இந்தாம்மா கருவாட்டுக் கூட முன்னால போ
தேனாம்பேட்ட சூப்பர் மார்க்கெட் எறங்கு
நன்னா சொன்னேள் போங்கோ
இந்த மூனையும் கேட்டா ஒங்களுக்கு என்ன நினைவுக்கு வரும்? எனக்கு ஒரு பாட்டு நினைவுக்கு வரும். பஸ் பாட்டு அது.
சிட்டுக்குருவி. அதுதான் படத்தோட பேரு. அந்தப் படத்துல வர்ர "என் கண்மணி உன் காதலி" அப்படீங்குற பாட்டுதான் நான் சொல்றது. இசையரசியும் பாடும் நிலாவும் பாடிய பாட்டு. ரொம்ப அருமையான காதல் பாட்டு.
இந்தப் பாட்டுல ஒரு சிறப்பு என்ன தெரியுமா? கவுண்டர்...இல்ல இல்ல...Counter முறையில உருவான மொதத் தமிழ்ப் பாட்டு இது. புரியலையா? கீழ பாட்டோட சில வரிகளைக் கொடுத்திருக்கேன். படிங்க அத. அப்புறமா விளக்குறேன்.
என் கண்மனி
உன் காதலி
இளமாங்கனி
உனைப் பார்த்ததும்
சிரிக்கின்றதேன்
சிரிக்கின்றதேன்
நான் சொன்ன ஜோக்கைக் கேட்டு நாணமோ
நீ நகைச்சுவை மன்னனில்லையோ
நன்னா சொன்னேள் போங்கோ
என் மன்னவன்
உன் காதலன்
எனைப் பார்த்ததும்
ஓராயிரம்
கதை சொல்கிறான்
கதை சொல்கிறான்
அம்மம்மா இன்னும் கேட்கத் தூண்டுமோ
நீ ரசிக்கின்ற கன்னியில்லையோ
வரிகளைப் படிச்சீங்கள்ள. இதுல 1, 3, 5, 7ன்னு படிச்சா ஒரு பாட்டு. 2, 4, 6, 8ன்னு படிச்சா இன்னோரு பாட்டு. மேல உள்ள வரிகளையே நான் மாத்திக் குடுக்குறேன் பாருங்க. ரெண்டு பாட்டு கிடைக்கும்.
பாட்டு - 1
என் கண்மனி
இளமாங்கனி
சிரிக்கின்றதேன்
நான் சொன்ன ஜோக்கைக் கேட்டு நாணமோ
நன்னா சொன்னேள் போங்கோ
என் மன்னவன்
எனைப் பார்த்ததும்
கதை சொல்கிறான்
அம்மம்மா இன்னும் கேட்கத் தூண்டுமோ
பாட்டு - 2
உன் காதலி
உனைப் பார்த்ததும்
சிரிக்கின்றதேன்
நீ நகைச்சுவை மன்னனில்லையோ
நன்னா சொன்னேள் போங்கோ
உன் காதலன்
ஓராயிரம்
கதை சொல்கிறான்
நீ ரசிக்கின்ற கன்னியில்லையோ
மொத்தமாக் கேட்டாலும் ஒரு பாட்டு. ஆகா ஒன்னுக்குள்ள மூனு. இதப் படம் பிடிக்கிறப்போ பாட்டோட சிறப்பு சிதையாமப் படம் பிடிச்சிருக்காங்க. இந்தச் சுட்டிக்குப் போங்க. பாட்டப் பாக்கலாம். இப்பிடியொரு பாட்டை எழுதுனது யார் தெரியுமா? வேற யாரு? நம்ம வாலிதான். அவருடைய கவிதை வாளி எப்பொழுதும் ஆகாது காலி.
