தமிழ்ல இருக்கு. மலையாளத்துல இருக்கு. வங்காளத்துலயும் இருக்கு. ஆமா. இன்னனக்குப் பாக்கப் போற...அட கேக்கப் போற பாட்டுதான். தமிழ் மலையாளம் புரியுது. மெல்லிசை மன்னரும் இசைஞானியும் இங்கயும் அங்கயும் கொஞ்சம் மாத்தி மாத்திப் போட்டிருக்காங்க. அதுனால இருக்கலாம். ஆனா வங்காளம்?

சலீல் சௌத்ரி பத்திக் கேள்விப்பட்டிருப்பீங்க. அவரு ஒரு வங்காள இசையமைப்பாளர். இந்தி மலையாளம்னு நெறையப் படத்துக்கு இசையமைச்சிருக்காரு. மலையாளத்துல ரொம்பப் பிரபலமான கரையினக்கர போனோரே பாட்டு மானச மைனே வரு பாட்டுக்கெல்லாம் இவர்தான் இசை. நல்ல இசையமைப்பாளர்.

செம்மீன் படம் இவரைக் கேரளத்தில் பிரபலப்படுத்தியது. நிறையப் படங்களுக்கு இசையமைச்சிருக்காரு. வாணி ஜெயராமை மலையாளத்தில் அறிமுகப் படுத்தியதே இவர்தான். இவர் தமிழ்ல ரெண்டு மூனு படத்துக்கு இசையமைச்சிருக்காரு. குறிப்பிட்டுச் சொல்லப் பட வேண்டிய படம் அழியாத கோலங்கள்.

அந்தப் படத்துல உள்ள காலத்தால் அழியாத காதற்பாட்டுதான் இந்தப் பதிவுல பாக்கப் போறோம். ஆமா. ஜெயச்சந்திரன் கூடச் சேந்து இசையரசி பாடிய "பூவண்ணம் போல மின்னும்" பாட்டுதான் அது. அழகிய இனிய காதற் பாட்டு. கேட்டுப் பாருங்க.



இதே மெட்டை மலையாளத்துலயும் வங்காளத்துலயும் சலீல் சௌத்ரி பயன்படுத்தீருக்காரு. மலையாளத்துல ஏதோ ஒரு ஸ்வப்னம் அப்படீன்னு ஒரு படம் 1977ல வந்தது. அந்தப் படத்துல இதே மெட்டு யேசுதாசைப் பாட வெச்சு எடுத்திருக்காரு. அத இங்க கேளுங்க. மலையாளத்துலதான் இந்த மெட்டை முதல்ல போட்டிருக்கனும். ஏன்னா அழியாத கோலங்கள் 1978ல வந்தது.

அத்தோட விட்டாரா...இந்த மெட்டு மேற்கு வங்காளம் வரைக்கும் போயிருக்கு. அந்தர்காட் அப்படீங்குற படத்துல பயன்படுத்தீருக்காரு. 1980ல வந்த அந்தப் படத்துல கிஷோர்குமாரும் லதா மங்கேஷ்கரும் பாடியத இங்க கேளுங்க.

இப்படி மூன்று மொழியில வந்த பாட்ட சோகமான மெட்டுல இசையரசி குரல்ல கேக்கனுமா? இதோ இங்கே.

மூன்று மொழிகள்ளயும் பாட்டைக் கேட்டீங்க. இப்ப கருத்துகளைக் கொட்டுங்க.

அன்புடன்,
கோ.இராகவன்

13 comments:

வல்லிசிம்ஹன் said...

பூவண்ணம் போல மின்னும்..இந்தப் பாட்டும் அதேதான் ராகவன்.
படம் எடுத்தவிதமும் அழகு.
சுசிலா அம்மா குரல் அப்படியே தேன் குழைத்துப் பூசிய பாதையில் நம்மைப் பறக்கவைக்கும்.
நடக்க வைக்கும்,
இரவில் கேட்டால் உறங்க வைக்கும். மிகவும் நன்றி எல்லா செய்திகளுக்கும்.

