ஹம்மிங் பல விதம்
பல பாடல்களில் ஆண் ஹம்மிங் கொடுக்க பெண் பாடுவது போலவும்
இல்லையேல் பெண் ஹம்மிங் கொடுக்க ஆண் பாடுவது போலவும் அமைந்த தமிழ் திரைப்பாடல்கள் ஏராளம்

ஹம்மிங் என்றதுமே நமக்கு சட்டென ஞாபகம் வரும் குரல் எல்.ஆர்.ஈஸ்வரி தான்
ஒரு விதமான husky ஹம்மிங் கொடுக்க இவரால் தான் முடியும்

பின்னர் வந்த வசந்தா, சசிரேகா என பலர் ஹம்மிங் முத்திரை பெற்றனர்

இருந்தாலும் இசையரசி சுசீலாம்மாவின் ஹம்மிங் தனி ரகம்..
பாடலின் வரிகளை ஆண் பாடகர் எவ்வளவு உணர்ந்து பாடினாரோ அதே பாவம் இவரது ஹம்மிங்கிற்கு உண்டு
ஆம் சுசீலா ஹம்மிங் செய்த பல பாடல்கள் உண்டு
உதாரணமாக வெள்ளிக் கின்னம் தான்

ஆனால் இங்கே நாம் பேசப்போவது வேறு சில பாடல்களை பற்றி

சுசீலாம்மா தமிழ் தெலுங்கில் நிறைய பாடியிருந்தாலும், கன்னடம் மலையாளம் மொழிகளில் சிறந்த பாடல்களை சுசீலாம்மா பாடியிருக்கிறார்

அப்படி சுசீலாம்மா ஹம்மிங் செய்த மிகவும் சிறப்பான வேற்று மொழிப்பாடல்களையும், தமிழ் பாடல்களையும் பார்ப்போம்

1. மொழி: கன்னடம்
படம்: சானுக்யா
இசை: சத்யம்
குரல்கள் : எஸ்.பி.பாலசுப்பிரமணியம், பி.சுசீலா
பாடல் : மோகினி நவ மோகினி
இந்த பாடலின் தொடக்கமே ஒரு அழகு. சுசீலாவின் துவக்க‌ ஹம்மிங்கை கேளுங்கள் மெய் மறந்து போவீர்கள் பின்னர் பாலுவின் குழைவு அதற்கேற்றார் போல் சுசீலா குழைந்து செய்யும் ஹம்மிங்கும் இந்த பாடலை கன்னட மக்கள் மத்தியின் இன்றும் மறக்க முடியாத பாடலாக்கியிருக்கிறது என்றால் இந்த பாடலின் கம்பீரத்தை என்னவென்று சொல்வது

பாடலை இங்கே கேட்டு உங்கள் கருத்துக்களை கூறவும்

2. மொழி : தெலுங்கு
படம்: ஜெகதீகவீருனி கதா
இசை: பெண்டியாலா நாகேஸ்வரராவ்
குரல்கள் : கண்டசாலா,சுசீலா

ஐனதேமோ ஐனதி ..
என்ற இந்த பாடலின் அழகான தாளக்கட்டும், சுசீலாவின்ஹம்மிங்கும்
கண்டசாலா மாஸ்டரின் குரலும்
சரோஜாதேவியின் அழகும்.. என்ன சொல்வது...
பார்த்து மகிழுங்கள்

பாடலை இங்கே பார்த்து மகிழுங்கள்


3. மொழி: கன்னடம்
படம்: அமர சில்பி ஜக்கான்னாச்சாரி
இசை: எஸ்.ராஜேஸ்வரராவ்
குரல்கள்: பீ.பி.ஸ்ரீனிவாஸ்,சுசீலா
பாடல் : நில்லு நீ நில்லு நீ நீலவேணி