இந்தப் பாட்டுக்கு இளையராஜா இசை. அருமையான இசை. கிட்டத்தட்ட இதே மாதிரி முயற்சி நடிகர் திலகம் நடிச்ச இமயம் படத்துலயும் உண்டு. கங்கை யமுனை இங்குதான் சங்கமம் அப்படீங்குற பாட்டு. மெல்லிசை மன்னர் கவியரசர் கூட்டணி. ஏசுதாசும் வாணி ஜெயராமும் பாடியது. ஆனா அங்க வேற மாதிரி. ஆண் ஒரு வரி...பெண் ஒரு வரி பாடுறதில்லை. ஒரு வரியவே பிச்சி....ஆண் ஒரு சொல்...பெண் ஒரு சொல்னு பாடுறது. நம்ம தமிழுக்குக் கிடைச்ச பெரிய இசையமைப்பாளர்கள் நெறைய செஞ்சிருக்காங்க. அவங்க செஞ்சதப் புரிஞ்சு அனுபவிக்கிற அருமை நமக்குத்தான் இல்லை.
அன்புடன்,
கோ.இராகவன்
Subscribe to:
Post Comments (Atom)
32 comments:
இதே மாதிரி அமைப்புல நம்ம ஞான்ஸ்(எஜெண்டு) ஒரு கவிதை போட்டிருந்தாரு!
Wow! Good!
ராகவன், ரொம்பப் பேருக்கு இந்தப் பாட்டுத்தெரியாதுனு நினைத்தேன்.
ஹீரோவும் ஹீரோயின்ம் வேறு எங்கோ போய்ப் பாடிவிட்டு மீண்டும் புகுந்து கொள்வது போலத் திரை அமைப்பு.,
பாடுகிற மாதிரி இருக்கும்.
தேனாம்பேட்டை சூப்பர் மார்கெட் இறங்குனு குரல் அப்படியே கண்டக்டர் குரல்தான்
அதுதான் இரண்டு பாடல்களாக அமைந்த்து வெகு அழகாகத் தெரிகிறது. மீண்டும் நல்ல செலக்ஷன்.
ம் அதெல்லாம் ஓரு காலம்...
இலங்கை வானொலியில் ஒரு காலத்தில் கலக்கிய பாடல்.
ஒரு பாடல் வரி முடிவதற்குள் அடுத்த வரி ஆரம்பமாகும்.
பாடலை முழுமையாக வரி வரி யாக இரசித்துக்கேட்ட காலமது..
இதற்கு மேலும் எழுதினால் புலம்பலாகிவிடும்... ஒன்றை கவனித்தீர்களா? இந்தப்பாட்டு இன்றும்
கேட்டு இரசிக்கும்படியாகவிருக்கிறது.
இராகவன்,
இந்தப் பாடலைப் பல முறை கேட்டு இரசிச்சிருக்குறேன். ஆனால் இந்தப் பாடலுக்குள்ளை இப்படி ஒரு சங்கதி இருக்கிறதை இப்பதான் தெரிந்து கொண்டேன். ம்ம்ம்...வியப்பாக இருக்கிறது.
மிக்க நன்றி.
// நாமக்கல் சிபி said...
இதே மாதிரி அமைப்புல நம்ம ஞான்ஸ்(எஜெண்டு) ஒரு கவிதை போட்டிருந்தாரு! //
ஆகா...அதுவும் அப்படியா? அது எங்கன்னு தொடுப்பு குடுங்க. பாக்குறோம்.
// சிவபாலன் said...
Wow! Good! //
வாங்க சிவபாலன். ஆமா. இது ரொம்ப நல்ல பாட்டு. கண்டிப்பா எல்லாரும் ரசிப்பாங்க.
தூள் பாட்டுப்பா இது.
இந்த சங்கதி இப்பதான் தெரியும்.
அருமை அருமை! :)
// வல்லிசிம்ஹன் said...
ராகவன், ரொம்பப் பேருக்கு இந்தப் பாட்டுத்தெரியாதுனு நினைத்தேன்.
