80 கள் நடிகை ராதிகாவுக்குப் பொற்காலம் என்று தான் சொல்ல வேண்டும். நிறையப் படங்கள் இவரை மையப்படுத்தியே வந்திருந்தன. குறிப்பாக கலைஞர் கருணாநிதியின் வாயால் "கலையரசி" என்ற பட்டத்தையும் பெற்றதோடு அவரின் வசனத்தில் மிளிர்ந்த பல படங்களில் நடித்திருக்கின்றார் ராதிகா. கூடவே எஸ்.ஏ.சந்திரசேகரின் இயக்கத்தில் வெளிவந்தவை தான் பல.



இங்கே ஒலிக்கப் போகும் பாடல் தென்றல் சுடும் என்ற திரையில் இருந்து ஒலிக்கின்றது. கலைஞர் கருணாநிதியின் வசனத்தில் மனோபாலா இயக்கியது இப்படம். "Return to Eden" என்ற அவுஸ்திரேலியத் தொலைக்காட்சித் தொடர் பின்னர் ஹிந்தியில் நடிகை ரேகாவை வைத்து " Khoon Bhari Maang" வெளிவந்திருந்தது. அப்படமே "தென்றல் சுடும்" திரையின் மூலக் கரு.

கதாநாயகி வரிசையில் ராதிகாவைத் தேர்ந்தெடுத்து விட்டு இசையரசி பி.சுசீலாவின் குரலில் ராதிகா நடித்த இரண்டு பாடல்களில் எதை எடுப்பது என்று முதலில் திணறி விட்டேன். முதலில் "நினைவுச் சின்னம்" திரையில் வந்த "ஏலே இளங்கிளியே என்னாசைப் பைங்கிளியே" பாடலை எடுக்கலாமா என்று சபலம் தட்டியது. ஆனால் வெற்றி பெற்றதே "தென்றல் சுடும்" திரையில் வரும் "தூரி தூரி தும்மக்க தூரி" என்ற பாடல்.


இந்தப் பாடல் படத்தில் குழந்தைகளோடு ராதிகா பாடும் சந்தோஷ மெட்டிலும், பின்னர் இழந்த குழந்தைகளை நினைத்துப் பாடும் சோகராகமாக இரு வடிவில் இருக்கும். இங்கே நான் தருவது சோக மெட்டு. வழக்கமாக ராஜா இசையில் வரும் குடும்பப் பாட்டுக்கு விலக்காக புதுமாதிரி கிட்டார் இசையும் வாலியின் வரிகளுமாக குதூகலிக்கும் பாட்டு இது.


இசைஞானி இளையராஜாவின் இசையில் இசையரசி பி.சுசீலா பாடும் இந்த இனிய பாடலைக் கேட்டு மகிழுங்கள். வலையுலக சுட்டிப்பதிவர்களுக்கும் இப்பாடல் சமர்ப்பணம் ;-)
Get this widget | Track details | eSnips Social DNA

14 comments:

Anonymous said...

//லையுலக சுட்டிப்பதிவர்களுக்கும் இப்பாடல் சமர்ப்பணம் ;-)//
ennakaka songs dedicate pannathuku thanksuuu.ennakum intha pathu romba pudikum

கானா பிரபா said...

தங்கச்சி உங்களுக்கு இந்தப்பாட்டு புடிச்சிருந்தா சரி, ஆனா சுட்டிப்பதிவர்களுக்குள் அடக்கமுடியாது ;)

pudugaithendral said...

arumayana paadal

கானா பிரபா said...

வருகைக்கு நன்றிகள் புதுகைத் தென்றல்

G.Ragavan said...

அருமையான பாட்டுங்க. அதென்ன கோடு போட்டாப்புல பாடிருக்காங்க....நானும் இவங்க பாட்டுல பிசிறு கண்டுபிடிச்சிரலாம்னு பாக்குறேன். முடியலையே.

ராதிகாவுக்கு இசையரசி பாடி நெறையப் பாட்டு இருக்கு. நீங்க குறிப்பிட்ட எல்லே இளங்கிளியேயும் அருமையான பாட்டு. அதே மாதிரி...மணமகளே வா படத்தில் வரும் பாட்டும் அருமையாக இருக்கும்.

CVR said...

ராதிகா சுசீலா பாட்டுக்கள்னா எனக்கு முதலிலே நினைவுக்கு வருவது "நானே ராஜா நானே மந்திரி" படத்துல வரும் "மயங்கினேன் சொல்ல தயங்கினேன்" என்ற பாடல் தான்!!
ஆண் பெண் குரல்கள் அழகாக இணைந்து வரும் பாட்டு அது!! ஒரு விட்ட இடத்தில் மற்றொருவர் தொடங்க,அட அட!! சுசீலாவும் ஜெயச்சந்திரனும் கலக்கியிருப்பார்கள்!!

