பழைய நடிகை விஜயகுமாரியை யாரும் மறந்திருக்க முடியாது. பூம்புகார் திரைப்படத்தில் கண்ணகியாக நடித்ததை இன்றைக்கும் கே.டிவி நினைவுபடுத்திக்கொண்டிருக்கிறதே. அவருக்காக இசையரசி நிறைய பாடல்களைப் பாடியிருக்கிறார் என்றாலும் இந்த ஒரு பாடல் மிகவும் குறிப்பிட்டுச் சொல்லத் தக்கது.

கருநிறமென்பது அழகன்று என்று ஒரு மூடநம்பிக்கை இன்றும் உலகெங்கும் இருப்பதை நாம் அறிவோம். அது ஒரு பெண்ணானால்? அந்த நிறத்திற்காகவே அவள் பழிக்கப்பட்டாள்? இழிக்கப்பட்டாள்? அந்த வேதனனயை என்ன சொல்வாள்?

கருப்பாக இருக்கும் ஆண்டவன் வேண்டும். பெண் வேண்டாமா? அதுதான் அவள் கேட்கும் கேள்வி? அதற்கு விடை இன்றும் நம்மிடையே இல்லை.

நானும் ஒரு பெண் என்ற திரைப்படத்திற்காக சுதர்சனம் இசையில் கவியரசர் கண்ணதாசனின் பாடல் நமக்காக இசையரசி பி.சுசீலா அவர்கள் குரலில் கிடைக்கிறது. கேளுங்கள்.

இந்தப் பாடலையும் தந்து அதை விருப்பமாகவும் வெளியிட்ட நண்பர் கூமுட்டை அவர்களுக்கு நன்றி பல.



அன்புடன்,
கோ.இராகவன்

6 comments:

Anonymous said...

சுசீலா பாடிய பாடல்களில் எனக்கு மிகவும் பிடித்த பாடல். வார்த்தைகளில் உருக்கத்தைக்கொட்டி பாடியிருப்பார்.

துளசி கோபால் said...

அருமையான பாட்டு.கேட்டே ரொம்ப நாளாச்சு.

நம்ம நண்பர் ஒருத்தர் பழைய ஈரோயின்களைப் பத்தி (இந்திப்படம்)

'கோல்ட்டீஸ்...ஓல்டீஸ்' எழுதப்போறதாச் சொல்லிக்கிட்டு இருந்தார்.

அங்கெல்லாம் சட்னு போறதில்லை,இங்கில்லிபீஸ் பதிவுப்பா(-:

கானா பிரபா said...

அருமையான பாட்டு ராகவன், தலைப்பைப் பார்த்ததுமே இதைத் தான் இடுவீர்கள் என்று நினைத்து வந்தேன். ஒளியோடு ஒலியில் கூட இட்டிருக்கலாம்.

G.Ragavan said...

// சின்ன அம்மிணி said...
சுசீலா பாடிய பாடல்களில் எனக்கு மிகவும் பிடித்த பாடல். வார்த்தைகளில் உருக்கத்தைக்கொட்டி பாடியிருப்பார். //

ஆமாங்க. கேக்குறப்பவே நமக்கு ஒரு மாதிரி இருக்கும். ரொம்பவே நல்ல பாட்டு.


// துளசி கோபால் said...
அருமையான பாட்டு.கேட்டே ரொம்ப நாளாச்சு.

நம்ம நண்பர் ஒருத்தர் பழைய ஈரோயின்களைப் பத்தி (இந்திப்படம்)

'கோல்ட்டீஸ்...ஓல்டீஸ்' எழுதப்போறதாச் சொல்லிக்கிட்டு இருந்தார்.

அங்கெல்லாம் சட்னு போறதில்லை,இங்கில்லிபீஸ் பதிவுப்பா(-: //

ஓ இங்கிலிபீசா...அதுலயும் இந்தி ஆண்டீஸ் பத்தியா. விடுங்க ஜூட் :)

ராஜேஷ் said...

ராகவன் .. மிகவும் அருமையான பாட்டு

கண்ணா கருமை நிற கண்ணா பாடலை யாராவது மறக்கமுடியுமா அல்லது அதில் நடித்த விஜயகுமாரியை நினைவில்லாமல் போகுமா

இனம் பார்த்து எனை சேர்க்க மறந்தாய் கண்ணா
நல்ல இடம் பார்த்து சிலையாக அமர்ந்தாய் கண்ணா

கவியரசரின் இந்த வரிகளே பல அர்த்தம் சொல்லும்

நன்றி ராகவன்

Unknown said...

சுசிலா பாட்டுக்கள் எல்லாமே ஒரு விதமான தாலாட்டுதான்... பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி, ராகவன்.

Post a Comment