ஹீரோவும் ஹீரோயின்ம் வேறு எங்கோ போய்ப் பாடிவிட்டு மீண்டும் புகுந்து கொள்வது போலத் திரை அமைப்பு.,
பாடுகிற மாதிரி இருக்கும்.
தேனாம்பேட்டை சூப்பர் மார்கெட் இறங்குனு குரல் அப்படியே கண்டக்டர் குரல்தான்
அதுதான் இரண்டு பாடல்களாக அமைந்த்து வெகு அழகாகத் தெரிகிறது. மீண்டும் நல்ல செலக்ஷன். //
வாங்க வல்லீம்மா...இந்தப் பாட்டு எல்லாருக்கும் தெரியும். ரொம்ப நல்ல பாட்டாச்சே! எப்படி மறக்க முடியும்? ஆமா...தேனம்பேட்டை காமதேனு சூப்பர் மார்க்கெட். இப்பவும் இருக்கு. ஆனா அவ்வளவு கூட்டம் போறதில்லை.
இன்னும் சொல்லனுமா ஜி.ரா, உங்களுக்கே தெரியும் எனக்கு பிடித்த பாடல்களின் தொகுப்புக்கு என் கண்மணி-1,2 ன்னு பேர் வெக்கிற அளவுக்கு பிடிச்ச பாடல் :)
சூப்பரு!!!
எனக்கு ரொம்ப பிடிச்ச பாட்டு இது அண்ணாத்த!!!
பாடலின் வரிகளின் சிறப்பை முன்பஏ அறிந்திருந்தாலும் அதன் பின்னால் உள்ள சூட்சமத்தை இன்றுதான் அறிந்தேன்!! :-)
வீட்டிக்கு போய் பாட்டை பொறுமையா கேக்கறேன்!!
நல்ல பதிவு!! பதிவிட்டதற்கு நன்றி!! :-)
// theevu said...
ம் அதெல்லாம் ஓரு காலம்...
இலங்கை வானொலியில் ஒரு காலத்தில் கலக்கிய பாடல்.
ஒரு பாடல் வரி முடிவதற்குள் அடுத்த வரி ஆரம்பமாகும்.
பாடலை முழுமையாக வரி வரி யாக இரசித்துக்கேட்ட காலமது..
இதற்கு மேலும் எழுதினால் புலம்பலாகிவிடும்... ஒன்றை கவனித்தீர்களா? இந்தப்பாட்டு இன்றும்
கேட்டு இரசிக்கும்படியாகவிருக்கிறது. //
ஆமாங்க. இன்னமும் ரசிச்சு ரசிச்சு கேக்குற மாதிரி இருக்குது. அருமையான பாட்டு. நீங்க பொலம்ப்றதா நெனைக்கலை. சொல்லுங்க. கேக்குறோம்.
// வெற்றி said...
இராகவன்,
இந்தப் பாடலைப் பல முறை கேட்டு இரசிச்சிருக்குறேன். ஆனால் இந்தப் பாடலுக்குள்ளை இப்படி ஒரு சங்கதி இருக்கிறதை இப்பதான் தெரிந்து கொண்டேன். ம்ம்ம்...வியப்பாக இருக்கிறது.
மிக்க நன்றி. //
வெற்றி...இது மாதிரி நெறைய இருக்கு. நம்ம சும்மா கேட்டுட்டுப் போயிர்ரோம். ஆனா நம்ம இசையமைப்பாளர்கள் எவ்வளவு யோசிச்சிருக்காங்க. அத இந்த மாதிரி பதிவுகள்ள சொல்றதும் சந்தோசந்தான்.
// SurveySan said...
தூள் பாட்டுப்பா இது.
இந்த சங்கதி இப்பதான் தெரியும்.
அருமை அருமை! :) //
வாங்க சர்வேசன். நன்றி. நல்ல பாட்டை நீங்கள் ரசிச்சிக் கேட்டதில் மகிழ்ச்சி.
// CVR said...
