"தேர் கொண்டு சென்றவன் யாரென்று சொல்லடி தோழி" எத்தனை முறை கேட்டாலும் அலுக்காத மெட்டும், இசையும் கலந்து மனசுக்குள் நர்த்தனமாடும் பாட்டு. சன் டீவியின் சப்தஸ்வரங்கள் போன்ற இசைநிகழ்ச்சிகளில் அதிகம் பாடப்பட்டு அடிக்கடி புதுப்பிக்கப்படும் பாடலும் கூட. நடன நிகழ்ச்சிகள் போன்ற கலைவிழாக்களுக்கு அதிகம் உபயோகிக்கப்படும், உபயோகிக்கப்படக் கூடிய பாங்கில் வடிவமைக்கப்பட்டிருக்கின்றது இவ்வினிய பாடல்.

பாடலின் ஒவ்வொரு வரிகளும் இசையரசியினால் மெருகேற்றப்பட்டு இன்னொரு பாடகியை இப்பாடலுக்கு நிரப்பமுடியா அளவுக்குச் சிறப்பாகச் செதுக்கப்பட்டிருக்கின்றது. உதாரணத்துக்கு

"ஊமைத் தென்றல் வந்து என்னைக் கொல்கிறதே,
கண்களிலே உப்பு மழை பெய்கிறதே"

என்ற வரிகளை அவர் பாடும் கணம் கேட்கும் போது நெஞ்சில் பிரவாகம் அள்ளி வியாபிக்கின்றது. தேர் கொண்டு சென்றவனைத் தன் தோழியிடம் வினாவும் பாங்கை உணர்வுபூர்வமாக வரிகளுக்கு ஏற்ற இறக்கம் கொடுத்துச் சிறப்பித்திருக்கின்றார் இசையரசி பி.சுசீலா. "என்னவொரு வேதனை.....பத்துவிரல் சோதனை" என்று அவர் கனியும் போது தேர் கொண்டு சென்றவனைத் தேடிப்பிடித்துக் கொண்டு வர மனம் பரபரக்கின்றது. வைரமுத்துவின் வைர வரிகள் ஓவ்வொன்றுக்கும் ஓவ்வொரு பொற்காசுகள் (இருந்தால்) கொடுக்கலாம்.


இசைஞானி இளையராஜா இசையில் இசையரசி பி.சுசீலா பாடும் இப்பாடல் "எனக்குள் ஒருவன்" திரையில் இடம்பெற்றதாகும். இத்திரைப்படம் 1984 இல் கவிதாலயா தயாரிப்பில் கமல்,ஸ்ரீபிரியா நடிப்பில் வந்த மறுபிறவிக்கதை. இயக்கம் எஸ்.பி.முத்துராமன்.
சி.வி.ஆர், கோபி போன்ற வாலிபக் குருத்துக்களுக்காக ஒரு தகவல் இப்படத்தில் தான் ஷோபனா தமிழில் அறிமுகமானார்.

இதே பாடலின் மெட்டை மலையாளத்தில் அதே ஆண்டு வெளிவந்த "ஒன்னானு நம்மள்" திரைப்படத்தில் கே.ஜே.ஜேசுதாசை வைத்துப் பாட வைத்திருக்கின்றார் இசைஞானி. அதைப்பற்றி இங்கே வீடியோஸ்பதி பதிவில் குறிப்பிட்டிருக்கின்றேன்.