சிறில் அலெக்ஸ் said...

அருமையான பாட்டு. செம்மீன் பாடல்கள் சின்ன வய்யசுல எங்க ஊர்ல ரெம்ப கேட்டிருக்கேன். அருமையான பாடல்கள். சலீல் தமிழில் இசையமைச்சிருக்கார்னு எனக்கு தெரியாது.

பூவண்ணம்் ராஜா பாட்டு ப்போலவே இருக்கும். சூப்பர் சாங். சூப்பர் போஸ்ட்.

G.Ragavan said...

// Collapse comments


வல்லிசிம்ஹன் said...
பூவண்ணம் போல மின்னும்..இந்தப் பாட்டும் அதேதான் ராகவன்.
படம் எடுத்தவிதமும் அழகு.
சுசிலா அம்மா குரல் அப்படியே தேன் குழைத்துப் பூசிய பாதையில் நம்மைப் பறக்கவைக்கும்.
நடக்க வைக்கும்,
இரவில் கேட்டால் உறங்க வைக்கும். மிகவும் நன்றி எல்லா செய்திகளுக்கும். //

வாங்க வல்லீம்மா. உண்மைதான் அவங்க குழைவான குரலும் அதற்கு இழைவான ஜெயச்சந்திரன் குரலும் மிகமிக அருமை. அப்படியே மயக்கும்.

G.Ragavan said...

// சிறில் அலெக்ஸ் said...
அருமையான பாட்டு. செம்மீன் பாடல்கள் சின்ன வய்யசுல எங்க ஊர்ல ரெம்ப கேட்டிருக்கேன். அருமையான பாடல்கள். சலீல் தமிழில் இசையமைச்சிருக்கார்னு எனக்கு தெரியாது. //

எண்ணி நாலே படம். கரும்பு. இதுதான் முதப் படம். படம் வரவேயில்லைன்னு நெனைக்கிறேன். இதுல சிலப்பதிகாரக் காணல்வரிகளுக்கு இசையமைச்சிருக்காரு. அதுவும் அவர் ஒரு வங்காளி வேற. அதையும் இசையரசி போஸ்ட்ல போடனும். அடுத்து பருவராகம். இது ஒரு மலையாளப்படத்தோட டப்பிங். அடுத்ததுதான் அழியாத கோலங்கள். அதுக்கப்புறம் தூரத்து இடிமுழக்கம். உள்ளமெல்லாம் தள்ளாடுதேன்னு ஒரு அருமையான பாட்டு உண்டு.

// பூவண்ணம்் ராஜா பாட்டு ப்போலவே இருக்கும். சூப்பர் சாங். சூப்பர் போஸ்ட். //

ரொம்ப நல்ல பாட்டுங்க. மலையாளத்துலயும் வங்காளத்துலயும் கேளுங்க. அப்புறம் தமிழ்ல கேளுங்க....அடடா!

கானா பிரபா said...

வார இறுதியில் கேட்டு அனுப்பவிக்கணும்னு வச்சிருந்த பதிவு இது.

ஆஹா பாட்டக் கேட்கும் போதே மெய்சிலிர்க்கின்றது. அருமையான பாடல்கள். இதே மாதிரி, அழியாத கோலங்கள் படத்தின் இன்னொரு பாட்டு "நான் என்னும்" என்ற பாட்டு வங்காள கஸல் பாட்டாகவும் ஆனந்த் என்ற ஹிந்திப் பாட்டாவும் வந்திருக்கு.

அருமை.

G.Ragavan said...

// கானா பிரபா said...
வார இறுதியில் கேட்டு அனுப்பவிக்கணும்னு வச்சிருந்த பதிவு இது.

ஆஹா பாட்டக் கேட்கும் போதே மெய்சிலிர்க்கின்றது. அருமையான பாடல்கள். //

ஆமா பிரபா. அருமையான காதற் பாட்டு. கேட்கச் சுகம்.

// இதே மாதிரி, அழியாத கோலங்கள் படத்தின் இன்னொரு பாட்டு "நான் என்னும்" என்ற பாட்டு வங்காள கஸல் பாட்டாகவும் ஆனந்த் என்ற ஹிந்திப் பாட்டாவும் வந்திருக்கு.

