சமீபத்தில் குமுதம் வாரயிதழில் கேள்விபதில் சொல்லிக் கொண்டிருக்கிறார் வைரமுத்து. அதில் ஒரு கேள்வியில் அவருக்குப் பிடித்த பாடகியான இசையரசி பி.சுசீலா அவர்களைப் பற்றிச் சொல்லும்படிக் கேட்டிருக்கிறார்கள். அதற்கு அவர் கொடுத்த விடை இங்கே.



இதோ வைரமுத்து எழுதி இசையரசி பாடிய ஒரு பாடல். வி.எஸ்.நரசிம்மன் இசையில் அச்சமில்லல அச்சமில்லை என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற மலேசியா வாசுதேவன் உடன் பாடிய ஓடுகிற தண்ணியில என்ற அழகான பாடல்.

அன்புடன்,
கோ.இராகவன்

5 comments:

CVR said...

நல்ல பதிவு ஜிரா
அழகிய தமிழில் இசையரசிக்கு பொற்சித்திரம்!!
கூடவே இனிமையான கிராமிய பாடல் வேறு!!
பதிவிட்டதற்கு நன்றி!! :-)

rajesh said...

ராகவன் மிகவும் அருமையான பதிவு
வைரமுத்து எப்பொழுதும் சுசீலாவை புகழ தவறுவதில்லை

சமீபத்தில் கூட சில நேரங்களில் என்ற திரைப்படத்திற்கு சுசீலாவை பாட அழைத்தவரும் வைரமுத்து தான்

அந்த வகையில் 13 ஆண்டுகளுக்கு பின்னர் இசையரசியை பாட வைத்த பெருமை வைரமுத்துவிற்கும் ஸ்ரீகாந்த் தேவாவிற்கும் சேரும்

வாழ்க சுசீலா

வல்லிசிம்ஹன் said...

வைரமுத்து அல்லவா சொல்லவேண்டும்,சுசீலா அம்மாவைப் பற்றி.!!

எல்லோர் மனதிலும் ஓடும் வார்த்தைகள் அப்படியே இந்தப் பதிலில் இருக்கின்றன. கேள்வி கேட்டவருக்கும் அதப் பிரசுரித்த உங்களுக்கும் நன்றி ராகவன்.

பாடலைக் கேட்ட சந்தொஷம் விலை இல்லாதது. குற்றாலம் கண்முன்னால் வந்துத் துள்ளிப்போயிற்று.

வாசகன் said...

பி.சுசீலா இரண்டாவது இன்னிங்ஸ்

G.Ragavan said...

// rajesh said...
ராகவன் மிகவும் அருமையான பதிவு
வைரமுத்து எப்பொழுதும் சுசீலாவை புகழ தவறுவதில்லை

சமீபத்தில் கூட சில நேரங்களில் என்ற திரைப்படத்திற்கு சுசீலாவை பாட அழைத்தவரும் வைரமுத்து தான்

அந்த வகையில் 13 ஆண்டுகளுக்கு பின்னர் இசையரசியை பாட வைத்த பெருமை வைரமுத்துவிற்கும் ஸ்ரீகாந்த் தேவாவிற்கும் சேரும் //

உண்மைதான் ராஜேஷ். வைரமுத்துவிற்கும் ஸ்ரீகாந்த் தேவாவிற்கும் எனது நன்றிகள்.

நீங்கள் சொன்ன தகவல் தொடர்பான தொடுப்பை வாசகன் கொடுத்துள்ளார்.
// வாசகன் said...
பி.சுசீலா இரண்டாவது இன்னிங்ஸ் //

நன்றி வாசகன்.

Post a Comment