பாடலின் ஸ்ரீனிவாஸ் செய்யும் சங்கதிகளை சுசீலா ஹம்மிங்க்கில் செய்துவிடுவார்
அதுவும் ஒலிதுபா நொலிதுபா என்று ஸ்ரீனிவாஸ் பாட சுசீலாவின் ஹம்மிங்க்கும் இணைய ஆஹா ..
அவ்வளவு அழகு இந்த பாடல்
பாடல்காட்சியில் தோன்றியவர்கள் சரோஜாதேவி,கல்யாண்குமார்

4. இதே பாடல் தெலுங்கிலும் வந்தது
குரல்கள் கண்டசாலா,சுசீலா
இதோ அதையும் கேட்டு மகிழுங்கள்


5.யேசுதாஸ் பாட சுசீலா செய்யும் ஹம்மிங் வித்தைகள் இதோ
குங்குமத்திலகம் தெலுங்கு திரைப்படத்தில்
பாடல் ஆலனகா பாலனகா
பாடலை கேளுங்கள்
http://psusheela.org/audio/ra/telugu/all/aalanaga.ram

6. தமிழிலும் சுசீலா எத்தனையோ ஹம்மிங் செய்திருந்தாலும்
வெள்ளிக்கின்னம் தான் பாடலுக்கு தனி சிறப்பு
இதே படத்தில் சுசீலா பாடிய நாளை இந்த வேளை பார்த்து ஓடி வாவிற்கு தேசிய விருது கிடைத்தது
இந்த பாடலில் ஹம்மிங் மட்டுமே செய்து டி.எம்.எஸ்ஸுடன் ஈடாக பாடலில் தெரிவார் சுசீலா

பாடல் இதோ


பாடல்களை கேட்டு உங்கள் கருத்துக்களை கூறவும்

ராஜ்

3 comments:

G.Ragavan said...

வாங்க ராஜேஷ் வாங்க. அருமையான பாட்டுகளைக் கொட்டிக் குடுத்திருக்கீங்க.

உண்மைதான். ஹம்மிங்குன்னாலே எல்.ஆர்.ஈசுவரி பேருதான் மொதல்ல எல்லாருக்கும் தோணும். இசையரசியும் அருமையான ஹம்மிங்குகள் கொடுத்திருக்காங்க. தமிழ் மட்டுமில்லாம, கன்னடம் தெலுங்குன்னு எடுத்துச் சொல்லீருக்கீங்க. அருமை. அருமை.

CVR said...

அஹா!!!
மொத பதிவுலையே கன்னடம்,தெலுங்குன்னு பல மொழிகள்ள போட்டு தாக்கியிருக்கீங்க!!
பாடல்கள் ஒவ்வொன்னும் சூப்பர்,சுசீலாவின் ஹம்மிங் வரிகள் என எதற்காக இருந்தாலும் கேட்பது சுகமே!! :-)

பாடல்களின் விட்ஜெட்கள் சில இரண்டு முறை வந்திருக்கிறதே!! :-)

அருமையான பதிவு ராஜேஷ்!!
வாழ்த்துக்கள்!! :-)

Anonymous said...

ராகவன் சார், நான் வேலைப்பார்க்கும் இடத்தில் பாடல் கேட்க முடியாது. உங்கள் தளத்திற்க்கு முதல் தடவையாக வந்திருக்கேன். உங்களின் சேவை அபாரம் இந்தியாவின் வெள்ளைகுயில் சுசீலாம்மாவிற்க்கு அருமையான தளம். என் பாராட்டுக்கள். தொடரட்டும் உங்கள் பணி. எல்லா மொழிகள் பாடல்கள் போடுவது ஆச்சரியம் தான்.

சுசீலாம்மாவை பத்தி பாலு சார் (நிறைய சொன்னதில் இது ஒன்று) சொன்னது நீங்க கேட்டிருப்பீங்கன்னு நினக்கிறேன். வட இந்தியாவில் சுசிலாம்மாவை தென் இந்திய லதாமங்கேஷ்கர் என்று சொல்லுவார்களாம். பாலு சார் அதற்க்கு, இல்லையில்லை லதாமங்கேஷ்கர் தென் இந்தியாவின் சுசீலாம்மா என்றாரம்.

Post a Comment