சூப்பரு!!!
எனக்கு ரொம்ப பிடிச்ச பாட்டு இது அண்ணாத்த!!!
பாடலின் வரிகளின் சிறப்பை முன்பஏ அறிந்திருந்தாலும் அதன் பின்னால் உள்ள சூட்சமத்தை இன்றுதான் அறிந்தேன்!! :-)
வீட்டிக்கு போய் பாட்டை பொறுமையா கேக்கறேன்!!
நல்ல பதிவு!! பதிவிட்டதற்கு நன்றி!! :-) //
சரி தம்பி. வீட்டுக்குப் போய் பாட்டப் பாரு. பாத்துட்டு கருத்து சொல்லு.
பாத்தாச்சு பாட்டை!!!
நம்ம மெட்றாசா இதுன்னு இருக்கு!!!
தேனாபேட்டை எல்லாம் எதோ லோக்கல் டவுன் மாதிரி இருக்கு!!
ஹ்ம்ம்!
நல்ல பாட்டு அண்ணா!!
நன்றி!! :-)
இவ்வளவு அழகான பாட்டை எழுதிய தாடிக்காரரையும் பாராட்டினால் என்ன குறைந்தா போய்விடுவீர். ராகவன் உமது தலையில் ஒரு குட்டு....
ஆம் வாலியின் அழகான வரிகளை என்றும் கேட்டு ரசிக்க முடியும் அதுவும் பாடலின் துவக்கத்தில் இசையரசியின் சிரிப்பும் பின்னர் பாலுவிம், அவரும் செய்யும் குரல் ஜாலங்களும் அடேயப்பா சொல்ல வார்த்தைகள் போதாது.
அந்த கண்டக்டர் குரல் இளையராஜாவின் அண்னன் பாஸ்கரினுடையது
இந்த பாடலின் சிறப்பு நீங்கள் சொன்னது போல பாடலுக்குள் பாடல்
அதே போல் நாலு பேர்கள் பாடுவதாக நமக்கு தோன்றும் அப்படி ஒரு வித்தையை பயன்படுத்தியிருப்பார் ராஜா
சிட்டுக்குருவி கதை,வசனம் மற்றும் பாடல்கள் வாலி
இந்த பாடல் தேர்வுக்கு மிகவும் நன்றி
இந்த பாடலை பற்றிய எனது கட்டுரையை இங்கே படிக்கவும்
Clickhere
பாஸ்கருடன் ஒலிக்கும் மற்றொரு குரல் திரு கோவை பாலு
// rajesh said...
இவ்வளவு அழகான பாட்டை எழுதிய தாடிக்காரரையும் பாராட்டினால் என்ன குறைந்தா போய்விடுவீர். ராகவன் உமது தலையில் ஒரு குட்டு.... //
மன்னிப்பு மன்னிப்பு...எனக்குத் தெரியாதுய்யா...தெரிஞ்சுக்கிட்டா முடியாதுங்குறேன். இப்ப பதிவப் பாருங்க. வாலீன்னு எழுதீட்டேன். :)
// ஆம் வாலியின் அழகான வரிகளை என்றும் கேட்டு ரசிக்க முடியும் அதுவும் பாடலின் துவக்கத்தில் இசையரசியின் சிரிப்பும் பின்னர் பாலுவிம், அவரும் செய்யும் குரல் ஜாலங்களும் அடேயப்பா சொல்ல வார்த்தைகள் போதாது.
அந்த கண்டக்டர் குரல் இளையராஜாவின் அண்னன் பாஸ்கரினுடையது //
ஆகா தகவல்களை அள்ளி விடுறீங்களே...சூப்பர் சூப்பர்
// இந்த பாடலின் சிறப்பு நீங்கள் சொன்னது போல பாடலுக்குள் பாடல்
அதே போல் நாலு பேர்கள் பாடுவதாக நமக்கு தோன்றும் அப்படி ஒரு வித்தையை பயன்படுத்தியிருப்பார் ராஜா
சிட்டுக்குருவி கதை,வசனம் மற்றும் பாடல்கள் வாலி
இந்த பாடல் தேர்வுக்கு மிகவும் நன்றி
இந்த பாடலை பற்றிய எனது கட்டுரையை இங்கே படிக்கவும் //
படிச்சிருவோம். விட முடியுமா?
