மாலை நேரம்,குயில்கள் கூவும் அழகான் ஒலி மெல்லிய குளிர் காற்றோடு கலந்து வர,தேவதை போன்ற பெண் ஒருத்தி தன் காதலனை பற்றி பாடுகிறாள். மிக இனிமையான மெல்லிசை,கவியரசர் கண்ணதாசனின் காலத்தை வெல்லும் வரிகள்,கன்னடத்து பைங்கிளி சரோஜா தேவியின் அழகான முகமும்,அளவான நடிப்பும்.

இதனுடன் இசையரசியின் தெய்வீகக்குரல்!!!ஆஹா!!! எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா என்று தான் சொல்லத்தோன்றுகிறது.

இந்த பாட்டை கேட்கும் போதெல்லாம் என் மனதில் தோன்றும் அமைதியை வார்த்தைகளால் கூற முடியாது. அதே அமைதி உங்கள் மனங்களிலும் நிறம்பட்டும் என்ற வாழ்த்துக்களுடன் இந்த பதிவை உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன் . பாடலை ஒரு முறை கண்டு களித்துவிட்டு,மற்றொருமுறை பாடலை கேட்டுக்கொண்டே வரிகளை படிக்க பாருங்கள். கவி புனைவது மட்டுமில்லாமல் இசைக்கு கச்சிதமாக பொருந்தக்கூடிய பாடலகள் புனைவது திரை இசையில் மிக முக்கியம்.அந்த கலையில் கவியரசர் எந்த அளவுக்கு தேர்ந்திருந்தார் என்பதற்கு இந்த பாடல் இன்னொரு சான்று.
இந்த பாட்டில்

"அருள் மொழி கூறும் பறவைகள் ஒலி கேட்டேன்"
"இரு விழியாலே மாலையிட்டான்"
"யாரும் அறியா பொழுதினிலே அடைக்கலம் ஆனேன் முடிவினிலே"

போன்ற வரிகள் நான் மிகவும் ரசித்தவை.
இனிய இசையில் மயங்கி எழுக!! :-)



படம் - பாலும் பழமும்
இசை - விஸ்வநாதன்- ராம்முர்த்தி
பாடியவர் - பி. சுசீலா

ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன்
அருள் மொழி கூறும் பறவைகள் ஒலி கேட்டேன்
என் இறைவன் அவனே அவனே என பாடும் குரல் கேட்டேன்
உன் தலைவன் அவனே அவனே எனும் தாயின் மொழி கேட்டேன்
ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன்

நிலவும் மாலை பொழதினிலே என் இறைவன் வந்தான் தேரினிலே
நிலவும் மாலை பொழுதினிலே என் இறைவன் வந்தான் தேரினிலே
ஏழையின் இல்லம் இதுவென்றான் இரு விழியாலே மாலையிட்டான்
இரு விழியாலே மாலையிட்டான்
என் இறைவன் அவனே அவனே என பாடும் குரல் கேட்டேன்
உன் தலைவன் அவனே அவனே எனும் தாயின் மொழி கேட்டேன்
ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன்

காதல் கோயில் நடுவினிலே கருணை தேவன் மடியினிலே
காதல் கோயில் நடுவினிலே கருணை தேவன் மடியினிலே
யாரும் அறியா பொழுதினிலே அடைக்கலம் ஆனேன் முடிவினிலே
அடைக்கலம் ஆனேன் முடிவினிலே
என் இறைவன் அவனே அவனே என பாடும் குரல் கேட்டேன்
உன் தலைவன் அவனே அவனே எனும் தாயின் மொழி கேட்டேன்
ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன்
அருள்மொழி கூறும் பறவைகள் ஒலி கேட்டேன்

நன்றி: http://www.tamilnation.org/literature/kannadasan/aalayamani.htm

6 comments:

Unknown said...

hi..cvr - intu kaalaiyil vanthu unkal site open panninal - what a surprise pleasant one hearing this song - it takes me dating long back - when kodaikanal TV channel started, this song was sung by Smt.Susila
manam malaraaga malarnthu thentalil parantu cvr ikku nanti solla varukirathu - good song - thanks for giving - friend

CVR said...

வாங்க சித்தார்த்
//manam malaraaga malarnthu thentalil parantu cvr ikku nanti solla varukirathu/

பாட்டு கேட்டு உங்களுக்கே கவிதை நடையில் பேச்சு வருதா??
அந்த பாட்டு கேட்டாலே அப்படித்தான்!!! :-))
உங்களுக்கு பிடித்திருந்ததில் மகிழ்ச்சி.
வரவுக்கும் பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி!! :-)

ALIF AHAMED said...

வாய்ஸ்ஸும் முடிஞ்சு முக அசைவு கொஞ்சம் லேட்டா வருது

மத்தபடி பழைய பாட்டு பழைய பாட்டுதான்......:)

G.Ragavan said...

அருமையான பாடல். இனிய இசை. கவரும் கவிதை. ஆகையால்தான் பாட்டு கேட்கத் திகட்டாது இருக்கிறது. நினைவு படுத்தியமைக்கு நன்றி.

CVR said...

@மின்னுது மின்னல்
//வாய்ஸ்ஸும் முடிஞ்சு முக அசைவு கொஞ்சம் லேட்டா வருது//

அப்படியா???
எனக்கு ஒழுங்காகத்தானே வருகிறது!! :-)

@ஜிரா
வாய்பளித்ததற்கு நன்றி. உங்களால் எனக்கு பிடித்த மிக அழகிய பழைய தமிழ் திரையிசை பாடல்களை ரசித்து எழுத சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது!!

வல்லிசிம்ஹன் said...

எங்கள் அன்பு சுசிலாம்மாவும் சரோஜா தேவி இணையும் இந்தப் பாட்டு எங்களுக்குப் பள்ளிக்கூடஇடைவேளைப் பாட்டுகளில் ஒன்று .
பாடிப்பாடி மகிழ்வோம். இப்போது கேட்டு மகிழ்கிறேன். மிக்க நன்றி

Post a Comment