இன்றைய கதாநாயகி வரிசையில் ஸ்ரீபிரியாவிற்காக அமையும் இப்பாடல் அவருக்கான கன கச்சிதமான தேர்வென்றே நினைக்கின்றேன். அவர் பரத நாட்டியாமாடும் இப்ப படத்தில் அவர் நடித்திருக்கின்றார். எண்பதுகளின் ஆரம்பத்தில் இவர் முன்னணியில் இருந்த காலத்தில் பல பாடகிகள் குரல் கொடுத்திருந்தாலும் பி.சுசீலாவின் குரல் இவரின் குரல் அமைப்புக்கும் ஏற்றதென்றே நினைக்கின்றேன். அன்னை ஓர் ஆலயம் திரையில் வரும் "நதியோரம் நாணல் ஒன்று நாட்டியம் ஆடிடக் கண்டேன்" என்ற ஜோடிப்பாடலும் ஸ்ரீபிரியாவுக்கான பி.சுசீலாவின் இன்னொரு இனிய பாடல். (கஷ்டப்பட்டு வீடியோவை ஓடவிட்டு பதிவுக்காகப் பொருத்தமான இப்பாடலின் screen shot ஐயும் எடுத்துப் போட்டிருக்கின்றேன்)

சரி, இனி தேர் கொண்டு சென்றவனை ரசியுங்கள்.

13 comments:

வவ்வால் said...

கானா,

நல்லப்பாடல்,
இந்தப்படமும் பார்த்து இருக்கேன், பாடலும் கேட்டு இருக்கேன், ஆனால் எனக்கு இப்பாடல் எனக்குள் ஒருவன் என்று பதியாமலே ஏதோ ஒரு படம் என்று இருக்கேன் இத்தனை நாளா? மேகம் கொட்டட்டும் ஆட்டம் உண்டு பாட்டுலாம் எனக்கு தெளிவா நியாபகம் இருக்கு :-))

பிளாஷ் பேக்கில் வரும் இப்பாடலை அவ்வளவாக முக்கியமாக எடுத்துக்கொள்ளவில்லை அப்போது.

Anonymous said...

நம்மோளடா இந்தியாவின் வெள்ளைக்குயில் சுசீலாம்மாவின் குரலில் பலதடவை கேட்டுள்ளேன் நீங்க குறீப்பிட்ட படீ அதில் சந்தேகமே இல்லை பிரபா சார். எனக்கும் அழைப்பிதழ் அனுப்புங்கள் நானும் என் பங்குக்கு வெள்ளைக்குயிலுக்கு மரியாதை செய்கிறேனே ராகவன் சார்ர். அருமையான பதிவு வாழ்த்துக்கள்.

கானா பிரபா said...

நண்பர் வவ்வால்

எனக்கும் நீண்ட நாள் கழித்து ஒரு சப்தஸ்வரங்கள் நிகழ்ச்சி மூலம் தான் இப்பாடல் பரிச்சயமானது.

G.Ragavan said...

// Covai Ravee said...
நம்மோளடா இந்தியாவின் வெள்ளைக்குயில் சுசீலாம்மாவின் குரலில் பலதடவை கேட்டுள்ளேன் நீங்க குறீப்பிட்ட படீ அதில் சந்தேகமே இல்லை பிரபா சார். //

ஆமாம் ரவி. மிகவும் அருமையான பாடல். எனக்கும் மிகவும் பிடிக்கும். பிரபா தேர்ந்தெடுத்து அழகாக பதிவிட்டிருக்கிறார்.

// எனக்கும் அழைப்பிதழ் அனுப்புங்கள் நானும் என் பங்குக்கு வெள்ளைக்குயிலுக்கு மரியாதை செய்கிறேனே ராகவன் சார்ர். //

ஆகா... கண்டிப்பா. விரைவில் எதிர்பாருங்கள். :)

// அருமையான பதிவு வாழ்த்துக்கள்.//

நன்றி ரவி. நானும் இந்த சமயத்தில் பதிவிட்ட பிரபாவுக்கு வாழ்த்துச் சொல்கிறேன்..

CVR said...

நல்ல பாட்டு!!
பதிவிட்டதற்கு நன்றி!! :-)

//சி.வி.ஆர், கோபி போன்ற வாலிபக் குருத்துக்களுக்காக ஒரு தகவல் இப்படத்தில் தான் ஷோபனா தமிழில் அறிமுகமானார்.///

எவ்வளவு முக்கியமான டீட்டெயிலு நோட் பண்ணி சொல்லியிருக்கீங்க!!எங்க தலையே நீங்க தான் அண்ணாச்சி!!! :-D

கானா பிரபா said...