அருமை. //

நான் என்னும் போது பாட்டா? எஸ்.பி.பி பாடியிருக்காரு. கஸல் டைப் பாட்டுதான். நல்லா மெத்துன்னு இருக்கும்.

வெற்றி said...

இராகவன்,
அருமையான பாடல். பல வருடங்களுக்குப் பிறகு இப்போது உங்கள் புண்ணியத்திலை கேட்டு இரசிக்கும் வாய்ப்புக் கிடைச்சுது. மிக்க நன்றி.

G.Ragavan said...

// வெற்றி said...
இராகவன்,
அருமையான பாடல். பல வருடங்களுக்குப் பிறகு இப்போது உங்கள் புண்ணியத்திலை கேட்டு இரசிக்கும் வாய்ப்புக் கிடைச்சுது. மிக்க நன்றி. //

வாங்க வெற்றி வாங்க. ரொம்ப நாள் கழிச்சி ஒங்க பின்னூட்டங்களைப் பாக்க ரொம்ப சந்தோஷமா இருக்கு. இசையரசி வலைப்பூவில் மொதல்ல பின்னூட்டம் போட்டிருக்கீங்க. தொடர்ந்து ஒங்க ஆதரவு கொடுங்க.

rajesh said...

அழியாத கோலங்கள் − தெரிந்தே தான் இந்த பெயர் வைத்தார்களோ என்னவோ
படத்தில் ஒலிக்கும் இந்த பூவண்ணம் போல நெஞ்சம் பாடல் அழியா கானாமாயிற்று

ஜெயசந்திரன் − சுசீலா ஒரு அற்புத கூட்டணி இந்த குரல்களில் ஒலித்த எத்தனையோ அற்புத பாடல்கள் உள்ளன‌

மஞ்சள் நிலாவுக்கு இன்று ஒரே சுகம்
பூந்தென்றல் காற்றே வா
அலைமகள் கலைமகள்
உதடுகளில் உனது பெயர் ஒட்டிக்கொண்டது

அப்படி சொல்லிக்கொண்டு வரும் வரிசையில் பூவண்ணம் போல நெஞ்சம் பாடலுக்கு தனி இடம் உண்டு
கங்கை அமரனின் வரிகளும், சலீல் செளத்ரியின் இசையும், இந்த இருவரின் குரலிசையில் ஆஹா இதுவல்லவோ பாடல்

தேர்வுக்கு நன்றிகள் பல‌

ஜீவி said...

அன்பு ராகவன்,
தங்கள் பதிவின் சிறப்பு பற்றி எல்லோரும் 'ஒரே குரலில்' பாராட்டி
விட்டார்கள்.
மிக்க நன்றியும், வாழ்த்துக்களும்.

ChicagoCub said...

Poo vannam - is a beautiful melody - and like all of you said - Jayachandran and Suseela were perhaps destined for that song.....the music, the voice...and the picturization.......no words to describe them fully :)))

Good bunch of people here......Thanks to CVR to intro this Blog to me !!

பாரதிய நவீன இளவரசன் said...

Nice post indeed.

'Ullamellam thalladuthey' in Thooraththu Idi Muzhakkam is also a wonderful song. Apart from these songs, I also like his composition in another Malayalam movie MATHANOLSAVAN (Maadapraavae vaa, oru koodu koottaan vaa..), a Kamal starrer.

Salilda also scored music for the Balu Mahendra's Kannada film KOKILA, also a Kamal starrer... could you please give me the link where I could listen the solo sung by S.Janaki in that film? Thanks.

என் மன வானிலே said...

THE TIPS YOU PROVIDE IS VERY INFORMATIVE THAN THE SONGS. HOW YOU GOT ALL THESE TIPS.I ALSO USED TO RECORD MORE TIPS ABOUT TAMIL SONGS.BUT YOU GIVE TIPS FROM OTHER LANGUAGES ALSO.KEEP IT UP.

Post a Comment