுவது ஒன்று. அந்த தெய்வாதீனத்தால் இசைகொண்டு பாடுவது ஒன்று. எஸ்.ஜானகி அம்மா அம்மா அம்மா என்று பாடிவிட்டு ஆகாரம் பாடும் அழகே அழகே. மிகவும் ரசிக்கும் பாடல். அடிக்கடி இந்தப் பக்கம் வரனும்னு கேட்டுக்கிறேன்.
கண்டிப்பாக ராகவன்..
நானும் இது போல ஒரு பதிவு போடலாம் என்று இருக்கிறேன். எப்படி பாடல்களை பதிவில் சேர்ப்பது என்று சொன்னீர்கள் என்றால் எனக்கு உதவியாக இருக்கும்
நன்றி
// ஸ்ரீசரண் said...
கண்டிப்பாக ராகவன்..
நானும் இது போல ஒரு பதிவு போடலாம் என்று இருக்கிறேன். எப்படி பாடல்களை பதிவில் சேர்ப்பது என்று சொன்னீர்கள் என்றால் எனக்கு உதவியாக இருக்கும்
நன்றி //
நானும் இது தொடர்பாக ஒராண்டாக மண்டையை உடைத்துக்கொண்டிருந்தேன். கடைசியில் மிக எளிமையாக இருக்கிறது. esnipes.com imeem.com போன்ற தளங்களில் ஐடி உருவாக்கிக் கொள்ளுங்கள். பாடலை அங்கு ஏற்றலாம். வலைப்பூவில் இணைக்கத் தேவையான tag தளமே கொடுக்கும்.
நன்றி ராகவன்
நெசமாவே கண்ணுல தண்ணி வரவைக்கிற பாடல்களில் இதுவும் ஒண்ணு.. இரண்டாவது சரணத்துக்குப் பிறகு சுசீலா பாடுவதை நிறுத்தியவுடன், ஜானகி ஆரம்பிப்பார் பாருங்கள்.. முதல் ஐந்து நிமிடங்கள், ராஜேஸ்வரியும், சுசீலாவும் செய்த வித்தைகள் அனைத்தும் ஒன்றுமே இல்லை என்பது போலத் தோன்றும்...
ராகவன், நீங்க வாழ்க...
சுசீலா அம்மாவுக்குக் குரல்வளம் வேறு.
ஜானகியம்மா குரலே வேறு.
இரண்டும் போட்டினு நான் சொல்லமாட்டேன்.
மனசு வராது.
நல்ல பாட்டு.முருகனுக்குப் பிறகு வன அம்மா வந்துட்டாங்க .எங்க கணேசன் எப்போவோ??:-)))
இந்த பாடலைப்பற்றிய என் விளக்கத்தை இங்கே படித்து மகிழுங்கள்
http://www.rakkamma.com/ilaiyaraaja_vaali.phtml?articleid=16
Post a Comment