ரவி ,மற்றும் ராகவன்

தங்கள் வருகைக்கு நன்றிகள்

சிவிஆர்

இப்பல்லாம் உங்ககிட்ட தான் நிறையத் தெரியவேண்டியிருக்கு ஆக நீங்க தான் தல ;)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

அருமையான பாடல் காபி அண்ணா.
கண்களிலே உப்பு மழை பெய்கிறதே...ஏஏஏ ன்னு வரும் அந்த கட்டம்...இசையரசியின் ராக சஞ்சாரத்துக்கு ஒரு டச்!

ஒரு கொசுறு தகவல்...
இந்தப் பாடல் ஹம்சத்வனி ராகத்துல சுசீலாம்மா பாடி இருப்பாங்க!
ஒரு அன்னம் (ஹம்சம்) நடந்து வருவது போல் ஒரு ராகம்! அதை சுசீலாம்மா பாடும் போது கேக்கணுமா?
மயிலே மயிலே உன் தோகை எங்கே - பாட்டும் ஹம்சத்வனி தான்! ஆனா அதை வேறு யாரோ பாடி இருப்பாங்க!

முக்கியமான விஷயம்!
ஸ்ரீப்ரியாவின் படத்தைத் தேடிப் போட்ட நீர், ஷோபனாவின் அந்த இளவயது படத்தைப் போடாதது திட்டமிட்ட சதி என்பதைச் சபையில் சொல்லிக் கொள்கிறேன்! :-))

கானா பிரபா said...

வாங்க க.பி.ர.ச (கண்ண பிரான் ரவி சங்கர்)


இந்தப்பாடலின் ராகத்தைத் தந்தமைக்கு நன்றி, ஹம்சத்வனி எனக்குப் பிடித்த பெயர். ஏனென்று கேட்காதீர்கள் ;-)

மயிலே மயிலே பாட்டு எஸ்.பி.பி உடன் ஜென்சி பாடியிருப்பாங்க.

கதாநாயகி வரிசையில் ஷோபனா வரும்போது அழகான படங்கள் வரும் என்பதைத் தெரிவித்து அதுவரை கொலை வெறி ரசிகர்கள் பொறுமை காக்க வேண்டுகிறேன் .

ராஜேஷ் said...

அருமையான பாட்டு

தேர் கொண்டு வந்தவன் யாரென்று
இளையராஜாவின் இசையில் இசையரசியின் குரலில் அழகான பாடல்

ஸ்ரீபிரியாவிற்கு இசையரசி நிறைய பாடல்கள் பாடியிருக்கிறார்
அதில் இது ஒரு சிறப்பான பாடல்

கானா பிரபா said...

வருகைக்கு நன்றி ராஜேஷ்

கோபிநாத் said...

அருமையான பாடல்...நன்றி தல ;))

\\//சி.வி.ஆர், கோபி போன்ற வாலிபக் குருத்துக்களுக்காக ஒரு தகவல் இப்படத்தில் தான் ஷோபனா தமிழில் அறிமுகமானார்.///

எவ்வளவு முக்கியமான டீட்டெயிலு நோட் பண்ணி சொல்லியிருக்கீங்க!!எங்க தலையே நீங்க தான் அண்ணாச்சி!!! :-D\\

வழிமொழிகிறேன்...இதுக்கு தான் தல ன்னு சொல்லறது...;)))

கானா பிரபா said...

வாங்க தல

வழிமொழிஞ்சுக்கிட்டே இருங்க ;-))

Anonymous said...

ராகவன் சார்,

//ஆகா... கண்டிப்பா. விரைவில் எதிர்பாருங்கள். :)//

அழைப்பிதழ் கிடைக்கப் பெற்றேன். என்னையும் உங்களில் ஒருவனாக இணைத்துக்கொண்டதற்க்கு நன்றியை எத்தனை தடவை சொன்னாலும் போதாது.

Post a Comment