ராகவன் சார்....சூப்பர் பாட்டு...இந்த பாட்டுக்குள்ள இவ்வளவு விஷயம் இருக்கா !!!!!!
rajesh said...
\\ிட்டுக்குருவி கதை,வசனம் மற்றும் பாடல்கள் வாலி
இந்த பாடல் தேர்வுக்கு மிகவும் நன்றி
இந்த பாடலை பற்றிய எனது கட்டுரையை இங்கே படிக்கவும்\\
உங்க பதிவின் மூலம் இந்த பாட்டை பற்றி மேலும் பல தகவல்கள் கிடைக்கிறது ;-))
மிக்க நன்றி ராகவன் சார் ;-)
இந்தப் பாட்டு நிஜமாவே எனக்குத் தெரியாது. இப்பத்தான் முதல்முதலாக் கேக்கறேன்.
நாங்கள் 'வனவாசம்' செஞ்சப்ப வந்த படமோ?
நான்கூடத் தலைப்பைப் பார்த்துட்டு, 'கூடையிலே கருவாடு' பாட்டுன்னு நினைச்சேன்.
உள்ளெ வந்தா ஒரு 'கவி அரங்கம்' இருக்கு:-)
// ILA(a)இளா said...
இன்னும் சொல்லனுமா ஜி.ரா, உங்களுக்கே தெரியும் எனக்கு பிடித்த பாடல்களின் தொகுப்புக்கு என் கண்மணி-1,2 ன்னு பேர் வெக்கிற அளவுக்கு பிடிச்ச பாடல் :) //
ஒங்க ரசனை எங்களுக்குத் தெரியாதா இளா! குறிப்பா இந்தப் பாட்டு ஒங்களுக்கு ரொம்பப் பிடிக்கும்னு எனக்குத் தெரியுமே ;)
// கோபிநாத் said...
ராகவன் சார்....சூப்பர் பாட்டு...இந்த பாட்டுக்குள்ள இவ்வளவு விஷயம் இருக்கா !!!!!! //
ஆமாம் கோபிநாத், ஒவ்வொரு பாட்டுக்குள்ளயும் ஒவ்வொரு கதை.
// // rajesh said...
\\ிட்டுக்குருவி கதை,வசனம் மற்றும் பாடல்கள் வாலி
இந்த பாடல் தேர்வுக்கு மிகவும் நன்றி
இந்த பாடலை பற்றிய எனது கட்டுரையை இங்கே படிக்கவும்\\
உங்க பதிவின் மூலம் இந்த பாட்டை பற்றி மேலும் பல தகவல்கள் கிடைக்கிறது ;-)) //
ஆமா. அது ராஜேஷ், ராக்கம்மால எழுதுனது. நெறைய தகவல்களை அள்ளி வீசீருக்காரு.
// மிக்க நன்றி ராகவன் சார் ;-) //
என்ன கோபி இது? எனக்கெதுக்கு நன்றி? நான் பாட்ட எழுதல, இசையமைக்கல, பாடல, நடிக்கல, படமா எடுக்கலை...கடத்தேங்காய எடுத்து வழிப்பிள்ளையார்களுக்கு ஒடச்சிருக்கேன். அம்புட்டுதான். :)
//நான் பாட்ட எழுதல, இசையமைக்கல, பாடல, நடிக்கல, படமா எடுக்கலை...கடத்தேங்காய எடுத்து வழிப்பிள்ளையார்களுக்கு ஒடச்சிருக்கேன். அம்புட்டுதான். :) //
இருந்தாலும் எதோ குத்து பாட்டை பத்தி பேசி ஹிட்டை அள்ளிக்கணும்னு நினைக்காம ஒரு அழகான அருமையான பாடலை செலக்ட் செஞ்சு பொறுமையா கூடுதல் விவரங்கள் சேத்து தந்திருக்கீங்களே, அந்த மெனக்கிடலுக்கு நன்றி சொல்ல வேண்டாமா, அதான். நானும் சொல்லிக்கறேன் ஒரு நன்றி.