அந்த பாட்டை கேக்கும் போது "ஜவானி திவானி" என்னும் இந்திப்படத்தில் வரும் "ஜானேஜா டூண்ட்தா ஃபிர் ரஹா" என்று வரும் பாடல் தான் நினைவுக்கு வரும்.அதிலும் ஆண் பெண் பாடகர்கள் மிக அழகாக இணைந்து பாடியிருப்பார்கள்!! :-)

கானா பிரபா said...

வணக்கம் ராகவன்

மணமகளே வா படப்பாட்டு சட்டெனேறு ஞாபகத்தில் வரவில்லை. ராஜாவின் இசை என்பது மட்டும் அறிந்திருக்கின்றேன்.

கானா பிரபா said...

//CVR said...
ராதிகா சுசீலா பாட்டுக்கள்னா எனக்கு முதலிலே நினைவுக்கு வருவது "நானே ராஜா நானே மந்திரி" படத்துல வரும் "மயங்கினேன் சொல்ல தயங்கினேன்" என்ற பாடல் தான்!!//

வாங்க சிவிஆர்

அந்தப் பாட்டில் ராதிகாவோடு ஜீவிதாவும் இருந்ததால் சேர்க்கப்படவில்லை. ஆனால் அந்தப் பாடல் எவ்வளவு சிறப்பானது என்பதை என்னைப் போலச் சிறியோன் சொல்லித் தெரியவேண்டியதில்லை.

CVR said...

நீங்க சொல்லுறது சரிதான்,ஆனா அந்த பாட்டுல ராதிகா மட்டும் தான் பாடுவாங்க,ஜீவிதா வெறும் இங்கேயும் அங்கேயும் ஓடுவாங்க!!
அவ்வளவுதான்
:-)

தூரி தூரி பாட்டை விட இந்த பாட்டு எனக்கு ரொம்ப பிடிக்கும்!!

ராதிகா - சுசீலா சிறந்த பாட்டுனா சிப்பிக்குள் முத்து-ல வர்ர "வரம் தந்த சாமிக்கு" பாட்டு தான்,ஆனா அதை ஏற்கெனவே ஜிரா அண்ணாச்சி பதிவிட்டதா சொல்றாரு!! :-)

கானா பிரபா said...

கமெரா கவிஞரே

தப்பு தான், நூறு தோப்புக்கரணம் போட்டுக்கிறேன்.

(ஷோபனாவிலிருந்து ஜீவிதா வரை ஒரு ஆளையும் விடமாட்டங்கப்பா ;-)

CVR said...

அய்யோ!!
ஏன் அண்ணாச்சி பெரிய வார்த்தை எல்லாம் சொல்லுறீங்க!!
நான் சொன்ன பாட்டு டூயட்,ஆனா நீங்க தனி பாடல் போட யோசிச்சிருப்பீங்க!!
அது எனக்கு பிடித்த பாடல் என்று மட்டுமே சொன்னேன்!!
தப்பா நெனைச்சுக்காதீங்க!! :-)

ராஜேஷ் said...
This comment has been removed by the author.
ராஜேஷ் said...

இந்த பாடல் கவிஞர் வாலி அவர்கள் கலையுலகில் 25'ம் ஆண்டு பூர்த்தியான போது எழுதிய பாடல். அவர் தான் தன் முதல் பாடலை பாடிய சுசீலா இதையும் பாடவேண்டும் என்று சொல்ல உடனே இசைஞானி அவர்கள் அதை நிறைவேற்ற நமக்கு கிடைத்த பாடல் இது

(வாலியின் நானும் இந்த‌ நூற்றாண்டும் நூலிலிருந்து)

அருமையான‌ பாட‌ல் தேர்வுக்கு ந‌ன்றி ராக‌வ‌ன்

கானா பிரபா said...

//CVR said...
அய்யோ!!
ஏன் அண்ணாச்சி பெரிய வார்த்தை எல்லாம் சொல்லுறீங்க!!//

தல

உங்க மேல எனக்கெதுக்கு கோபம், தவறு செய்தால் உணர்வது நல்ல பண்பு இல்லையா ;-) அதை தான் செய்தேன்.

//ராஜேஷ் said...
இந்த பாடல் கவிஞர் வாலி அவர்கள் கலையுலகில் 25'ம் ஆண்டு பூர்த்தியான போது எழுதிய பாடல். //

மேலதிக தகவலுக்கு நன்றி ராஜேஷ்

Post a Comment