ஒரே பாடல் மொழிகள் வேறு

தாழையாம் பூ முடிச்சு என்ற பாடல் எல்லோருக்கும் நினைவிருக்கும்
லீலாவும்,செளந்தரராஜனும் பாடியது
ஆம் பாகப்பிரிவிணை திரையில் சிவாஜியும்,சரோஜாதேவியும் பாடுவதாக அமைந்த பாடல்


2.அதே படம் தெலுங்கில் சாவித்திரி,என்.டி.ஆர் நடிக்க வெளிவந்தது
தமிழில் ஒலித்த பாடலை தெலுங்கில் சுசீலாவும்,கண்டசாலாவும் பாட‌
இதோ இந்த இனிமையான பாடலை பார்த்து மகிழுங்கள்



3. தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும்
பாகப்பிரிவிணையில் இந்த பாடலுக்கு தனி சிறப்புண்டு
தமிழில் இந்த படத்தில் சுசீலா பாடிய ஒரே பாடல் ஆனால் மிகவும் பிரபலமான பாடலும் இதுவே
கவியரசரின் வரிகளும்,மெல்லிசை மன்னர்களின் இசையும், இசையரசியின் குரலும் அடேயப்பா
கேளுங்கள் கேட்டு மெய் மறந்து போங்கள்


4. இதே பாடலை தெலுங்கிலும் கேளுங்கள்
குரல் : சுசீலா


5.என்னை விட்டு ஓடிப்போக முடியுமா
குமுதம் திரையில் ஒலித்த இந்த பாடல் சீர்காழியார்,சுசீலா குரல்களில் இஒரு அழகான பாடல்
பாடலாசிரியர் மருதகாசிக்கு தங்க காப்பே போடலாம்
அவ்வளவு அருமையான வரிகள்
(எந்தன் அன்னை தந்தை சம்மதித்த பின்னே...அதுவல்லவோ காதல்)
மகாதேவன் அவர்களின் அற்புத இசையும் இந்த பாடலை அருமையான பாடலாக்கியது என்பது 100% உண்மை


5.இதோ அதே பாடல் தெலுங்கில்
பார்த்து கேட்டு மகிழுங்கள்


இது போல வேறு பாடல்கள் அடுத்த பகுதியில்

4 comments:

G.Ragavan said...

ஆகா....மூனு பாட்டுகள். ஆனா ரெண்டு மொழிகள்ள. இசையரசியின் குரலில் தெலுங்கும் இனிக்கிறது.

ஒரு கருத்து. பாகப் பிரிவினைக்குத் தெலுங்கில் இசை விஸ்வநாதன் இல்லையென்று தெரிகிறது. ஆனால் தெலுங்கு இசையமைப்பாளர் அதே மெட்டுகளை எடுத்துக் கொண்டிருக்கிறார். ஆனால் இசைக்கோர்வையில் தமிழில் இருந்த முழுமை தெலுங்கில் இல்லை. இது என்னுடைய கருத்து.

ராஜேஷ் said...

ராகவன் நீங்கள் சொன்னது மிகவும் சரி
சில பாடல்கள் origiநல் போல் இருப்பதில்லை
ஆனால் சில நல்ல பாடல்கள் மற்ற மொழிகளில் வரும் பொழுது அது தம் மொழியிலும் ஒலிக்கட்டுமே என அந்த மொழி இசையமைப்பாளர்கள் நினைப்பதிலும் தவறில்லை

நான் கொடுத்த 3 பாடல்களுமே தமிழில் மிகவும் அருமையான பாடல்கள்
தெலுங்கில் ரசம் கொஞ்சம் குறைவு தான் இருந்தாலும் இனிமையே

G.Ragavan said...

// rajesh said...
நான் கொடுத்த 3 பாடல்களுமே தமிழில் மிகவும் அருமையான பாடல்கள்
தெலுங்கில் ரசம் கொஞ்சம் குறைவு தான் இருந்தாலும் இனிமையே //

இருந்தாலும் ராஜேஷ், அங்கும் இங்கும் மாறாது இனிமை தருவது இசையரசியின் குரல். அந்தக் குரலோடு சேர்ந்த உணர்ச்சி. அந்த உணர்ச்சியில் விளையும் நயம். :)

CVR said...

எனக்கு என்னமோ தமிழ் தெலுங்கு இரண்டிலும் பாட்டு இனிமையாகத்தான் இருந்தது!!!
மிக நல்ல முறையில் ஆராய்ந்து பதிவிட்டிருக்கிறீர்கள் ராஜேஷ்!!
வாழ்த்துக்கள்!!

அதுவும் "தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும்" எனும் பாடல் எனக்கு மிகவும் பிடித்தமான பாடல்!!

வாழ்த்துக்கள்!! :-)

Post a Comment