// CVR said...
பாத்தாச்சு பாட்டை!!!
நம்ம மெட்றாசா இதுன்னு இருக்கு!!!
தேனாபேட்டை எல்லாம் எதோ லோக்கல் டவுன் மாதிரி இருக்கு!!
ஹ்ம்ம்!
நல்ல பாட்டு அண்ணா!!
நன்றி!! :-) //
ஆமா. ஆமா...இது சென்னையில்லை. மெட்ராஸ். பழைய மெட்ராஸ். நான் தவழ்ந்துக்கிட்டிருந்தப்ப இருந்த மெட்ராஸ். நீ பொறந்திருக்கவே மாட்ட. எனக்கு 80ல் இருந்த சென்னை ரொம்பவும் பிடிக்கும். இவ்வளவு நெரிசல் இருக்காது. பேல்பூரீங்குற ஒன்ன...சென்னைக்கு வந்தாத்தான் நாங்கள்ளாம் சாப்பிட முடியும். அப்புறம் தியாகராயாய நகர்ல பாண்டிபஜார்ல இருக்குற கையேந்தி பவன் மொளகா பஜ்ஜி. அடடா! அடடடடா! பழைய ராஜகுமாரி தேட்டர் இருந்துச்சு அங்குட்டு.
// துளசி கோபால் said...
இந்தப் பாட்டு நிஜமாவே எனக்குத் தெரியாது. இப்பத்தான் முதல்முதலாக் கேக்கறேன்.
நாங்கள் 'வனவாசம்' செஞ்சப்ப வந்த படமோ? //
வாங்க டீச்சர். இந்தப் பாட்டைக் கேட்டதில்லையா. நல்ல பாட்டு. இப்பக் கேட்டுட்டீங்கள்ள. எப்படி இருக்கு?
// நான்கூடத் தலைப்பைப் பார்த்துட்டு, 'கூடையிலே கருவாடு' பாட்டுன்னு நினைச்சேன்.
உள்ளெ வந்தா ஒரு 'கவி அரங்கம்' இருக்கு:-) //
ஆமாங்க. இந்தக் கவிஞருங்க இப்பிடித்தான் பாட்டுக்குள்ள விளையாடீருக்காங்க.
அவருடைய கவிதை வாளி எப்பொழுதும் ஆகாது காலி.//
இதென்ன டிராஜேந்தர் வசனம் மாதிரி இருக்கு ;-)
மற்றபடி வழக்கம்போலவே பதிவு சூப்பர்.
ராகவன்!
அன்மையில் வீட்டிலிருக்கும் போது " ஏம்மா கருவாட்டுக் கூடை முன்னாடி போ.." என்ற வசனத்தை விளையாட்டாகச் சொல்ல, பிள்ளைகள் என்னது என்று விசாரிக்க, இந்தப்பாடல் பற்றி விரிவாகச் சொல்லி மகிழ்ந்தேன் அப்போ இந்தப்பாடலை பதிவாக எழுதவேண்டும் என எண்ணியிருந்தேன். நினைத்ததைச் செய்திருக்கின்றீர்கள். மறக்க முடியாத ஒரு பாடல். மற்றும் அனைத்தும் மற்றவர்கள் சொல்லி விட்டார்கள். பதிவுக்கு நன்றி.
சூப்பர் பாட்டு ராகவன் இது. ஏற்கனவே நம்ம 'தல' பதிவுல போட்டதுதான்.
ஒத்தை ஆளு இந்தப் பாட்டைப் பாடணும்னா திண்டாட்டம்! இடைவெளியில்லாம வரிக்கு வரி ஓவர்லேப் செஞ்சு கலக்கிருப்பாங்க.
பாட்டக் கேக்கும்போதே படம் பாக்காட்டியும் பஸ் பயணம் நினைவுக்கு வந்துடும்!
எத்தன தடவ வேணா சவாரிக்குப் போகக்கூடிய பாட்டு இது! :-)
நன்றி
ஆஹா! எவ்வளவு யோசித்து பாட்டு எழுதி இருக்காங்க...
ஆஹா! எவ்வளவு ரசித்து கேட்டிருக்காங்க.....
நானும் தான் இருக்கேனே வெட்டியா...
ராகவன்!
இதுக்குள்ளே இவ்ளோ சமாசாரம் இருக்குதா? அருமையான ஒரு பாடலை மேலும் அருமையாக ரசிக்கவைத்திருக்கிறீர்கள்.
கருவாட்டுக்கூடையிலிருந்து நல்லமணம் வீசியது.
ராகவா!!
நல்ல பாட்டு, அழகான அலசல்,
அது அந்தக் காலப்பாட்டுக்கே உரிய தனித்துவம்.
''கங்கை யமுனை...மிகப்பிடித்த பாடல்....
// tbr.joseph said...
அவருடைய கவிதை வாளி எப்பொழுதும் ஆகாது காலி.//
இதென்ன டிராஜேந்தர் வசனம் மாதிரி இருக்கு ;-) //
ஆகா..கொஞ்சம் எதுகை மோனையோட சொன்னாலே டி.ஆர் மாதிரியா? :)))))))))))
// மற்றபடி வழக்கம்போலவே பதிவு சூப்பர். //
ரொம்ப நன்றி சார்.
// மலைநாடான் said...
ராகவன்!
அன்மையில் வீட்டிலிருக்கும் போது " ஏம்மா கருவாட்டுக் கூடை முன்னாடி போ.." என்ற வசனத்தை விளையாட்டாகச் சொல்ல, பிள்ளைகள் என்னது என்று விசாரிக்க, இந்தப்பாடல் பற்றி விரிவாகச் சொல்லி மகிழ்ந்தேன் அப்போ இந்தப்பாடலை பதிவாக எழுதவேண்டும் என எண்ணியிருந்தேன். நினைத்ததைச் செய்திருக்கின்றீர்கள். மறக்க முடியாத ஒரு பாடல். மற்றும் அனைத்தும் மற்றவர்கள் சொல்லி விட்டார்கள். பதிவுக்கு நன்றி. //
வாங்க மலைநாடான். இதுதான் எண்ணிய முடிதல்னு சொல்வாங்களோ :)))) இந்தப் பாடல் உங்களுக்கும் பிடிக்கும்னு தெரிஞ்சு மகிழ்ச்சி.
// வற்றாயிருப்பு சுந்தர் said...
சூப்பர் பாட்டு ராகவன் இது. ஏற்கனவே நம்ம 'தல' பதிவுல போட்டதுதான். //
ஓ! அப்படியா? ஏற்கனவே இந்தப் பாட்டை நீங்க போட்டுட்டீங்களா! பாக்காம விட்டுட்டேனே
// ஒத்தை ஆளு இந்தப் பாட்டைப் பாடணும்னா திண்டாட்டம்! இடைவெளியில்லாம வரிக்கு வரி ஓவர்லேப் செஞ்சு கலக்கிருப்பாங்க. //
ஆமா ஆமா
// பாட்டக் கேக்கும்போதே படம் பாக்காட்டியும் பஸ் பயணம் நினைவுக்கு வந்துடும்! //
அதே அதே. இந்தப் பாட்டை நான் முந்தியே கேட்டிருக்கேன். ஆனா பாத்தது சமீபத்துலதான். ஆனாலும் இந்தப் பாட்டைக் கேட்டா பஸ்சுதான்.....
// எத்தன தடவ வேணா சவாரிக்குப் போகக்கூடிய பாட்டு இது! :-) //
அப்படியே மறுமொழிகிறேன்.
// வேலு நாயக்கன் said...
ஆஹா! எவ்வளவு யோசித்து பாட்டு எழுதி இருக்காங்க...
ஆஹா! எவ்வளவு ரசித்து கேட்டிருக்காங்க.....
நானும் தான் இருக்கேனே வெட்டியா... //
ஆகா...கைப்புள்ள இருந்தாரு...இப்ப வேலு நாயக்கனும் வந்துட்டீங்களா! "நானும் இருக்கேனே வெட்டியானா?" என்ன அர்த்தம்? நீங்கதான் வெட்டியா? இல்ல வெட்டியா இருக்குறதும் நீங்களா? கொஞ்சம் புரியுறாப்புல சொல்லுங்களேன். :)
// நானானி said...
ராகவன்!
இதுக்குள்ளே இவ்ளோ சமாசாரம் இருக்குதா? அருமையான ஒரு பாடலை மேலும் அருமையாக ரசிக்கவைத்திருக்கிறீர்கள்.
கருவாட்டுக்கூடையிலிருந்து நல்லமணம் வீசியது. //
கருவாட்டுக்கூடைல இருந்து நல்ல மணம்தான வரும்..ஆகா ஆகா...ஆகா...ம்ம்ம்..சீலாக்கருவாடு நெத்திலிக் கருவாரூ..சுறாக்கருவாடு...ம்ம்ம்..ம்ம்ம்..
// யோகன் பாரிஸ்(Johan-Paris) said...
ராகவா!!
நல்ல பாட்டு, அழகான அலசல்,
அது அந்தக் காலப்பாட்டுக்கே உரிய தனித்துவம்.
''கங்கை யமுனை...மிகப்பிடித்த பாடல்.... //
வாங்க யோகன் ஐயா, ஆமா...அந்தக் காலப் பாட்டு. இளையராஜா வந்த புதுசுல இசையமைச்ச பாட்டு. அதுனால இளமையும் துள்ளலும் இனிமையும் எக்கச்சக்கம்.
ஜிரா ரொம்ப நல்ல பாட்டுங்க..எனக்கு பிடிச்ச பாட்டும் கூட
இதே மாதிரி பகல்நிலவு படத்தில ஒரு பாட்டு வரும் ..பூமாலையே தோள் சேரவா! ன்னு ரெண்டு ட்ராக் ஒரே சமயத்தில ..ரெண்டு ரிதம்ல அட்டகாசமான பாட்டு அது...
ராகவன் சார் இப்பத்தான் இந்த தளத்தில் வரமூடிந்தது. அழகான பாடல் அழகான ஆய்வு. சென்னையில் ஓர் நிகழ்ச்சியில் லக்ஷ்மன் ஸ்ருதி நிகழ்ச்சியில் பாலுஜி பாடும் போது கூட பாடும் பாடகருடன் (பெயர் தெரியவில்லை தாடி வைத்த பாடகர்) அவருடன் பாடிக்கொண்டே லூட்டி அடிப்பார் பாருங்கள் கண் கொள்ளா காட்சியாக இருக்கும். என் மனதை கொள்ளை கொண்ட பாடல்களில் இதுவும் ஒன்று. தாமத மறுமொழிக்கு மன்னிக்கவும்.
எண்பதுகளில் (1980-85..,) நான் பள்ளிக்கு செல்லும்போது ரிக்க்ஷவின் படியில் நின்று ஒவ்வரு நண்பர்களின் வீடு வந்ததும் அவர்கள் பெயரை சொல்லி "வீடு வந்தாச்சு இறங்கு " அதே பாணியில் சொல்வேன்.
Post a Comment